தலைக்கவசம் அணிவதால் தான் முடி உதிர்கிறது என்று நினைக்கிறீர்களா?

Written By:
Subscribe to Boldsky

ஆண்கள் பெரும்பாலும் தலைக்கவசம் அணிய மறுப்பதற்கு காரணம் முடி உதிர்வு பிரச்சனை தான். ஆனால் இது முற்றிலும் தவறானது. தலைக்கு தலைக்கவசம், தொப்பி போன்றவற்றை அணிவதால் நிச்சயமாக முடி உதிர்வு பிரச்சனை ஏற்படாது. யாரோ சிலர் சொல்வதை கேட்டு சில உயிரைக் காக்கும் தலைக்கவசத்தை அணிய மறுக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆக்ஸிஜன் தடை

ஆக்ஸிஜன் தடை

சிலர் தலைக்கவசம், தொப்பி போன்றவற்றை அணிவதால், முடியின் வேர்க்கால்களுக்கு செல்லும் ஆக்ஸிஜன் தடைபடுகிறது. இதனால் முடி உதிர்வு ஏற்படுகிறது என்ற கருத்தை தெரிவிக்கின்றனர்

உண்மை

உண்மை

ஆனால் உண்மை என்னவென்றால், முடியின் வேர்க்கால்களுக்கு வெளிக்காற்றில் இருந்து கிடைக்கும் ஆக்ஸிஜன் தேவைப்படுவதில்லை. அவை தங்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை இரத்தத்தின் மூலமாக பெருகின்றன. அவை தங்களின் தேவையை பெற தடையாக இருப்பது இறுக்கமான ஹேர் ஸ்டைல் தான்.

இறுக்கமான ஹேர் ஸ்டைல்

இறுக்கமான ஹேர் ஸ்டைல்

இறுக்கமான ஹேர் ஸ்டைல் செய்வதால் முடியின் வேர்க்கால்கள் வலிமை இழந்து முடி உதிர்வு ஏற்படுகிறது. எனவே முடியே பின்னோக்கி வழுவாக இழுத்து குதிரை வால் போன்ற இறுக்கமான ஹேர் ஸ்டைல்களை செய்வதால் முடி உதிர்வு ஏற்படுகிறது.

டிப்ஸ் 1

டிப்ஸ் 1

தலைக்கவசம் போன்ற தலையில் அணிபவற்றை எப்போதும், மெதுவாக கழற்ற வேண்டும். வேகமாக இழுத்தால், முடியின் ஏதேனும் ஒரு பகுதியில் மாட்டிக்கொண்டு, வலியை ஏற்படுத்தும், இதனால் முடியின் வேர்க்கால்கள் வலிமை இழந்துவிடும். முடி உதிர்வும் ஏற்படும்.

டிப்ஸ் 2

டிப்ஸ் 2

எப்போதும் சுத்தமான தலைக்கவசத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுத்தமற்ற தலைக்கவசத்தினால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும். நீங்கள் கைக்கூட்டையால் தலையை கவர் செய்துவிட்டு பின்னர் தலைக்கவசம் அணியலாம். இதன் மூலம் தலைக்கவசத்தில் உள்ள அழுக்கு தலையில் படியாமல் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

does wearing helmets or caps cause balding

does wearing helmets or caps cause balding
Story first published: Friday, September 15, 2017, 18:05 [IST]
Subscribe Newsletter