For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த மிளகாயை எண்ணெயில் கலந்து தேய்ச்சா முடி நீளமா வளருமாம்... என்ன அளவுல தேய்க்கணும்?

கூந்தல் உதிர்வு ஏற்பட முக்கியமான காரணங்கள் சுற்றுச்சூழல் மாசு, வாழ்க்கை முறை, ஹார்மோன் சமநிலையின்மை போன்றவை காரணமாக அமைகிறது. இந்த கூந்தல் உதிர்தல் பிரச்சினையை நாம் சமையலில் பயன்படுத்தும் மிளகாயை கொண்

|

சுற்றுப்புற மாசுக்கள் எல்லாம் அதிகமான இந்த நவீன காலத்தில் கூந்தல் உதிர்வது என்பது ஒரு பிரச்சினையாகி வருகிறது. இதில் சில சமயங்களில் கூந்தல் வளர்ச்சி என்பதும் பெரும் தாமதமான விஷயமாகி போய் விடுகிறது. இந்த மாதிரி கூந்தல் உதிர்வு ஏற்பட முக்கியமான காரணங்கள் சுற்றுச்சூழல் மாசு, வாழ்க்கை முறை, ஹார்மோன் சமநிலையின்மை போன்றவை காரணமாக அமைகிறது. இதனால் கூந்தல் உதிர்வு மட்டுமில்லாமல் பொடுகு, கூந்தல் உடைந்து போவது, பிளவுபட்ட கூந்தல் நுனிகள் போன்ற பிரச்சினைகளும் சேர்ந்தே வருகிறது.

Did You Know That Cayenne Pepper Can Boost Hair Growth?

இந்த கூந்தல் உதிர்தல் பிரச்சினையை போக்க ஏராளமான சாம்பு, க்ரீம்கள் என்று மார்க்கெட்டில் வலம் வந்தாலும் இதில் சேர்க்கப்படும் கெமிக்கல்களால் பக்க விளைவுகள் மட்டுமே ஏற்படுகின்றன. எனவே இந்த பிரச்சினையை போக்க இயற்கை வழியே சிறந்தது.

அப்படிப்பட்ட இயற்கை பொருள் தான் இந்த மிளகாய். ஆமாங்க இந்த கெயான் மிளகாய் இயற்கையாகவே நம் கூந்தல் வளர்ச்சியை தூண்டக் கூடியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கெயான் மிளகாய்

கெயான் மிளகாய்

இந்த மிளகாயில் உள்ள கேப்சைன் என்ற பொருள் கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும் கூந்தலுக்கு பளபளப்பும், மென்மையையும் பரிசாக தருகிறது.

Most Read: காலை சுத்தமாக வைத்திருந்தாலும் துர்நாற்றம் வீசுகிறதா? பேக்கிங் சோடா இருக்க கவலை எதுக்கு?

ஆலிவ் ஆயில் மற்றும் கெயான் மிளகாய்

ஆலிவ் ஆயில் மற்றும் கெயான் மிளகாய்

தேவையான பொருட்கள்

1 கப் ஆலிவ் ஆயில்

5-6 மிளகாய்

பயன்படுத்தும் முறை

முதலில் மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இந்த மிளகாயை ஆலிவ் ஆயிலில் சேர்த்து ஒரு பாட்டிலில் அடைத்து 10-15 நாட்கள் குளிர்ந்த இடத்தில் வைத்து விடுங்கள்.

சில நாட்கள் கழித்து எண்ணெய் மட்டும் வடிகட்டி மிளகாயை தனியாக எடுத்து விடுங்கள்

இந்த எண்ணெய்யை உங்கள் கூந்தல் மற்றும் மயிர்க்கால்களில் தடவி ஒரு மணி ஊற வைக்க வேண்டும்.

பிறகு மைல்டு சாம்பு கொண்டு அலசவும். இதை வாரத்திற்கு 3 முறை என செய்து வந்தால் கூந்தல் வளர்ச்சி ஏற்படுவதை கண் கூடாக பார்க்கலாம்.

விளக்கெண்ணெய் மற்றும் கெயான் மிளகாய்

விளக்கெண்ணெய் மற்றும் கெயான் மிளகாய்

தேவையான பொருட்கள்

1 கப் விளக்கெண்ணெய்

2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய மிளகாய்

பயன்படுத்தும் முறை

மேற்கண்ட பொருட்களை ஒன்று சேர்த்து ஒரு ஜாரில் அடைத்து கொள்ளுங்கள். இரண்டு வாரங்கள் சூரிய ஒளி படாத குளிர்ந்த இடத்தில் வையுங்கள். பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை எடுத்து தலை மற்றும் கூந்தலில் தடவி மசாஜ் செய்து விடுங்கள்.

30-40 நிமிடங்கள் கழித்து மைல்டு சாம்பு கொண்டு அலசவும். இதை வாரத்திற்கு 3-4 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Most Read: தக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா? தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...

ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் மிளகாய் சாறு

ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் மிளகாய் சாறு

தேவையான பொருட்கள்

1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர்

1-2 சொட்டுகள் மிளகாய் சாறு

பயன்படுத்தும் முறை

ஒரு சுத்தமான பெளலில் ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் மிளகாய் சாறு சேர்த்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை தலை மற்றும் முடியில் தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும்.

சில நிமிடங்கள் வைத்து இருந்து விட்டு பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை ஒரு வாரத்திற்கு 1-2 முறை என செய்து வந்தால் முடி வளர்ச்சி ஏற்படும்.

Most Read: ஆண்கள் தொட்டால் ஷாக் அடிக்கும் பிரா... இனி எதுக்கு #METOO... சென்னை மாணவர்கள் கண்டுபிடிப்பு

தேங்காய் எண்ணெய் மற்றும் மிளகாய்

தேங்காய் எண்ணெய் மற்றும் மிளகாய்

தேவையான பொருட்கள்

1/2 கப் தேங்காய் எண்ணெய்

1/2 கப் ஆலிவ் ஆயில்

2 டேபிள் ஸ்பூன் மிளகாய் பவுடர்

பயன்படுத்தும் முறை

ஒரு கண்ணாடி பாட்டிலில் மேற்கண்ட பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து கொள்ளுங்கள். 2 வாரங்களுக்கு சூரிய ஒளி படாத குளிர்ந்த இடத்தில் வையுங்கள்

பிறகு கொஞ்சம் எண்ணெய்யை எடுத்து தலை மற்றும் மயிர்க்கால்களில் படும் படி நன்றாக தேயுங்கள்.

30 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு மைல்டு சாம்பு கொண்டு அலசவும்.

மேற்கண்ட முறைகள் கூந்தல் வளர்ச்சியைத் தூண்ட உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Did You Know That Cayenne Pepper Can Boost Hair Growth?

The capsaicin in cayenne pepper helps in stimulating hair growth. When used topically it can also help in giving a shiny and smooth hair. Now let us see how to use cayenne pepper for growing hair. Read on.
Desktop Bottom Promotion