Latest Updates
-
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?
என்னது...!! இந்த வீட்டு வைத்தியம் வெள்ளை முடிகளை கலரிங் செய்து மாற்றுகிறதா....!!
இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கு வெள்ளை முடி சிறு வயது முதலே வந்து விடுகிறது.எதற்கு பல காரணங்கள் இருக்கின்றன..!! இருப்பினும் வீட்டில் இருந்தபடியே உங்கள் தலையில் உள்ள வெள்ளை முடிகளை இயற்கையான முறை
வெள்ளை..வெள்ளை....!! தலை முழுக்க வெள்ளையா..!! இந்த சின்ன வயசிலையே இவ்வளவு வெள்ளை முடியா..? அதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றீர்களா..?? உங்கள் அருகில் உள்ளவர்கள் உங்களை கேலி செய்கிறார்களா..? பலவிதமான டைகளை பயன்படுத்தி சோர்ந்து விட்டீர்களா..? நிச்சையும் கவலை வேண்டவே வேண்டாம்.வீட்டில் இருந்தபடியே உங்கள் தலையில் உள்ள வெள்ளை முடிகளை இயற்கையான முறையில் கலரிங் செய்யலாம்.

முக்கிய குறிப்பு...இதில் எந்தவித பக்க விளைவும் இல்லை.ஏனென்றால்,இவை அனைத்துமே இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு தயாரிக்க படுகின்றது. இந்த இயற்கையான கலரிங் முறையை பயன்படுத்தி பாருங்கள்...நீங்களே உங்களை "ப்ப்பா...என்ன அழகூட நாம்மா...!! அப்படினு வாய் பிளப்பிங்கள் ...! மேலும் இந்த நேச்சுரல் கலரிங் உங்கள் முடியை அதிக முடி உதிர்வில் இருந்து காப்பாற்றும்,முடி உடைவதை தடுக்கும்,என்றுமே இளமையான தோற்றத்தையே தரும்.

#1: ஹோம்மேட் ஆயில்
தேவையானவை :-
- தேங்காய் எண்ணெய்
- நல்லெண்ணெய்
- ஆலிவ் எண்ணெய்
- கடுகு
- கருவேப்பில்லை
- நெல்லிக்காய்
- மருதாணி இலைகள்
செய்முறை :-
ஒரு பாத்திரத்தில் 50 ml தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய்,ஆலிவ் எண்ணெய் எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் காய்ச்சவும். பின்பு இன்னொரு கடாயில் 10 gm கடுகு, 20 gm கருவேப்பில்லை,20 gm நெல்லிக்காய்,20 மருதாணி இலைகள் அகியவற்றை எடுத்து கொண்டு அதனை வறண்டு போகும் வரை வதக்கவும்.பிறகு அந்த எண்ணெய் கலவையை இதில் ஊற்றி 10 நிமிடம் சூடு செய்யவும். அதன் பிறகு இதனை காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்து,சூரிய ஒளி படும் இடத்தில் 4 நாட்களுக்கு வைத்து விடவும். இறுதியாக இந்த டப்பாவில் அடியில் எண்ணெய் தேங்கி இருக்கும்.அதனை எடுத்து முடியின் வேர் முதல் அடி வரை தினமும் நன்கு தேய்த்து வர உங்கள் வெள்ளை முடிகள் வந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.

#2: மருதாணி பேஸ்ட் :-
தேவையானவை :-
- மருதாணி இலைகள்
- இண்டிகோ(அவுரி ) பவுடர்
செய்முறை :-
மருதாணியை முதலில் நன்கு பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும் .அதனை தலையில் தடவி 2 மணி நேரம் கழித்து கழுவி விடவும். சிறிது நேரம் கழித்து 100g இண்டிகோ(அவுரி ) பவுடரை மிதமான சூடு தண்ணீரில் சேர்த்து கலக்கி கொள்ளவும். அடுத்து இந்த பேஸ்டை 45 நிமிடம் வரை தலையில் தேய்த்து ஊற வைத்து கழுவி விடவும். இதனை வாரத்திற்கு ஒரு முறை தடவி வரவும். இவ்வாறு செய்தால் உங்கள் முடி நிச்சயம் கரு கருவென்று மாறிவிடும்.

#3: ஹேர் பேக் :-
தேவையானவை :-
- ஆலிவ் எண்ணெய்
- மருதாணி இலைகள்
- கற்றாழை
- கடுக்காய்
- நெல்லிக்காய்
- எலுமிச்சை சாறு
செய்முறை :-
இந்த ஹேர் பேக் தயார் செய்ய முதலில் 50g மருதாணி இலைகள்,20 ml கற்றாழை, 5g கடுக்காய் தோல்,20g நெல்லிக்காய் ஆகியவற்றை நன்கு அரைத்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து முடியில் தடவவும்.
இதற்கு முன்பு ஆலிவ் எண்ணெய்யை தலையில் தடவி 20 நிமிடத்திற்கு பின்பு அதனை கழுவி விட்டு இந்த பேக்கை அப்ளை செய்தால் அழகான பிரவுன் கலர் முடி உங்களுக்கு கிடைக்கும்.

#4: ஆலிவ் எண்ணெய் மசாஜ் :-
தேவையானவை :-
- ஆலிவ் எண்ணெய்
- சிகைக்காய்
செய்முறை :-
முதலில் 20 ml ஆலிவ் எண்ணெய் எடுத்து கொண்டு அதனை முடியின் அடிவேர் வரை 1 மணி நேரம் நன்கு தடவி மசாஜ் செய்யவும். ஆலிவ் எண்ணெய்க்கு முடியை கரு கருவென மாற்றும் தன்மை இயற்கையாகவே இருக்கிறது. அடுத்து முடியை சிகைகாய் தேய்த்து வாரத்திற்கு 2 முறை குளித்து வந்தால் அட்டகாசமான கருமையான முடியை பெறலாம்.

#5: கலவை பேஸ்ட் :-
தேவையானவை :-
- கடுக்காய்
- நெல்லிக்காய்
- மருதாணி இலைகள்
- துளசி
- தயிர்
- டீ டிகாஷன்
- யூக்கலிப்டஸ் எண்ணெய்
- எலுமிச்சை சாறு
- ஆலிவ் எண்ணெய்
செய்முறை :-
இந்த கலவை பேஸ்ட் தயாரிக்க வேண்டுமென்றால் அதற்கு 10g கடுக்காய், 25g நெல்லிக்காய், 200g மருதாணி இலை பவுடர் , 10g துளசி, 100ml தயிர்,100ml டீ டிகாஷன், 2ml யூக்கலிப்டஸ் எண்ணெய், 10சொட்டு எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை இரும்பு பாத்திரத்தில் நன்கு கலக்கி ஒரு இரவு முழுவதும் வைத்து விடவும். அடுத்த நாள் காலையில் அந்த கலவையை எடுத்து தலை முழுவதும் தடவி மசாஜ் செய்து 2 மணி நேரம் கழித்து மிதமான நீரில் கழுவினால் பொலிவான கருப்பு முடியாக வெள்ளை முடிகள் அனைத்தும் மாறும். இந்த கலவை மேலும் முடி வெள்ளையாக மாறுவதை தடுக்கவும் செய்யும்.

#6: இளநரை தடுத்தல்:-
தேவையானவை :-
- கருவேப்பில்லை
- செம்பருத்தி இலைகள்
- கரிசாலை இலைகள்
- கொத்தமல்லி இலைகள்
- எலுமிச்சை சாறு
செய்முறை :-
இந்த செய்முறை உங்கள் முடியை இலை இளநரையில் இருந்து காப்பாற்றும்.அதற்கு கைநிறைய கருவேப்பில்லை, செம்பருத்தி இலைகள்,கரிசாலை இலைகள், கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை எடுத்து கொண்டு, பேஸ்ட் போல அரைத்து கொள்ளவேண்டும்.பின்பு அதனுடன் 5 சொட்டு எலுமிச்சை சாற்றை சேர்த்து முடிகளில் அப்ளை பண்ணவும்.பிறகு 1 மணி நேரம் கழித்து இதனை கழுவி விடவும்.இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் இளநரைகள் காணாமல் போய்விடும்.



Click it and Unblock the Notifications