Latest Updates
-
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?
பேன் தொல்லை தாங்க முடியவில்லையா? அதைப் போக்க சில டிப்ஸ்...
தலையில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பேன். இத்தகைய பேன் தொல்லையால் பெண்கள் மற்றும் குழந்தைகள் தான் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். பேன் ஒரு ஒட்டுண்ணி என்பதால், ஒருமுறை பேன் வந்துவிட்டால், அதனைப் போக்குவது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல.
இத்தகைய பேன் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும். அது அருகருகில் படுத்தாலோ, அவர்களின் துணியைப் பயன்படுத்தினாலோ, ஏன் அருகருகில் அமர்ந்தால் கூட எளிதில் தொற்றிக் கொள்ளும். மேலும் ஒருவரின் தலையில் பேன் வந்துவிட்டால், அவர்கள் எப்போதும் தலையை சொரிந்து கொண்டு இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல், முடி உதிர்வு அதிகம் இருக்கும்.
சரி, இப்போது அந்த பேன் தொல்லையில் இருந்து விடுமலைப் பெறுவது எப்படி, தலையில் உள்ள பேனை இயற்கை வழியில் போக்க என்ன செய்ய வேண்டுமென்று பார்ப்போம்.

பூண்டு
10 பூண்டு பற்களை எடுத்துக் கொண்டு, அதனை பேஸ்ட் செய்து, அதில் 2-3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் தலையை அலசினால், பேன் தொல்லையில் இருந்து விடுதலைப் பெறலாம்.

பேபி ஆயில்
பேபி ஆயிலை தலையில் தடவி, பின் பேன் சீப்பு கொண்டு சீவினால், பேன் வெளியே வந்துவிடுவதோடு, அதனைத் தொடர்ந்து சோப்புத்தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதனைக் கொண்டு தலையை அலசி விட வேண்டும். பின் படுக்கும் முன், சிறிது வெள்ளை வினிகரை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஷவர் கேப் அல்லது துணியால் தலையைச் சுற்றி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இப்படி 3-4 முறை தொடர்ந்து செய்தால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் போது தலையில தடவி நன்கு மசாஜ் செய்து, பின் ஷவர் கேப் அல்லது துணியால் தலையைச் சுற்றி, மறுநாள் காலையில் தலைக்கு மூலிகை ஷாம்பு போட்டு குளித்தால், பேன் தொல்லை நீங்கும்.

உப்பு
1/4 கப் உப்பில் 1/4 கப் வினிகர் சேர்த்து கலந்து, அந்த கலவையைத் தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தெளித்து, 2 மணிநேரம் ஊற வைத்து பின் தலையை ஷாம்பு போட்டு அலசினால், பேன் பிரச்சனை விரைவில் குணமாகும்.

பெட்ரோலியம் ஜெல்லி
பெட்ரோலியம் ஜெல்லியை தலையில் ஸ்காப்பில் படும்படி தடவி, ஷவர் கேப் கொண்டு தலையைச் சுற்றி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் பேபி ஆயில் பயன்படுத்தி தலையை மசாஜ் செய்து, பின் சீப்பு கொண்டு தலையை சீவினால், பேன் கையோடு வந்துவிடும்.

டீ-ட்ரீ ஆயில்
1 டீஸ்பூன் டீ-ட்ரீ ஆயிலில் சிறிது ஷாம்பு மற்றும் 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அந்த கலவையை தலையில் தடவி ஷவர் கேப் கொண்டு தலையை மூடி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும். இறுதியில் பேன் சீப்பு பயன்படுத்தி தலையை சீவினால், பேன் வெளியேறிவிடும்.

தேங்காய் எண்ணெய்
முதலில் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, தலையை அலச வேண்டும். பின் தலையை நன்கு உலர்த்த வேண்டும். பிறகு இரவில் படுக்கும் போது ஸ்கால்ப்பில் தேங்காய் எண்ணெயைத் தடவி ஷவர் கேப் அல்லது துணி கொண்டு தலையை நன்கு சுற்றி, 6-8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் தலையை சீப்பு பயன்படுத்தி நன்கு சீவி, பின் ஷாம்பு பயன்படுத்தி தலையை அலச வேண்டும். ஒரு வாரம் தொடர்ந்து தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளை வினிகர்
வெள்ளை வினிகரை நீரில் கலந்து, ஸ்கால்ப்பில் தடவி தலையில் ஷவர் கேப் அல்லது துணியைச் சுற்றி, 1-2 மணிநேரம் நன்கு ஊற வைத்து, பின் சீப்பை வினிகரில் நனைத்து, தலையை சீவினால், பேன் வெளியேறிவிடும். குறிப்பாக வினிகரை ஷாம்பு பயன்படுத்தும் முன்பு மற்றும் பின்பு பயன்படுத்தலாம்.

நல்லெண்ணெய்
1/4 கப் நல்லெண்ணெயில், 1/4 கப்பில் பாதி வேப்ப எண்ணெய், 1 டீஸ்பூன் டீ-ட்ரீ ஆயில், 1 1/2 டீஸ்பூன் யூகலிப்டஸ் ஆயில் மற்றும் ரோஸ்மேரி ஆயில் மற்றும் 10 துளிகள் லவெண்டர் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு தலையை ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுத்தி அலச வேண்டும். பின் எண்ணெய் கலவையைத் தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலையை சீப்பு பயன்படுத்தி சீவினால், பேன் இறந்த நிலையில் வெளியேறும். இறுதியில் ஷாம்பு பயன்படுத்தி தலையை அலச வேண்டும். இப்படி 1-2 வாரம் தினமும் செய்து வந்தால், பேன் போய்விடும்.

மயோனைஸ்
இரவில் படுக்கும் போது, மயோனைஸை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, ஷவர் கேப் அணிந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி தினமும் ஒரு வாரம் செய்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.



Click it and Unblock the Notifications