Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
முடி வளர்ச்சியை பாதிக்கும் காரணங்கள் மற்றும் நீங்கள் செய்ய வேண்டியவை !!
முடி அழகு முக்கால் அழகு என்பது போல் கூந்தல் வளர்ச்சி ஒவ்வொருவரின் அழகிற்கும் முக்கியமானது. ஆனால் பருவ நிலைமாறுபாடுகளால் முடி குறைகிறது. முடி வளர தேவையான டிப்ஸ் இங்கே சொல்லப்பட்டுள்ளது.
ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி அடர்த்தியாகவும்,அழகாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு.முடியை சுத்தமாகவும்,ஆரோக்கியமாகவும் பராமரிக்க வேண்டும்.
முடியை எப்படி பராமரிப்பது என்று தெரியாமலேயே சிலர் முடியின் பொழிவை அழிக்கின்றனர்.நமக்கே தெரியாமல் நாம் செய்யும் சில தவறுகள் முடியின் பொலிவை
அழிக்கின்றது.

முடி உதிர்தல், பொடுகு போன்ற காரணங்களால் சிலர் தூக்கத்தையும் தொலைக்கின்றனர்.உங்கள் தவறுகளை திருத்தி முடி வளர நீங்கள் செய்ய வேண்டியவைகள் என்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

1.முடியை சுத்தம் செய்யும் முறை:
நம்மில் பலர் மார்க்கெட்டில் கிடைக்கும் அதிக கெமிக்கல் உள்ள ஷாம்பு உபயோகிக்கின்றனர்.இந்த வகை ஷாம்பு முடியை சுத்தம் செய்து பளபளப்பாகவும்,வளர்ச்சியை தூண்டும் என்று நம்புகின்றனர்.
ஆனால் இது தவறு இதற்கு பதிலாக இயற்கையான அதிக கெமிக்கல் கலக்காத ஷாம்பூ உபயோகிக்கலாம்.இது முடியை சுத்தமாகவும், ஆரோக்கியமானதாகவும் வைக்கிறது.

2.ஈர முடியில் சீப்பு உபயோகித்தல்:
ஈரமான தலையில் சீப்பு உபயோகிப்பதன் மூலம் நல்ல ஆரோக்கியமான மற்றும் புதிதாக வளரும் முடிகள் கூட ஸ்கல்ப்பில் இருந்து உதிர்ந்து விடும்.

3.புளோ ட்ரயிங் (Blow drying):
முடியை உலர்த்துவதற்கு நவீன முறையில் கருவிகள் உபயோகிக்கின்றனர் (Hair dryer).இந்த கருவிகள் முடியை சீர்படுத்த முடியாத பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது.மென்மையான டவல் கொண்டு முடியை உலர்த்தலாம்.

4.முடிச் சாயம் :
முடிக்கு விதவிதமான கலர்களில் சாயங்கள்,ஜெல்,கிரீம் போன்ற அதிகப்படியான கெமிக்கல் கலந்த பொருள்கள் உபயோகிப்பதன் மூலம் முடியின் ஆரோக்கியம் கெடும்.இவை அனைத்தையும் தவிர்த்தாலே போதுமானது.

5.கண்டிஷனரை தவிர்த்தல்:
முடியை ஈரப்பதமாகவும்,பளபளப்பாகவும் வைப்பதற்கு நல்ல தரமான கண்டிஷனர் உபயோகப்படுத்த வேண்டும்.
வெளியிடங்களுக்கு செல்லும்போது மாசுகள் மூலம் முடி அதிக அளவு பாதிப்படைவதை கண்டிஷனர் உபயோகிப்பதன் மூலம் தடுக்கலாம்.

6.நீளமான முடி:
நீளமான முடி அழகாக இருக்கும் ஆனால் ஸ்கல்ப்-ல் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி முடி உதிர்வை ஏற்படுத்தும்.நீளமான முடிக்கு பராமரிப்பு மிகவும் முக்கியமானது.முடியை சீராக வெட்டி தினமும் அலசி பராமரிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications