Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
தலை முடி பராமரிப்பில் உதவியாக இருக்கும் விதைகள்!!!
ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும் நீளமான மற்றும் வளமையான தலைமுடியை பாதுகாக்க மிகவும் கவனம் தேவை ப்படும். நாம் கடைகளில் தயாராக கிடைக்கும் செயற்கையான பொருட்களை அல்லது மருந்துகளை வைத்து நம்முடைய முடியை பாதுகாக்க முயற்சி செய்வது வழக்கம். எனினும், அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகளை நாம் மறந்து விடுகிறோம். தலைமுடியை சிறப்பாக பராமரிக்க தேவையான விஷயங்களில் ஒன்றாக ஊட்டச்சத்து மிக்க உணவு உள்ளது.
பொங்கி வரும் மழையின் மென்மை, குளுமையான பருவநிலை, தொடர்ந்து வரும் பூக்களின் பரிணாமம் ஆகியவற்றைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைவது ஒருபுறம் இருந்தாலும், இந்த ஆழமான கனவுகளின் தொடர்ச்சியாக வரும் மழைக்காலம் நமது தலைமுடிகளுக்கு கொண்டு வரும் அபாயங்களை நாம் மறந்து விடுகிறோம். இன்று நாம் எதிர்கொண்டு திணரும் பொதுவான பிரச்னைகளான முடி உடைதல் மற்றும் அழகிய கூந்தல் பராமரிப்புக்கு போதுமான கவனம் தேவைப்படும். சிறியவரோ அல்லது பெரியவரோ யாராக இருந்தாலும், வயது ஒரு பெரிய விஷயமே இல்லை, எண்ணற்றவர்கள் தங்களுடைய கூந்தலை நல்ல முறையில் கவனித்து வருகிறார்கள்.
செயற்கையான வழிமுறைகள் உங்களுடைய தலைமுடியை தற்காலிகமாக நல்ல வகையில் பராமரிக்க உதவினாலும், சிறிது காலத்திற்குப் பிறகு அவை தீங்கு விளைவிப்பதை உணர முடியும். எனினும், விதைகளைக் கொண்டு தலைமுடியை பராமரிப்பது பாதுகாப்பான விஷயமாகும். இந்த விதைகளைக் கொண்டு உங்களால் பல்வேறு விதமான இயற்கையான முறையில் தலைமுடியை பாதுகாக்கும் கலவைகளை செய்ய முடியும். எளிதில் கிடைக்கும் இந்த விதைகள், அற்புதமான தீர்வுகளை தரும் என்றால் மிகையாகாது. அந்த வகையில் உங்கள் தலைமுடியை பாதுகாக்க உதவும் சில விதைகளைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம்.

தலைமுடி இழப்பைத் தடுக்கும் வெந்தயம்
இயற்கையாகவே கிடைக்கும் வெந்தயம் ஒரு மிகச்சிறந்த தலைமுடி பராமரிப்பு விதையாகும். வெந்தய விதை சிகிச்சை முறையானது ஒரு முழுமையான வீட்டு தயாரிப்பாகவும் மற்றும் செலவு குறைவானதாகவும் இருக்கும். உங்களுக்கு அருகில் உள்ள கடைகளிலேயே இதனை குறைந்த செலவில் வாங்கிடவும் முடியும். விதைகளைக் கொண்டு தலைமுடியை பராமரிக்கும் விஷயத்தில், வெந்தய விதைகள் தான் முதலிடத்தில் உள்ளன. வெந்தய விதைகளை கொண்டு தயார் செய்யப்பட்ட இயற்கையான தலைமுடி பராமரிப்பு பொருட்களும் கடைகளில் விற்கப்படுகின்றன. இது தலைமுடியை உறுதிப்படுத்தி, தலைமுடி இழப்பைத் தவிர்க்கிறது.

நரைமுடியைப் போக்கும் எள்
நீங்கள் விதைகளைக் கொண்டு தலைமுடியை பராமரிக்க நினைத்தால், அதற்கு எள் விதைகளைப் பயன்படுத்துவது உத்தமம். எள் விதைகளை பழையதாக இருந்தாலும், நல்ல விளைவை தரத் தவறுவதில்லை. இந்த விதைகள் மட்டுமே நரைமுடியை நீக்குகின்றன. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் 2-3 மாத காலத்திற்கு, தினமும் ஒரு தேக்கரண்டி எள் பயன்படுத்துவது தான். அதன் பின்னர் பாருங்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இதைக் கொண்டு நீங்கள் இயற்கையான முடி பராமரிப்பு கலவைகளையும் செய்ய முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

இனிப்பான மருந்தான கசப்பான வேம்பு
வேப்ப இலை என்றாலே நினைவுக்கு வருவது அதன் கசப்புத்தன்மை தான். எனினும், வேப்ப எண்ணெயின் மருத்துவ குணத்தை யாராலும் மறுக்க முடியாது. இது அற்புதமான தீர்வுகளைக் கொடுத்து, உங்கள் தலைமுடியை சிறப்பாக பராமரிக்கச் செய்கிறது. அது தலையின் தோல் பகுதியை (Scalp) பராமரித்து, முடியை ஆரோக்கியமாக வைக்கிறது.

மாதுளையும், இனிப்பான தலைமுடியும்!
மாதுளை ஒரு இனிப்பான பழம் என்பது நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விஷயம் தான்! ஆனால், இது மருத்துவ குணங்களும் உள்ள பழம் தான். அது உங்கள் தலைமுடிக்கு ஈரப்பதத்தை கொடுத்து, வளமையாக இருக்க வைக்கிறது. இதனை பாதாம் எண்ணெயுடயோ அல்லது ஜோஜோபோ எண்ணெயுடனோ சேர்த்து பயன்படுத்தினால் சிறந்த விளைவுகள் ஏற்படும். நீங்கள் மாதுளைப் பழ சாற்றைக் கொண்டு, இயற்கையான தலைமுடி பாதுகாப்பு கலவையையும் செய்யலாம்.

திராட்சை விதை எண்ணெய்
தலைமுடி பாதுகாப்பில் முதன்மையான இடத்தைப் பெற்ற இயற்கை நிவாரணியாக திராட்சை விதை எண்ணெய் உள்ளது. இது செலவு குறைவானதாகவும், தலைமுடியின் ஈரப்பதத்தை பராமரிக்கும் காரணிகளை கொண்ட நிவாரணியாகவும் உள்ளது. நீங்கள் இதனை சூடான எண்ணெய் சிகிச்சை முறைகளுக்கும் பயன்படுத்தலாம்.

குருதிநெல்லி விதையின் அற்புதம்
பல காலமாகவே குருதிநெல்லி விதையை (Cranberry) தலைமுடி பராமரிப்புக்காக நாம் பயன்படுத்தி வருகிறோம். இது தலைமுடியை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்திருந்து, முடியின் கால்கள் இருக்கும் தோல் பகுதி காய்ந்து போவதை தடுக்கிறது. ஏனெனில் காய்ந்து போன தோல் பகுதியால் நமக்கு வரும் பிரச்சனைகள் எண்ணிலடங்காதவை. காய்ந்து போன சரும பிரச்சனையை சரி செய்து விட்டாலே, உங்கள் தலைமுடி பிரச்சனைகளை எளிதில் சமாளித்து விட முடியும்.
மேலே படித்த டிப்ஸ்களைக் கொண்டு விதைகளைப் பயன்படுத்தி, இயற்கையான முறையில் உங்கள் தலைமுடிகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். பயன் பெறுங்கள்.



Click it and Unblock the Notifications