Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
புருவத்தை திரெட்டிங் செய்வது பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்! தெரிஞ்சுக்க இங்க படிங்க!
அடர்த்தியான, வடிவான, அழகான புருவம் பெற வேண்டும் என்பது எல்லா பெண்களின் மனதிலும் இருக்கும் ஆசை. ஏனெனில், புருவம் சரியாக அமைந்து விட்டால் கண்ணின் அழகு அதிகரிக்கும். முகத்தில் கண் அழகாக இருந்தால் போதும்,
பெண்களுக்கு அடர்த்தியான முடி வளர்ப்பது, அதிலும் அதிக நீளமாக முடியை வளர்ப்பது என்றால் கொள்ளை பிரியம். முடிக்கு தரும் முக்கியத்துவத்தை மூன்று முடிச்சு போட்டவருக்கு கூட தருவதில்லை என்று பல கணவன்மார்கள் குற்றச்சாட்டு கொடுக்கும் அளவிற்கு பெண்களின் முடியின் மீதான மோகம் பெயர் பெற்றுள்ளது. பெண்களுக்கு முடிக்கு அடுத்த படியாக மிகவும் பிடித்த, அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கவனிக்கும் விஷயம் புருவம்.

அடர்த்தியான, வடிவான, அழகான புருவம் பெற வேண்டும் என்பது எல்லா பெண்களின் மனதிலும் இருக்கும் ஆசை. ஏனெனில், புருவம் சரியாக அமைந்து விட்டால் கண்ணின் அழகு அதிகரிக்கும். முகத்தில் கண் அழகாக இருந்தால் போதும், முக அழகே கூடி, முகம் ஒளி பெற்று திகழும். இத்தனை அழகினை அளிக்கக்கூடிய புருவங்களை, திரெட்டிங் முறையில் சீர்திருத்தி எளிதாக - அழகாக மாற்றுவது எப்படி மற்றும் அதில் ஒளிந்திருக்கும் நுணுக்கமான விஷயங்கள் குறித்து இந்த பதிப்பின் உள்ளே சென்று படித்தறிவோம் வாருங்கள்!

புருவ சீர்திருத்தம்
புருவத்தை சீர்படுத்தி ஒரு வடிவாக வளரச் செய்வது தான், இந்த புருவ சீர்திருத்த முறையின் முக்கிய நோக்கம். மேலும் இந்த புருவ சீர்திருத்த முறையில், அதிகமாக முடி வளர்ந்து, காடு போல் புருவத்தில் முடிகள் மண்டி முக அழகைக் கெடுப்பதை மாற்ற இந்த திரெட்டிங் முறை பெரிதும் உதவுகிறது. திரெட்டிங் முறையால் புருவங்களை வில் போன்று வளைத்து, புருவ முடிகளை சீராக வளரச் செய்து, நல்ல அழகிய வடிவத்தை பெறலாம்.

மீண்டும் மீண்டும்!
ஒருமுறை புருவத்தை த்ரெட்டிங் செய்து அழகு படுத்தினால், மீண்டும் மீண்டும் திரெட்டிங் செய்ய வேண்டுமா? என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கும் பொதுவான கேள்வியாகும். கண்டிப்பாக ஒருமுறை திரெட்டிங் செய்தால், முடி அதிகமாக வளரும் போதெல்லாம் மீண்டும் திரெட்டிங் செய்வது அவசியம்.
திரெட்டிங் செய்து முடியின் அடர்த்தி புருவத்தில் குறைந்து விட்டால், அந்த நேரத்தில் இரவு உறங்கச் செல்லும் முன் விளக்கெண்ணெயை புருவத்தில் தடவி விட்டு உறங்க வேண்டும். இது முடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவும். மேலும் புருவத்தினை நீர்ச்சத்து உள்ளதாக வைத்திருக்க வேண்டும்; அதாவது ஈரப்பதம் உள்ளதாக வைத்திருத்தல் அவசியம். அப்படி இருந்தால் தான் புருவத்தில் முடி கொட்டுதல் நிகழாமல், இருக்கும் முடிகள் அடர்த்தியுடன் அழகாக இருக்கும்.

முதல் முறை திரெட்டிங்!
முதல் முறையாக திரெட்டிங் செய்பவர்களுக்கு வீக்கமும், வழியும் புருவத்தில் ஏற்படலாம்; அது ஓரிரு நாட்களுக்கு நீடிக்கலாம். இது முதல் தடவை செய்யும் போது மட்டுமே ஏற்படும்; பின்னர் புருவ சீர்திருத்தம் உடலுக்கு பழக்கமானதாக மாறிவிடும். திரெட்டிங் செய்ததால் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்க முதல் தினத்தன்று வைட்டமின் இ அடங்கிய எண்ணெயை கொண்டு மசாஜ் செய்யவும்; இரண்டாம் தினத்தில் பாதாம் எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்யவும். மூன்றாம் மற்றும் நான்காம் நாட்களில், வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை கொண்டு மசாஜ் செய்து வீக்கம் மற்றும் வலியை போக்கலாம்.

திரெட்டிங் செய்யும் முன் செய்ய வேண்டியவை:
திரெட்டிங் செய்து கொள்ள போகும் முன் கண்களை சுற்றி எண்ணெயால் மசாஜ் செய்து, நன்கு கழுவி விட்டு பின் திரெட்டிங் செய்து கொள்ள வேண்டும்; இது திரெட்டிங் சேயும் போது புருவம் அழகிய வில் போன்ற வடிவம் பெற உதவுவதோடு, புருவம் அடர்த்தியாக வளரவும் வழிசெய்யும். மேலும் புருவத்தில் திரெட்டிங் செய்வதால், முகத்தசைகள் சுருங்கி முதுமை தோற்றம் ஏற்படலாம்; அதைத்தடுத்து இளமை ததும்பும் முகமாக வைத்திருக்க உதவும், இந்த எண்ணெய் மசாஜ்.

தேவையற்ற முடிகள்!
முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள், புருவத்தை சுற்றி வளரும் முடிகள், புருவத்தை இணைக்கும் முடிகள் போன்றவற்றை எளிமையாக, எந்தவித ஷேவ் அல்லது கிரீமும் பயன்படுத்தாமல் அகற்ற சில அழகுக் குறிப்புகள் உதவுகின்றன. இம்மாதிரியான தேவையற்ற முடிகளை அகற்ற கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, பால் இந்த மூன்றையும் சேர்த்து பேஸ்ட் போல ஆக்கி, அதை தேவையற்ற முடிகள் உள்ள இடத்தில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து கழுவி வந்தால், தேவையற்ற முடிகள் இயற்கையாக உதிர்ந்து, முகம் பளபளப்பாகும்.



Click it and Unblock the Notifications