முடி உதிர்வை தடுத்து, புதிய முடிகளை வளர செய்ய கொய்யா இலைகளை இப்படி பயன்படுத்துங்கள்!

Written By:
Subscribe to Boldsky

முடி உதிர்வதை தடுத்து தலைமுடியை ஆரோக்கியமாக வளர வைக்க கொய்யா இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கொய்யா இலைகள் சாதாரணமாக நமது ஊர் பகுதிகளில் கிடைக்கும் ஒன்று தான். கொய்யா இலைகளில் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. இது முடியின் வேர்க்கால்களின் ஆரோக்கியத்திற்கும், பொடுகுத்தொல்லையை போக்குவதற்கும் திறந்த தீர்வாக உள்ளது.

Guava Leaves For Hair Growth

மேலும் இதில் விட்டமின் சி, மற்றும் விட்டமின் பி மிக அதிகளவில் உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த கொய்யா இலைகளை கூந்தலுக்கு எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள் :

தேவையான பொருட்கள் :

  • ஒரு கைப்பிடி கொய்யா இலைகள்
  • 1 லிட்டர் தண்ணீர்
  • கொதிக்க வைக்க பாத்திரம்
  • வடிகட்டி
செய்முறை

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
  • இந்த கொதிக்கும் தண்ணீரில் கொய்யா இலைகளை போட வேண்டும்.
  • இந்த தண்ணீரை 20 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
  • பின்னர் இந்த நீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

தலைமுடியை ஷாம்பு கொண்டு நன்றாக அலசிக்கொள்ள வேண்டும். கண்டிஸ்னர் போட வேண்டாம். தலைமுடி காய்ந்ததும், இந்த கொய்யா இலை தண்ணீரை தலைமுடியில் அப்ளை செய்ய வேண்டும். தலையை நன்றாக 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும்.

முடியின் வேர்க்கால்களுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும். இதனை இரண்டு மணிநேரம் அப்படியே தலையில் விட்டுவிட வேண்டும். பின்னர் மிதமான சூடுள்ள நீரில் முடியை அலச வேண்டும்.

எத்தனை நாட்களுக்கு ஒருமுறை!

எத்தனை நாட்களுக்கு ஒருமுறை!

உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக இருந்தால், இதனை வாரத்தில் மூன்று முறை செய்ய வேண்டும். முடி நன்றாக வளர வேண்டும் என்றால், வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தலாம்.

கவனிக்க வேண்டியவை!

கவனிக்க வேண்டியவை!

கொய்யா இலை நீர் அறை வெப்பநிலையில் இருக்கும் போது தான் தலையில் அப்ளை செய்ய வேண்டும்.தலையை சூடான தண்ணீரில் அலசுவதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

முடி வேகமாக வளர

முடி வேகமாக வளர

கொய்யா இலையில் உள்ள விட்டமின் சி முடியை வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர வைக்க கூடியது.

உடைந்த முடிகளுக்கு..

உடைந்த முடிகளுக்கு..

இந்த கொய்யா இலை சாறு உடைந்த முடிகளை சரி செய்து வலிமையாக்குகிறது.

சூரிய ஒளி..

சூரிய ஒளி..

கொய்யா இலையானது, தலைமுடியை சூரிய ஒளியில் இருந்து காப்பாற்றுகிறது. உங்களது கூந்தலுக்கு கெடுதல் அளிக்க கூடிய சூரிய கதிர்களில் இருந்து காப்பாற்றக்கூடியது.

இரத்தம் ஒட்டத்தை அதிகரிக்கும்

இரத்தம் ஒட்டத்தை அதிகரிக்கும்

இந்த கொய்ய இலை சாறை தலையில் தடவி மசாஜ் செய்வதால், இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது முடியின் வேர்க்கால்களுக்கு சத்துக்களை கொண்டு சேர்க்கும் தன்மை கொண்டது. முடியை ஆரோக்கியமாகவும் வளர் செய்யக்கூடியது.

மருந்துவத்தில்..!

மருந்துவத்தில்..!

கொய்யா இலைகள் முடி உதிர்வதை தடுத்து நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், புதிய முடிகளையும் வளர வைக்க கூடிய ஆற்றல் கொண்டது. இது பல மருந்துகளில் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Guava Leaves For Hair Growth

Guava Leaves For Hair Growth
Story first published: Monday, August 21, 2017, 10:36 [IST]
Subscribe Newsletter