தாடி மற்றும் மீசையில் உள்ள வெள்ளை முடிகளை கருமையாக்கும் வீட்டில் உள்ள மூலிகைகள் என்னென்ன..?

தாடி, மீசை போன்றவை ஆண்களின் மிக முக்கிய அடையாளமாக பல ஆயிரம் ஆண்டுகளாகவே உள்ளது. ஆண்களுக்கு தாடியை பிடிக்குதோ இல்லையோ பெண்களுக்கு இதன் மீது தனி மோகம் இருக்க தான் செய்கிறது. நிவின் பாலியை போன்றோ அர்ஜுன் ரெட்டியை போன்றோ ஆண்கள் தாடி மற்றும் மீசை வைத்திருந்தால் பெண்கள் பெரிதும் விரும்புவார்கள்.

தாடி மற்றும் மீசையில் உள்ள வெள்ளை முடிகளை கருமையாக்கும் வீட்டில் உள்ள மூலிகைகள் என்னென்ன..?

இயற்கையாகவே பெண்களுக்கு இதன் மீது ஒரு வித ஈர்ப்பு இருக்கிறது என ஆய்வுகளும் சொல்கின்றன. தாடி மற்றும் மீசை அதிகமாக வளர்வது ஒரு புறம் இருக்க, இதன் கருமை முக்கியமானதாக கவனிக்கப்படுகிறது. தலை முடி வெள்ளையானால் எப்படி நம்மால் பொறுத்து கொள்ள முடிவதில்லையோ அதே போன்று தான் தாடி மற்றும் மீசையில் வெள்ளை முடி வளர்ந்தாலும் நாம் விரும்புவதில்லை.

இப்படி மீசையிலும் தாடியில் வளர கூடிய நரை முடிகளை கருமையாக்க ஒரு சில வழி முறைகள் உள்ளன. இவற்றை நம் வீட்டில் இருக்க கூடிய மூலிகை தன்மை கொண்ட பொருட்களை வைத்தே நம்மால் செய்ய இயலும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்

நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்

நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் வெள்ளை முடியை போக்க உதவும். அதற்கு 1 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும் அந்த எண்ணெய் கொண்டு தாடியை 3-5 நிமிடம் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும்.

துளசி வைத்தியம்

துளசி வைத்தியம்

மருத்துவ குணங்கள் இந்த துளசியில் அதிகம் உள்ளது நம் அனைவருக்குமே தெரிந்தது தான். ஆனால், இவை நமது நரையை கருமையாக்கும் என்கிற தகவல் நம்மில் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. 10 துளசி இலைகள் அரைத்து கொண்டு அவற்றை 2 ஸ்பூன் வெங்காய சாற்றுடன் கலந்து தாடி மற்றும் மீசையில் தடவவும். 15 நிமிடம் கழித்து இதனை நீரால் கழுவி விடவும். இவ்வாறு செய்து வந்தால் நரைகள் கருமையாகும்.

கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய்

கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய்

8-10 கறிவேப்பிலையை 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் போட்டு, குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, பின் அதனைக் கொண்டு 5 நிமிடம் தாடியை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

எலுமிச்சை வைத்தியம்

எலுமிச்சை வைத்தியம்

முடியின் வளர்ச்சிக்கு எப்படி எலுமிச்சை உதவுகிறதோ அதே போன்று உங்களின் மீசை மற்றும் தடியின் வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. இந்த குறிப்பில் கூறுவது போல செய்து வந்தால் நரைகள் விரைவில் மறைந்து போகும்.

தேவையான பொருட்கள்...

சர்க்கரை 2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு அரை ஸ்பூன்

தண்ணீர் அரை கப்

செய்முறை

செய்முறை

முதலில் சர்க்கரை நீரில் கலந்து கொள்ள வேண்டும். அடுத்து இதனுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து தாடி மற்றும் மீசையில் தடவவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரை கொண்டு அலசவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் நரைகள் மறைந்து போகும்.

கற்றாழை

கற்றாழை

கற்றழை ஜெல் மற்றும் பசு வெண்ணெயை சரிசம அளவில் எடுத்து, தாடியில் தடவி மேலும் கீழுமாக 5 நிமிடம் மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், வெள்ளையான முடி கருமையாகும்.

மோர் மற்றும் கறிவேப்பிலை

மோர் மற்றும் கறிவேப்பிலை

1 டேபிள் ஸ்பூன் மோருடன், 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை சாற்றினை சேர்த்து, குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி குளிர்ந்ததும், அக்கலவையைக் கொண்டு தாடியை மசாஜ் செய்து 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இச்செயல் மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பு

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை நரைத்த தாடிக்கு மட்டுமின்றி, தலைமுடிக்கும் பயன்படுத்தலாம். இதனால் முடியின் ஆரோக்கியம் மேம்பட்டு, கருமையாவதோடு, அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.

புதினா

புதினா

நரையை விரட்ட கூடிய ஆற்றல் புதினாவிற்கு உள்ளது. புதினா இலைகளை 10 எடுத்து கொண்டு அதனை 1 கப் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் வெள்ளை முடிகள் கருப்பாக மாறும். இதனை தினமும் குடித்து வந்தால் தான் பலன் விரைவில் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion