Latest Updates
-
Aadi Month Rasipalan 2026: ஆடி மாதத்தில் கோடிகளை குவிக்கப் போகும் 5 ராசிக்காரங்க இவங்க தான்! -
ஜூலை 16-ல் சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், வெற்றியையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் தோற்றம் மட்டுமல்ல ஆன்மாவும் அழகானதாக இருக்குமாம் -
உங்க பல் மஞ்சளா இருக்கா? வெள்ளையாக்க இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
1/2 கப் கடலைப்பருப்பு இருந்தா டக்குனு இந்த குருமாவை செய்யுங்க - இட்லி, தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வாழைப்பழமும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
AC ரிமோட்டில் நீங்கள் செய்யும் இந்த தவறு உங்க கரண்ட் பில்லை தாறுமாறா அதிகரிக்குமாம் - கரெக்ட்டா யூஸ் பண்ணுங்க -
ஜூலை 07-ல் வக்ர புதனால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண கஷ்டம் குறைந்து செல்வம் பெருகும்.. -
தமிழ்நாட்டின் இந்த ஒரு மாவட்டத்தை மட்டும் ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்யவே முடியவில்லையாம் - ஏன் தெரியுமா?
உங்க தலைமுடி எப்படின்னு சொல்லுங்க... உங்களுக்கு என்ன பிரச்னைன்னு நாங்க சொல்றோம்...
தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் பல நேரத்தை செலவு செய்வது வழக்கமான ஒன்று தான்.
தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் பல நேரத்தை செலவு செய்வது வழக்கமான ஒன்று தான். தலை முடியானது ஒருவருடைய அழகை நிர்ணயிக்க முக்கியமானதாகும்.

நமது உடலின் ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் ஏற்படும் பொழுது அதற்கான அறிகுறிகளை நமது தலைமுடி உதிர்தல் , தடிமன் குறைதல் மற்றும் நரைமுடி அதிகம் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் உணர்த்திவிடும்

அறிகுறிகள்
உங்கள் முடியின் தோற்றம், அமைப்பு அல்லது தடிமன் உள்ள மாற்றங்கள் தைராய்டு நோயை ,உடலில் இரும்பு சத்து குறைவு மற்றும் அனிமியா போன்ற அடிப்படை நிலைமைகளின் அறிகுறியாக இருக்கலாம் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

புரதம்
புரதசத்து மிக்க உணவை முடியின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்குவகிக்கிறது . போதுமான அளவு புரதசத்து உடலிற்கு கிடைக்கவில்லை என்றால் முடி இழப்பு அல்லது முடி மெல்லிய தன்மையுடையதாக மாறி எளிதில் உடைந்துவிடும் .

இரும்புச்சத்து
தலை சீவும் பொழுது தலைக்கு குளிக்கும் பொழுது அதிக முடிஉதிர்தல் உடலில் இரும்புச்சத்தின் குறைபாடாகும். இரும்புச்சத்து உடலில் குறைவாக இருக்கும்பொழுது, ரத்தத்திட்டுக்கள் மற்றும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும். உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். அதனால் முடியின் வேர்க்கால்கள் வலுவிழந்து உதிர ஆரம்பிக்கும்.

உயர் ரத்த அழுத்தம்
எளிதில் உடையக்கூடிய முடி உயர் இரத்த அழுத்தம் சோர்வு மற்றும் முதுகு வலி ஆகியவைகளின் அறிகுறியாகும். மருத்துவரை நாடி சரியா மாத்திரைகளையும் உணவு பழக்கத்தியும் கடைபிடிக்க வேண்டும். இல்லையேல் ரத்த அழுத்தமும் முதுகு மற்றும் மூட்டு வலியும் அதிகரிக்க வாய்ப்புண்டு.

பொடுகு
பொடுகு வராமல் பாதுகாத்து முடியைக் கோதுவது மிகவும் அவசியம்.
உச்சந்தலையில் மேல்புறத்தொழில் ஏற்படும் வறட்சி தொற்றே பொடுகு என்று சொல்கிறோம் . மேலும் தலை முடியின் வகையை பொறுத்து, அதற்கு தகுந்த ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும்.

ஆரோக்கியமான தலைமுடி
ஆரோகியமான தலைமுடியை பாதுகாக்க ஆரோக்கியமான உணவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது . பழங்கள் பச்சைகாய்கறிகள் தானியங்கள் புரதம் மிகுந்து மீன் கோழி இறைச்சி நம் உடம்பை ஆரோக்கியமாக வைப்பதுடன் தலைமுடியையும் வலுவடைய செய்யும் . நாம் அதிக நீரை குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும் .முடி உதிர்வு ஏற்பட்டால், சத்து குறைபாடு இருக்கிறதா என்று பரிசோதித்து அறிந்துகொள்ளவேண்டும்

மனஅழுத்தம்
முடி வளர்ச்சியுடன் மிகவும் நெருக்கமான தொடர்புடையது மனமகிழ்ச்சி. மனஅழுத்தம் மற்றும் பதட்டம் நிறைந்த பணியிலோ அல்லது சூழலிலோ இருபது முடியுதிர்வை அதிகரிக்கும். அதனால் மனதுக்கு கொஞ்சம் அழுத்தம் இருப்பது போல் உணர்ந்தால், இசை, புத்தகங்கள் என மனதை அமைதிப்படுத்துங்கள்.

வெப்பம்
அதிகமான வெப்பம் மற்றும் அதிகமான குளிர்ச்சி இவை இரண்டும் தலைமுடியில் நேரடியாக படாமல் இருப்பது முடியின் ஆரோக்கியத்துக்கு வழிசெய்கிறது . தலை முடியை உலரவைக்க ஹேர் டிரையர் போன்ற கருவிகளை பயன்படுத்துவதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் .

புகைபிடித்தல்
புகை பிடித்தல் தலைமுடியின் ஆரோக்யத்திற்கு பெரிய தடையாக இருக்கிறது. முடியின் வேர்க்கால்களில் ரத்த ஓட்டம் செய்வதற்கு புகையிலை மிகப்பெரிய தடையாக இருக்கிறது. புகைபிடிக்கும் பழக்கத்தை தவிர்த்தல் மிகவும் நல்லது.

குளோரின்
நீச்சல் குளங்களை குளிக்கும் பொழுது அந்த நீரில் இருக்கும் clorine தலையில் இருக்கும் எண்ணெய் பசையையும் சத்துக்களையும் அழித்துவிடும். இதனால் முடி சீக்கிரம் உடைத்துப்போடும் தன்மைக்கு மாற்றிவிடும். அதனால் நீச்சலுக்கு பின் நல்ல சுத்தமான தண்ணீரில் மீண்டும் ஒரு முறை முடியை நன்கு அலச வேண்டும்.

சீப்பு
எப்போதுமே தலைமுடியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முடி கொட்டுதலுக்கு முக்கிய காரணமான பொடுகு மற்றும் அரிப்பிலிருந்து இது தடுக்கும். வீட்டில் ஒருவருக்கு பொடுகு இருந்தால் அது மற்றவர்களுக்கும் வருவதற்கான வாய்ப்பு அதிகம். முடிந்தவரை தனி சீப்பு மற்றும் துண்டு பயன்படுத்துவதை பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். மேலும் தலை முடியின் வகையைப் பொறுத்து, அதற்கு தகுந்த ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்த வேண்டும்.

உணவு பழக்கங்கள்
மீன் நிறைய சாப்பிடலாம். அதில் ஒமேகா3 இருப்பதால், முடி வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ளும். வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ள பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடுவது நல்லது. துத்தநாகம் நிறைந்த தானியங்கள், கொட்டைகள், மாட்டிறைச்சி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். அதேபோல் முடி வளர்ச்சிக்கு கால்சியம் மிக அவசியமான ஒன்றாகும். பால், தயிர், நெய் ஆகியவற்றில் இது நிறைந்திருக்கிறது. மேலும் உணவில் அடிக்கடி முட்டை, வைட்டபின் பி12, பயுாட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் உடலுக்குத் தேவையான ஆற்றலும் கிடைக்கும். தலைமுடி உதிர்வது நிற்கும்.



Click it and Unblock the Notifications