Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
ஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது? என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்?
ஆண்களுக்கு ஏற்படுகின்ற தலைமுடி மற்றும் வேர்க்கால்கள் அரிப்பை போக்குவதற்கான வீட்டு வைத்திய முறைகள் இங்கே பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
வெயில் காலமோ மழைக்காலமோ அல்லது குளிர்காலமோ எந்த காலமாக இருந்தாலும் நமக்கு இருக்கக்கூடிய மிக முக்கியமான தலைமுடி பிரச்சினை என்றால் அது தலைமுடியின் வேர்க்கால்களில் ஏற்படும் அரிப்பு தான். ஆம். எல்லா பருவங்களிலும் இந்த பிரச்சினை நமக்கு இருக்கும்.
அது நமக்கு மிகவும் எரிச்சலைக் கொடுக்கும். அதிலும் வெளியிடங்களில் சென்றிருக்கும்போது, இதுபோல் தலையில் அரித்துக் கொண்டே இருந்தால் எப்படி அருவருப்பாக இருக்கும். குறிப்பாக இந்த பிரச்சினை பெண்களை விடவும் ஆண்களுக்கே அதிகம் இருக்கிறது.

காரணம்
இந்த மாதிரியான தலைமுடி அரிப்பு என்பது எப்படி உண்டாகிறது என்பதே நம்மால் மிகச் சரியாகக் கணிக்க முடியாது. ஏனென்றால் சிலருக்கு வேர்க்கால்களில் அதிகமாக எண்ணெய் சுரப்பதால் அரிப்பு உண்டாகும். சிலருக்கு பொடுகிளாலும் சிலருக்கு அழுக்கு சேர்வதாலும் ஏற்படும். அதில் ஒவ்வொருவருக்கும் இதனால் பெருங்குழப்பம் தான் உண்டாகும்.

என்ன பயன்படுத்தலாம்?
இந்த தலைமுடி அரிப்பைப் போக்குவதற்கு பெரும்பாலும் நமக்குத் தெரிந்த மிக முக்கியமான காரணம் பொடுகு தான். அதனால் அரிப்பு ஏற்பட்டாலே அதற்கு பொடுகைப் போக்கும் வழிமுறைகளை மட்டும் தான் கையாளுவோம். ஆனால் மற்ற காரணங்களால் ஏற்படுகின்ற அரிப்பைப் போக்க என்ன செய்வது என்பது நமக்குத் தெரியாது. அதற்காக கண்ட ஷாம்புகளையும் வாங்கி அப்ளை செய்து இன்னும் கொஞ்சம் அதிகமாக்கிக் கொள்ளவே செய்வோம்.

வீட்டு சிகிச்சை
இந்த அரிப்பு ஏதாவது உங்களுடைய ஆரோக்கியம் மற்றும் உடல் நலக்குறைவினால் ஏற்பட்டதா அல்லது பேன் இருப்பதன் காரணமாகவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அப்படி இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தி சரிசெய்ய முயற்சி செய்யுங்கள்.

எலுமிச்சை சாறு
எலுமிச்சையில் இயற்கையாகவே ஆன்டி மைக்ரோபியல் தன்மையும் ஆண்டி இன்ஃபிளமேட்டரி தன்மையும் அதிகமாகவே இருக்கிறது. இது தலைமுடி அரிப்புக்கு மிகச் சிறந்த தீர்வாக அமையும். ஒரு பெரிய எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு சிறிய காட்டன் பந்தில் தொட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக தலைமுடியின் வேர்க்கால்களில் ஒத்தி எடுங்கள். 10 முதல் 20 நிமிடங்கள் அப்படியே உலர விட்டுவிட்டு பின்ன்ர் குளிர்ந்த நீரால் அலசுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை செய்து வாருங்கள். உங்களுடைய வேகாக மாற்றங்கள் ஏற்படுவது தெரிய ஆரம்பிக்கும்.
தலையில் ஏதேனும் சிறிய சிறிய புண்கள் இருந்தால் இந்த முறையைத் தவிர்ப்பது நல்லது.

தேங்காய் எண்ணெய்
பெரும்பாலும் தலைமுடியில் எல்லா சமயங்களிலும் உங்களுக்கு அரிப்பு இருந்ததென்றால் அதற்கு மிக முக்கிய காரணம் தலைமுடியின் வறட்சி தான். தலைக்குத் தேவையான ஈரப்பதத்தையும் மாய்ச்சரைஸரையும் கொடுத்தால் போதும், அந்த வகையில் தலைமுடிக்கு மிகச் சிறந்த மாய்ச்சரைஸராக இருப்பது தேங்காய் எண்ணெய் தான் முதல் இடம்.
சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். அதை லேசாக சூடுசெய்து, வேர்க்கால்களில் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் மசாஜ் செய்துவிட்டு, பின்னர் சில மணிநேரங்கள் ஊறவிடுங்கள். பிறகு மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசினால் போதும்.

பேக்கிங் சோடா
இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அளவுக்கு பேக்கிங் சோடாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முடியின் வேர்க்கால்களில் தேய்த்து, 10 முதல் 20 நிமிடங்கள் வரை சிறிது உலர விட்டுப் பின் அலசுங்கள்.
பேக்கிங் சோடாவில் உள்ள ஆண்டி பாக்டீரியல் மற்றும் ஆண்டி ஃபங்கல் பண்புகள் தலைமுடி மற்றும் வேர்க்கால்களின் பிஎச் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.

ஆனியன் ஜூஸ்
சில வெங்காயத்தை எடுத்துக் கொண்டு அதை பிளண்டரில் போட்டு பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த அளவு வேண்டுமோ அந்த அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதை உங்களுடைய முடியின் வேர்க்கால்களில் காட்டன் பாலில் தொட்டு வேர்க்கால்களில் தேய்த்து 20 நிமிடங்கள் உலர விடுங்கள். பின்னர் தலையை அலசுங்கள். வெங்காயம் தலையில் தொற்றுக்கள் உண்டாாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

ஆப்பிள் சீடர் வினிகர்
நான்கு கப் தண்ணீரில் ஒரு கப் அளவுக்கு ஆப்பிள் சீடர் வினிகரைக் கலந்து கொள்ளுங்கள். இதை தலையில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி வேர்க்கால்களில் மசாஜ் செய்யுங்கள். இதில் மாலிக் அமிலம் இருக்கிறது. இந்த வினிகரில் உள்ள ஆண்டி பாக்டீரியல் மற்றும் ஆண்டி ஃபங்கல் தன்மை உங்கள் தலையின் வேர்க்கால்களில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கின்றன.



Click it and Unblock the Notifications












