Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
பொடுகு தொல்லையிலிருந்து எவ்வாறு விடுபடுவது?
பொடுகுத் தொல்லை ஒரு பொதுவான பிரச்சனை ஆகும்.உலகம் முழுவதும் உள்ள மக்களில் பலர் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தப் பிரச்சனை அனைத்து வகை வயதினருக்கும்,பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் வருகிறது
பொடுகுத் தொல்லை ஒரு பொதுவான பிரச்சனை ஆகும்.உலகம் முழுவதும் உள்ள மக்களில் பலர் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தப் பிரச்சனை அனைத்து வகை வயதினருக்கும்,பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் வருகிறது.பொடுகு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பொதுவான காரணங்களாக ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை,மன அழுத்தம் மற்றும் சுற்றுப்புற மாசு ஆகியவை உள்ளன.

முடியில் வெள்ளையாக செதில் செதிலாக பார்வைக்குத் தென்படுவது பலருக்கு அருவெறுப்பாக தோன்றும்.நீங்கள் பணியில் இருப்பவர் எனில் உங்கள் உயர் அதிகாரியின் முன்பு நிற்கும்போது இந்த மாதிரியான பொடுகுகளை அவர் பார்க்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?இது நல்ல மாதிரியான நிலை கிடையாது.எனவே பொடுகு பிரச்சனைகளை பற்றி விவாதிப்பதோடு மட்டுமில்லாமல் சில தீர்வுகளையும் இங்கே காணலாம்.

டிப்ஸ் :
முடியை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.சுற்றுப்புற மாசுக்களில் இருந்தும் பராமரிக்க வேண்டும். தினமும் உங்கள் முடியில் சீப்பை உபயோகப்படுத்த வேண்டும்.இவ்வாறு செய்வதால் உச்சந்தலை வரை ரத்த ஓட்டம் சீராகி இறந்த செல்களை அகற்ற தூண்டுகிறது.

டிப்ஸ் :
வாரத்திற்கு இரு முறை ஸ்கல்ப்பை விரல் நுனிகளால் மசாஜ் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி தூண்ட படுகிறது.

டிப்ஸ் :
அடிக்கடி தயிர் மற்றும் எலுமிச்சையை முடியை சுத்தம் செய்ய உபயோகிக்க வேண்டும்.இவை இரண்டும் முடி உதிர்வு மற்றும் பொடுகிற்கு சிறந்த தீர்வாக உள்ளது.

டிப்ஸ் :
2 தேக்கரண்டி ஆப்பிள் சிடர் வினிகர் நீருடன் கலந்து முடியை அலச வேண்டும்.இது முடிக்கு நல்லத் தீர்வுகளைத் தரும்.

டிப்ஸ் :
உங்கள் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவு சேர்க்க வேண்டும். சில நேரம் முடியை சூரிய வெளிச்சத்தில் காட்டுவது சிறந்தது.
இவ்வாறு செய்வதால் அரிப்பைத் தரும் பொடுகிலிருந்து விடுபடலாம்.



Click it and Unblock the Notifications
