Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இவைகளும் உங்கள் தலைமுடி உதிர்வதற்கு முக்கிய காரணம் என்பது தெரியுமா?
ஒவ்வொரு முறை தலையை சீவும் போதும் கையில் கொத்தாக முடி வருகிறதா? அதைப் பார்க்கும் போதெல்லாம் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகிறீர்களா? எவ்வளவு முயற்சித்தும் தலைமுடி உதிர்வதை தடுக்க முடியவில்லையா? முதலில் இக்கட்டுரையைப் படியுங்கள்.
சொட்டை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்ட உதவும் சில ஆயுர்வேத வழிகள்!
தலைமுடி உதிர்வதை நிறுத்த வேண்டுமானால், அதற்கான காரணத்தை முதலில் அறிய வேண்டும். அதில் பலருக்கும் தெரிந்த காரணங்கள் மோசமான தலைமுடி பராமரிப்பு, அதிகப்படியான தலைமுடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது, வறட்சி, பொடுகு போன்றவை.
தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில எளிய கிராமத்து வைத்தியங்கள்!
ஆனால் அதையும் தாண்டி வேறுசில காரணங்களும் உள்ளன. அதில் சில பலருக்கு தெரியாதவைகளாகும். சரி, இப்போது நீங்கள் அறிந்திராத தலைமுடி உதிர்வதற்கான வேறுசில காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.

அதிர்ச்சிகரமான நிகழ்வுகள்
ஒருவர் அதிர்ச்சிகரமான நிகழ்வுகளான விபத்து, பிடித்தவர்களின் இறப்பு போன்றவற்றால் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானால், அதன் காரணமான மன இறுக்கம் ஏற்பட்டு, தலைமுடி உதிர ஆரம்பிக்கும்.

வைட்டமின் ஏ மாத்திரைகள்
வைட்டமின் ஏ குறைபாடு உள்ளது என்று, வைட்டமின் ஏ மாத்திரைகளை தொடர்ச்சியாக எடுத்து வந்தால், மயிர்கால்கள் பலவீனமாகி, தலைமுடி உதிர்வதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

புரோட்டீன் குறைபாடு
ஆரோக்கியமான தலைமுடிக்கு புரோட்டீன் மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்து. புரோட்டீன் தான் தலைமுடியின் வலிமைக்கு காரணம். அதன் குறைபாடு ஏற்பட்டால், அதிகப்படியான முடியை இழக்க வேண்டிவரும்.

பரம்பரை
சில நேரங்களில், மரபணுக்களும் தலைமுடி உதிர்வதற்கு காரணமாக இருக்கும். உங்கள் பெற்றோர்கள் அல்லது தாத்தா பாட்டிகளுக்கு வழுக்கை தலை இருந்தால், உங்களுக்கும் வழுக்கை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதன் முதல் கட்டமாக தலைமுடி அதிகம் உதிர ஆரம்பிக்கும்.

திடீர் எடை குறைவு
கடுமையான டயட்டை மேற்கொண்டு, குறைந்த காலத்தில் அதிகளவு உடல் எடையைக் குறைத்தால், ஊட்டச்சத்து குறைபாட்டினால் மயிர்கால்கள் பலவீனமாகி, உதிர ஆரம்பிக்கும்.

நாள்பட்ட காய்ச்சல்
காய்ச்சலால் 15 நாட்கள் அல்லது அதற்கு மேல் அவஸ்தைப்பட்டு வந்தால், அதன் காரணமாகவும் தலைமுடி அதிகம் உதிரும். எனவே காய்ச்சல் வந்தால், சாதாரணமாக விடாமல், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறுங்கள்.

பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரை
நிறைய பெண்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு, பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை எடுப்பார்கள். இப்படி இந்த மாத்திரைகளை அதிகமாக எடுத்த பல பெண்களின் உடலில் திடீர் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, நிறைய முடி கொட்டியுள்ளது.



Click it and Unblock the Notifications