Latest Updates
-
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுக்காக்க செய்ய வேண்டிய செயல்கள்!!!
முடி என்று வரும் போது, அதனை சரியாக பராமரிப்பது என்பது அதற்கு முறையாக எண்ணெய் பயன்படுத்தி வருவதில் தான் உள்ளது. அதில் வாரம் ஒருமுறை தலைக்கு வெதுவெதுப்பான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, மைல்டு ஷாம்பு போட்டு குளித்து வருவது தான் சிறந்த ஐடியா என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
இப்படி செய்தால் முடி மென்மையாக பட்டுப் போன்று இருப்பது மட்டுமல்லாமல், முடியின் ஆரோக்கியமும் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், முடிக்கு வெறும் எண்ணெய் வைத்து குளித்தால் மட்டும் முடியின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்று நினைக்க வேண்டாம். இது அடிப்படையே தவிர, முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க தலைக்கு குளிக்கும் முன், கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ஒருசிலவற்றை செய்து வந்தால், முடியின் ஆரோக்கியமானது பாதுகாக்கப்படும்.
சரி, இப்போது முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தலைக்கு குளிக்கும் முன் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போம்.

வைட்டமின் ஈ மாத்திரைகள்
விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய்களை வெதுவெதுப்பாக சூடேற்றி தலைக்கு தடவும் போது, அத்துடன் வைட்டமின் ஈ மாத்திரைகளை அத்துடன் சேர்த்து கலந்து, பின் அந்த எண்ணெயை தலைக்கு தடவினால், கூந்தல் உதிர்வதைத் தடுக்கலாம். அதிலும் அந்த எண்ணெயை தலைக்கு தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த நீரில் முடியை அலசி, இயற்கையாக உலர வைக்க வேண்டும்.

தயிர் மற்றும் முட்டை மாஸ்க்
இல்லாவிட்டால், தயிர் மற்றும் முட்டையை ஒன்றாக கலந்து, அதனை தலைக்கு தடவி நன்கு ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் அலசினால், முடிக்கு கண்டிஷனர் போட்டது போன்று இருப்பதுடன், முடியும் நன்கு கருமையாக ஆரோக்கியமாக வளரும்.

வாழைப்பழ மாஸ்க்
நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் மயோனைஸ், 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் முடியை அலசினால், பொலிவிழந்து காணப்படும் முடியானது நன்கு பொலிவோடு, மென்மையாக இருக்கும்.

உளுத்தம் பருப்பு
இரவில் படுக்கும் போது 3 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பை நீரில் ஊற வைத்து, மறுநாள் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1 முட்டையை நன்கு அடித்து ஊற்றி, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 கப் தயிர் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் அலசினால், முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

தயிர்
மேற்கூறிய எதுவும் முடியாவிட்டால், தயிரைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, அலசுங்கள். இதனாலும் முடி நன்கு பட்டுப் போன்று வறட்சியின்றி இருக்கும்.

குறிப்பு
எப்போதும் தலைக்கு குளிக்கும் போது சுடுநீரைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் சுடுநீர் தலைமுடியை வறட்சியடையச் செய்வதுடன், முடிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எப்போதும் குளிர்ச்சியான நீரைப் பயன்படுத்துங்கள். ஒருவேளை முடியாவிட்டால், வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications
