Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
தலையில் சொட்டையா..? இதற்கு தீர்வை தரும் 8 மூலிகைகள்.
முடி அதிகமாக உதிர்வதால் சொட்டை ஏற்படுகிறது. இது ஆண்கள், பெண்கள் என பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கும். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கே அதிக அளவில் தலையில் சொட்டை ஏற்படுகிறது.
இப்போதெல்லாம் அதிக பேருக்கு வரக்கூடிய தலைமுடி சார்ந்த பிரச்சினைகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வழுக்கைதான். முடி அதிகமாக உதிர்வதால் சொட்டை ஏற்படுகிறது. இது ஆண்கள், பெண்கள் என பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கும். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கே அதிக அளவில் தலையில் சொட்டை ஏற்படுகிறது. சொட்டை விழுவதற்கு பல காரணங்களை கூறலாம்.

கால மாற்றங்கள், சரியான உணவு பழக்கம் இல்லாமை, ஹார்மோன் பிரச்சினைகள், பரம்பரை ரீதியாக, இரும்பு சத்து குறைபாடு போன்றவையே மூல காரணங்களாக கூறப்படுகிறது. பொதுவாக தலையில் முடி உதிர்ந்தாலே மன உளைச்சலுக்கு நம்மில் பலர் ஆளாக கூடும். அதிலும் தலையில் சொட்டை என்றால் அவ்வளவுதான். இந்த வழுக்கைக்கு தீர்வே இல்லையா..? தீர்வு இந்த 8 மூலிகைகள்தான்...

#1 ஆமணக்கு
வழுக்கை பிரச்சினைக்கு ஒரு அருமையான மூலிகை ஆமணக்கு. இதில் உள்ள மருத்துவ குணங்கள் தலையின் வேர்களை தூண்டி முடி வளர செய்கிறது. அத்துடன் மண்டையின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வேர்களை உறுதிப்படுத்தும். மேலும் தலையில் பொடுகு சேர்வதை தடுக்கும். முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். ஆமணக்கு எண்ணெய்யை சிறிது சூடுபடுத்தி, இரவு தூங்குவதற்கு முன் தலைக்கு தேய்த்துவிட்டு தூங்குங்கள்.
இதனை வாரத்திற்கு 3 அல்லது 4 முறை செய்தால் வழுக்கை ஏற்பட்ட இடத்தில் புதிதாக முடி வளரும்.

#2 கற்றாழை
ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் உள்ள கற்றாழை தலை முடி சம்பந்தமான அனைத்திற்கும் தீர்வை தரும். இது தலையில் சொட்டை விழுவதை முற்றிலும் குணப்படுத்தும். பொடுகு, வறண்டு போன முடிகள் ஆகியவற்றிற்கு நல்ல தீர்வை தரும். கற்றாழை சாற்றை எடுத்து வழுக்கை விழுந்த இடத்தில் 15 நிமிடம் மசாஜ் செய்தால் முடியின் வேர்களுக்கு மறுபிறப்பு கொடுக்கும். இதனை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்யலாம்.

#3 இஞ்சி
அதிக மருத்துவ குணம் கொண்ட பொருட்களில் ஒன்றான இஞ்சி உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடியது. இஞ்சியை சிறிது சிறிதாக நறுக்கி ஆலிவ் எண்ணெய்யுடன் சேர்த்து நன்றாக ஊற வைக்கவும். பிறகு அந்த எண்ணெய்யை தலைக்கு தடவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் சொட்டை விழுந்த இடத்தில் முடி வளரும். ஏனென்றால் இஞ்சியில், முடியின் வேர்களை புதுப்பிக்கும் தன்மை உள்ளதால் வழுக்கையை குணபடுத்தும்.

#4 ரோஸ்மேரி (Rosemary)
வழுக்கை பிரச்சனையை சரி செய்ய இது பெரிதும் பயன்படும். நம் முன்னோர்கள் ரோஸ்மேரியை தலை சார்ந்த எல்லா நோய்களையும் குணப்படுத்த பயன்படுத்தினர். உங்களுக்கு அதிக முடி உதிரும் பிரச்சனை இருந்தால் இந்த மூலிகையை தலையில் தடவுங்கள். இது விரைவிலேயே வழுக்கை குணமடைந்து நல்ல தீர்வு கிடைக்கும். மேலும் பொடுகு தொல்லை இருந்தால் இதனை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகை போக்கும்.

#5 வெந்தயம்
இது இழந்த உங்கள் முடிகளை மீண்டும் வளர செய்கிறது. முடி வளர்ச்சிக்கு தேவையான புரத சத்தை இது அதிகம் தரும். அத்துடன் ஹார்மோன்களை சமநிலையில் வைத்து முடி கொட்டும் பிரச்சினைக்கு முற்று புள்ளி வைக்கும். 3 டீஸ்பூன் வெந்தய பொடியை எடுத்து கொண்டு அதனுடன் பாலை கலக்கவும். இந்த கலவையை தலையில் வாரத்திற்கு 1 அல்லது 2 முறை தடவினாலே சொட்டை வந்த இடம் தெரியாமல் போய்விடும்.

#6 பிரிங்கராஜ்
இந்திய மருத்துவத்தில் இதனை "மூலிகைகளின் ராஜா" என்றே கூறுவார்கள். தலை முடி என்றாலே அதில் முக்கிய பங்கு வகிப்பது இதுதான். இதில் உள்ள மருத்துவ குணங்கள் தலையில் வழுக்கை ஏற்படாமல் காக்கும். உடல் செல்களை சுறுசுறுப்பாக வைத்து, எப்போதும் இளமையாக இருக்க இந்த மூலிகை உதவுகிறது. மேலும் முடி உதிர்வை தடுத்து அடர்த்தியான முடியை கொடுக்கும். முடியை மிக மென்மையாக வைக்க இதன் பவ்டரை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து தடவுங்கள்.

#7 துளசி
வழுக்கைக்கு ஒரு நல்ல பலனை துளசி ஏற்படுத்துகிறது. கொட்டிய முடிகளை மீண்டும் வளர செய்து புத்துயிர் தருகிறது. தலை முடிக்கு அதிக ஈரப்பதத்தை தந்து ரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தும். முடியின் வளர்ச்சிக்கும், முடி உதிர்வதை தடுக்கவும் இது உதவும். துளசி இலைகளை வெயிலில் உலர்த்தி பிறகு பொடி செய்து ஆலிவ் எண்ணெய்யுடன் சேர்த்து கலக்கவும். இதனை 20 நிமிடம் தலையில் தேய்த்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு செய்தால் வழுக்கை இருந்த இடத்தில் முடிகள் வளரும்.

#8 செம்பருத்தி
முடி உதிர்வை தடுப்பதில் மிக முக்கிய பங்கு இதற்கு உண்டு. அடி வேரினை தூண்டி முடியின் வளர்ச்சிக்கு உதவும். மேலும் இளநரைகளையும் தடுக்கும். 10 செம்பருத்தி இலைகளை வெயிலில் உலர்த்தி பிறகு தேங்காய் எண்ணெய்யில் ஊற வைத்து, அதனை 30 நிமிடம் வழுக்கை இருக்கும் இடத்தில் வாரத்திற்கு 2 முறை தடவி வந்தால் சொட்டை குணமடையும்.



Click it and Unblock the Notifications