அதிகமா தலைமுடி உதிருதா? அப்போ இத கட்டாயம் பயன்படுத்துங்க!!!

Posted By:
Subscribe to Boldsky

ஹேர் சீரம் என்பது சிலிகான், செராமைட் மற்றும் அமினோ அமிலம் கலந்த ஒரு திரவம். இதிலிருக்கும் சிலிகான் தான் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அவை தான் தலை முடிக்கு வலுவலுப்பையும், மிணுமிணுப்பையும் கொடுக்கிறது.

சீரம் முடியின் மீது ஒரு படலமாக படர்கிறது. இது தலைக்கு எண்ணெய் தேய்ப்பது போல அன்று, எண்ணெயை விட திக்காக இருக்கும். முடிக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இது செயல்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சீரம் :

சீரம் :

தூசு மற்றும் மாசுகளிலிருந்து உங்கள் தலைமுடியை பாதுகாக்க தலைமுடிக்கு சீரம் பயன்படுத்த வேண்டும். பலரும் சீரம் தடவுவதால் தலைமுடி நன்றாக வளரும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது தவறு, சீரம் உங்கள் தலைமுடியை மாசு படராமல் பாதுகாக்க மட்டுமே செய்கிறது.

பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

தலைக்குளித்து சுத்தமாக இருக்கும் தலையில் மட்டுமே சீரம் தடவ வேண்டும். எண்ணெய் தடவுவது போல முடியின் வேர்கால்களுக்கு எல்லாம் படுமாறு தடவக்கூடாது. தலைக்குளிப்பதற்கு முன்னர் தடவக்கூடாது.

உங்கள் முடியின் அடர்த்தி மற்றும் நீலத்திற்கு ஏற்ப சில துளி சீரமை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை கையில் நன்றாக தேய்த்து தலைமுடியை தடவிவிடுங்கள்.

வேர்கால்களுக்கு படமால் லேசகா தலைமுடியில் தடவினாலே போதுமானது.

முடியின் எல்லா பாகங்களுக்கு சீரம் பரவுமாறு தடவிக் கொள்ளலாம்.

நன்மைகள் :

நன்மைகள் :

சீரம் தடவுவதால் தலைமுடிக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம். அதிக வெப்பம், மாசு போன்றவற்றிலிருந்து தலைமுடியை பாதுகாக்க முடியும். இதனால் முடி உதிர்வு தவிர்க்கப்படும்.

இந்த பலன்களை எல்லாம் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் சீரம் நல்ல பிராண்டட்டாக இருக்க வேண்டும். விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக சந்தையில் கிடைக்கிறவற்றை எல்லாம் பயன்படுத்தக்கூடாது.

இயற்கையாக வீட்டிலேயே கூட சீரம் தயாரிக்கலாம்.

வறண்ட முடி :

வறண்ட முடி :

வறண்ட முடி இருப்பவர்கள், ஸ்ப்லிட் ஹேர் அல்லது தலைமுடி டேமேஜாக இருப்பவர்கள் இதனை பயன்படுத்தலாம்.

ரோஸ்வுட் ஆயில் மற்றும் லேவண்டர் ஆயிலை 20 மில்லி எடுத்துக் கொள்ளுங்கள்.இதனை பாதம் எண்ணெயுடன் கலந்து சீரமாக பயன்படுத்தலாம். இயற்கையாக நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கிறீர்கள் என்றால் முடியின் வேர்கால்களுக்கு படுமாறும் தடவலாம்.

 எண்ணெய்ப் பசை :

எண்ணெய்ப் பசை :

உங்கள் முடியில் அதிகம் எண்ணெய் பசை இருக்குமென்றால் இந்த சீரம் பயன்படுத்தலாம்.

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, பெப்பர்மிண்ட் மற்றும் கிரனியும் ஆயில் எடுத்துக்கொள்ளுங்கள். எல்லாமே தலா ஒரு ஸ்பூன் இருக்க வேண்டும். இவற்றை இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் கலந்து சீரமாக பயன்படுத்தலாம்.

இதனை அடிக்கடி செய்து வந்தால், உங்கள் தலையில் அதிக எண்ணெய் சுரப்பது குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Use serum to avoid hair breakage

Use serum to avoid hair breakage
Story first published: Thursday, October 5, 2017, 14:47 [IST]