Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
கோடையில் கூந்தலை பராமரிக்க சில சூப்பர் டிப்ஸ்...
யாருக்கு தான் அழகான கூந்தல் வேண்டுமென்ற ஆசை இருக்கிறதோ, அவர்கள் கோடையில் நிச்சயம் கூந்தலுக்கு சற்று அதிகப்படியான பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் கோடையில் எப்படி சருமத்திற்கு பிரச்சனைகள் வருமோ, அதேப் போல் கூந்தலுக்கு நிறைய பிரச்சனைகள் வரும். மேலும் வெயில் காலத்தில் வெளியே செல்ல வேண்டிய அவசியம் அதிகம் இருக்கும். ஆகவே அவ்வாறு அதிகப்படியாக வெளியே சுற்றுபவர்கள், தவறாமல் கூந்தலை பராமரிக்க வேண்டும்.
இல்லையெனில் கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை போன்றவை அதிகரித்துவிடும். எனவே இத்தகையவர்களுக்காக கூந்தலைப் பராமரிப்பதற்கு ஒருசில ஈஸியான டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். இத்தகைய டிப்ஸ்கள் மிகவும் எளிமையானவை. மேலும் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சரி, இப்போது அந்த டிப்ஸ்கள் என்னவென்று பார்ப்போமா!!!

தினமும் கூந்தலை அலசவும்
கோடையில் கூந்தலைப் பராமரிக்க செய்ய வேண்டியவைகளில் முக்கியமானவை கூந்தலை தினமும் அலசுவது தான். இதனால் அதிகமான வியர்வையால், தலையில் அதிகப்படியான அழுக்குகள் தங்குவதை தவிர்க்கலாம். மேலும் தலையும் நன்கு சுத்தமாக இருக்கும்.

ஷாம்பு
தலைக்கு குளிக்கும் போது மாய்ச்சுரைசிங் ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். அதிகப்படியான எண்ணெய் பசை தலையில் இருந்தால், அழுக்குகள் தங்கும் என்று நினைத்து கடினமாக ஷாம்பு அல்லது சோப்பு பயன்படுத்தினால், கூந்தலில் அதிக வறட்சி ஏற்பட்டு, பின் கூந்தல் உடைய ஆரம்பிக்கும்.

கண்டிஷனர்
கோடையில் கண்டிஷனர் செய்வது மிகவும் அவசியமானது. இதனால் கூந்தல் பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும். மேலும் கண்டிஷனர் பயன்படுத்தினால், கூந்தலுக்கு ஒருவித பாதுகாப்பு கிடைக்கும். எனவே தவறாமல் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும்.

தண்ணீர்
அதிகப்படியான தண்ணீரைக் குடிக்க வேண்டும். ஏனெனில் கோடையில் உடல் வறட்சியானது அதிகம் இருக்கும். அவ்வாறு வறட்சி ஏற்பட்டால், கூந்தல் உதிர ஆரம்பிக்கும் எனவே வறட்சியைப் போக்க அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும்.

ஹேர் மாஸ்க்
கூந்தலுக்கு அவ்வப்போது ஹேர் மாஸ்க் போட வேண்டும். இதனால் கூந்தலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். அதுவும் கெமிக்கல் கலந்த ஹேர் மாஸ்க்குகளை பயன்படுத்தாமல், இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி மாஸ்க் போட வேண்டும். அதிலும் வாழைப்பழம், பப்பாளி, தயிர், தேங்காய் பால் போன்றவற்றால் மாஸ்க் போடலாம். இதனால் பட்டுப் போன்ற அழகான கூந்தலைப் பெறலாம்.

கூந்தல் வெடிப்புகள் அகற்றுதல்
கோடையில் அதிகமாக கூந்தல் வெடிப்புகள் ஏற்படும். எனவே அவ்வாறு கூந்தலின் முனைகளில் வெடிப்புகள் ஏற்பட்டால், அதனை உடனே அகற்றிவிட வேண்டும். இல்லையெனில் அவை கூந்தல் வளர்ச்சியை முற்றிலும் தடுத்துவிடும்.

எண்ணெய் மசாஜ்
அவ்வப்போது தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தலையில் படிந்திருக்கும் மாசுக்கள் முற்றிலும் நீங்கி, இரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு, கூந்தலும் வலுவோடு இருக்கும். அதிலும் இதனை தலைக்கு குளிக்கும் முன், சிறிது நேரம் செய்து குளித்தால், மிகவும் நல்லது.

தொப்பி
வெயிலில் செல்லும் போது, சூரியக்கதிர்களில் தாக்கத்தில் இருந்து கூந்தலைப் பாதுகாக்க, வெளியே செல்லும் போது, தலைக்கு தொப்பி அல்லது துணியை கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக, அவ்வாறு தொப்பி போடும் போது வியர்வை அதிக நேரம் தலையில் தங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

சன் ஸ்கிரீன்
சருமத்திற்கு சன் ஸ்கிரீன் லோசன் பயன்படுத்தும் போது, கூந்தலுக்கு சன் ஸ்கிரீன் பயன்படுத்தக் கூடாதா என்ன? எனவே கூந்தலுக்கு என்று விற்கும் சன் ஸ்கிரீன் வாங்கி பயன்படுத்தினால், சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
