Latest Updates
-
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..
பளபளப்பான நீண்ட கூந்தலை பெற இந்த விதையை உபயோகித்திருக்கிறீர்களா? உபயோகமான ரெசிபி!!
பளபளப்பான மற்றும் நீண்ட தலைமுடி பற்றிய உங்களுடைய கனவு நனவாக வேண்டுமெனில் இந்த சியா விதைகளை உங்களுடைய தலைமுடிக்கு பயன்படுத்துங்கள்.
சியா விதைப் பூச்சு நம்முடைய தலைமுடிக்கு பல்வேறு நன்மைகளைத் தருகின்றது.அடர்த்தியான, பளபளப்பான மற்றும் நீண்ட தலைமுடி பற்றிய உங்களுடைய கனவு நனவாக வேண்டுமெனில் இந்த சியா விதைகளை உங்களுடைய தலைமுடிக்கு பயன்படுத்துங்கள்.
சியா விதைகளில் சோயா பீன்ஸ்களை விட 20 சதவீதம் அதிக புரதம் உள்ளது. உங்களுடைய கேசம் 70 சதவீதம் கெராட்டீன் என்கிற புரதத்தினால் உருவானது. இந்த கெராட்டீன் உங்களுக்கு நீண்ட, அழகிய மற்றும் பளபளப்பான கூந்தலைத் தருகின்றது.
சியா விதைகளில் உள்ள அதிக அளவிலான புரதம் உங்களுடைய சேதமடைந்த முடியை சீர்படுத்தி புதிய மயிர்க்கால்களின் மீளுருவாக்கத்திற்கு உதவுகின்றது.
இப்போது நீங்கள் இங்கே சியா விதைப் பூச்சை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் இதன் மூலம் உங்களுடைய உச்சந்தலை மற்றும் தலைமுடியை எவ்வாறு பாதுகாப்பது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்

செய்முறை
ஒரு கிண்ணத்தில் சுமார் இரண்டு தேக்கரண்டி சியா விதைகளை எடுத்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். இதை சுமார் 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்.
பத்து நிமிடங்களில் சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சி உப்பத் தொடங்கும். அப்பொழுது தண்ணீரை வடித்து விடுங்கள். இப்பொழுது உங்களுக்கு ஒரு ஜெல் போன்ற பதத்தில் சியா விதைகள் கிடைக்கும்.

செய்முறை
தேங்காயை அரைத்து அதனுடைய பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய இந்தப் பூச்சிற்கு அரை கப் தேங்காய் பால் தேவைப்படும். தேங்காய் பாலில் நிறைவுறா கொழுப்பு உள்ளது.
இது உங்களுடைய சேதமடைந்த கூந்தலை சீர் செய்ய உதவும். மேலும் இது உச்சந் தலைக்கு பாதுகாப்பளிக்கின்றது. மேலும் இது பளபளப்பான கூந்தலை உங்களுக்கு தரும்.

செய்முறை
தேங்காய் பாலுடன் ஒரு தேக்கரண்டி எழுமிச்சை சாறு சேருங்கள். அதனுடன் ஜெல் பதத்தில் உள்ள சியா விதைகளை சேருங்கள். இந்தக் கலவை நன்கு கலக்கவும். எழுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் உங்களுடைய உச்சந் தலையை சுத்தப்படுத்தி, பொடுகை போக்கி எண்ணெய் வழிவதை தடுக்கின்றது.

செய்முறை
இந்தக் கலவையின் நெடியை உங்களால் நுகர முடியவில்லை எனில், வாசனைக்காக சில் துளிகள் லாவண்டர் எண்ணெயை சேருங்கள். உங்களுக்கு தேவையான அளவு மற்றும் பதத்திற்கு வரும் வரை எண்ணெயை சேர்த்து அதன் பின்னர் கலவையை நன்கு கலக்குங்கள்.

செய்முறை
தலை முடியை நன்கு சீவி அதில் உள்ள சிக்கல்களை நீக்குங்கள். தலையை வாரும் முன்னர் ஒரு சில துளிகள் தேங்காய் எண்ணெயை உங்களுடைய தலைமுடியில் தடவுங்கள். இவ்வாறு செய்வது உங்களுடைய முடிக்கு வளவளப்பை தரும் மற்றும் சிக்கல்களை எளிதாக நீக்க உதவும்.

செய்முறை
உங்களுடைய தலை முடியை சிறிய பிரிவுகளாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள் அதன் பின்னர் ஒரு தூரிகையை பயன்படுத்தி சியா விதை கலவையை உங்களுடைய தலைமுடியில் தடவுங்கள்.
கலவையை தடவும் பொழுது முடியின் வேரிலிருந்து நுனி வரை மிகவும் கவனமாக தடவுங்கள். மிகவும் கவனமாக உங்களுடைய தலைமுடி முழுவதும் பரவும் படி இந்தக் கலவையை தடவும்.
அதிகமாகத் தடவினால் கலவை உங்களுடைய முகத்தில் வழிந்து விடும். எனவே நீங்கள் மிகவும் கவனமக இருக்க வேண்டும்.

செய்முறை
ஒது துண்டை எடுத்து கொதிநீரில் முக்கி எடுங்கள். அதை நன்கு பிழிந்து அதில் உள்ள அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றவும். இப்பொழுது இந்த துண்டை உங்களுடைய தலை முடியைச் சுற்றி கட்டவும். இவ்வாறு செய்வதன் மூலம் துண்டில் இருந்து வெளிவரும் நீராவி, தலைமுடியில் உள்ள சியா விதை பூச்சு உங்களுடைய தலைமுடியில் நன்கு ஆழமாக ஊடுறவ உதவும்.

செய்முறை
இந்த பூச்சை சுமார் 10 நிமிடங்கள் வரை விட்டு விடுங்கள். அதன் பின்னர் உங்களுடைய தலைமுடியை லேசான ஷாம்பு கொண்டு நன்கு அலசி எடுங்கள். கண்டிஷனர் உபயோகிப்பதை தவிர்க்க முயலுங்கள்.
இந்த சியா விதை பூச்சு உங்களின் கேசத்திற்கு கண்டிஷனராக செயல்பட்டு, பளபளப்பான கூந்தலை தரும். எனவே அதிகப்படியான கண்டிஷனர் உங்களுடைய கூந்தலை பாழாக்கி விடும்.

செய்முறை
குளித்து முடித்த பின்னர் உங்களுடைய கேசத்தில் இருந்து அதிகப்படியான தண்ணீரை துவட்டி எடுத்து விடுங்கள். தலையை துவட்ட மிகவும் மெல்லிய பருத்தி துண்டை பயன்படுத்துங்கள். தலை துவட்டும் பொழுது உச்சந் தலையை கடுமையாக தேய்க்காதீர்கள். அதிகப்படியான ஈரம் உங்களுடைய தலைமுடியை கண்டிப்பாக பாதிக்கும்.



Click it and Unblock the Notifications