Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
நீச்சல் பழகுறவங்களா நீங்க? அப்ப முடியை சரியா கவனிங்க...
அக்காலத்தில் எல்லாம் நீச்சல் பழக வேண்டுமெனில் குளம், கிணறு, ஆறு போன்ற இடங்களுக்கு சென்று தான் கற்றுக் கொள்வோம். அந்த இடங்களில் உள்ள தண்ணீர் எல்லாம் மிகவும் சுத்தமானது. ஆனால் இன்றைய காலத்தில் அத்தகைய இடங்களுக்கு செல்ல நேரம் இல்லாததால், பலர் நீச்சல் பழக வேண்டுமெனில், நகர் புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நீச்சல் குளத்திற்கு சென்று தான் பயிற்சி பெற வேண்டியுள்ளது. மேலும் இந்த நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரில் குளோரின் சேர்ப்பதால், அவை சருமத்திற்கும், கூந்தலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கூந்தல் தான் அதிகம் பாதிக்கப்படும்.
ஆகவே குளோரின் தண்ணீர் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிலும் போது, கூந்தலை தவறாமல் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. அதிலும் நீச்சல் குளத்தில் இறங்கும் முன்னும், பின்னும் ஒருசில செயல்களை தவறாமல் செய்ய வேண்டும். அத்தகைய செயல்கள் என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை பின்பற்றினால், கூந்தலில் எந்த பிரச்சனையும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.

* நீச்சல் குளத்தில் இறங்கும் முன், கூந்தலை மறக்காமல் நீரில் அலச வேண்டும். ஆனால் ஷாம்புவை பயன்படுத்தக்கூடாது. இல்லாவிட்டால், அதுவே கூந்தலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
* நீச்சல் குளத்தில் உள்ள நீரில் குளோரின் இருப்பதால், குளத்தில் இறங்கும் முன், தலைக்கு தொப்பியை அணிய வேண்டும். மேலும் அப்படி அணியும் போது, காதுகளையும் சேர்த்து அணிய வேண்டும். அதிலும் லேட்டக்ஸால் செய்யப்பட்ட தொப்பியை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
* நீச்சல் பயின்ற பின், கூந்தலை மறக்காமல் நீரில் அலச வேண்டும். அப்போது நிச்சயம் ஷாம்புவைப் பயன்படுத்தி தலையை அலச வேண்டும். அதுவும் மூலிகை ஷாம்பு அல்லது மைல்டு ஷாம்பு போட்டு கூந்தலை அலச வேண்டும். இதனால் முடியில் உள்ள குளோரின் நீக்கப்படுவதோடு, கூந்தல் உதிர்தலும் தடுக்கப்படும்.
* ஷாம்பு போட்டு அலசியப் பின், கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். அதுவும் இயற்கை கண்டிஷனர்களான வாழைப்பழம் மற்றும் அவகேடோவால் செய்யப்படும் கண்டிஷனர்களைப் பயன்படுத்தினால், கூந்தல் மென்மையாக இருக்கும்.
மேற்கூறியவற்றையெல்லாம் மனதில் கொண்டு நீச்சல் பயின்றால், கூந்தல் பிரச்சனை இல்லாமல் நீச்சலைப் பயிலலாம்.



Click it and Unblock the Notifications