Latest Updates
-
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம்
நல்ல கவர்ச்சியான மற்றும் அழகான தலைமுடிக்கு தவறாமல் செய்ய வேண்டியவைகள்!!!
நீங்கள் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என எண்ணுவீர்கள். கவர்ச்சியாக இருப்பதால் பலருடைய கவனத்தை ஈர்க்கவும், திகைப்படையச் செய்யவும் முடியும். ஆனால் இந்த கவர்ச்சியை சில நேரங்களில் பராமரிக்க முடியாமல் போய்விடும். இந்த விஷயத்தில் கவர்ச்சியான தலைமுடியை பெற்றிருப்பது மிகவும் கவனிக்கத்தக்க அம்சமாகும். அந்த தலைமுடியை சரிவர பராமரிக்க முடியாமல், வறண்டு போகச் செய்யாமலிருக்கும் வழிகளை அறிய தொடர்ந்து படியுங்கள்.
உங்களுடைய தலைமுடி இயற்கையாகவே கவர்ச்சியாக இருந்தாலோ அல்லது கலரிங் செய்து கவர்ச்சியாக மாற்றி இருந்தாலோ, அதற்கு முறையான பராமரிப்பும், திடமான வண்ணங்களும் தேவைப்படும். வண்ணங்கள் திடமாக பராமரிக்கப்படாவிடில், அது மஞ்சள், ஆரஞ்சு அல்லது பச்சை நிறங்களுக்கு முடி மாறிவிடும்.

ஆனால் கவர்ச்சியான முடி உங்களுக்கு வேண்டுமென்றால் தலைமுடியின் அமைப்பு, ஆரோக்கியம் மற்றும் அடர்த்தியை பராமரிக்க வேண்டும். ஒரு பாட்டில் சாயத்தைக் கொண்டு முடியின் வண்ணத்தை செயற்கையாக பராமரிப்பது, உங்களுக்கு சுகாதாரம் இல்லாத மற்றும் கேடு விளைவிக்கும் உணர்வை ஏற்படுத்தும்.
இதுப்போன்று வேறு ஏதாவது படிக்க: குளிர்காலத்தில் ஏற்படும் வறண்ட தலைமுடிக்கான சில பராமரிப்பு டிப்ஸ்...
கவர்ச்சியான தலைமுடியை ஏன் பராமரிக்க வேண்டும்? ப்ளீச்சிங் செய்வது தலைமுடியை இலேசாக்குவதோடு மட்டுமல்லாமல், அதன் வண்ணத்தையும் உறிஞ்சி எடுத்து விடும். அதன் காரணமாக தலையில் உள்ள புறத்தோல் அடுக்கு திறக்கப்பட்டு, வறட்சியான தலைமுடிக்கு வழிவகுக்கும். இதோ உங்கள் தலைமுடியை கவர்ச்சியாக வைத்திருக்க உதவும் டிப்ஸ்களை வரிசைப்படுத்தியுள்ளோம்.
வறட்சியான ஷாம்புகள்
கவர்ச்சியாக தலைமுடியை பராமரிக்க விரும்பினால் ஒரு வார காலத்திற்காவது வறட்சியான ஷாம்புகளை (Dry shampoos) பயன்படுத்துங்கள். உங்களுடைய தலைமுடியை சுத்தம் செய்யவும் மற்றும் பளிச்சிட வைக்கவும் விரும்பினால் இந்த வழிமுறையை பயன்படுத்துங்கள். இந்த வகையான பொருட்கள் தலைமுடியை ஆரோக்கியமாக பராமரிக்கவும், நீண்ட நாட்களுக்கு சாயம் போகாமல் இருக்கவும் உதவுகின்றன. அடுத்ததாக ஹேர் கன்டிஷனர் மற்றும் சீப்பை எடுத்து தலைமுடியை நன்றாக வாரி விடவும்.
முடியை குறைவான அளவில் கழுவுதல்
தலைமுடியை கவர்ச்சியாக வைக்க விரும்பினால் அவ்வப்போது உங்கள் முடியை கழுவுங்கள். தொடர்ந்து தலைமுடியை கழுவி வந்தால் தலைமுடி வறண்டு போகவும், எளிதில் உடையக் கூடியதாகவும் மற்றும் முழுவதும் பாதிப்படையும். ஏனெனில் தொடர்ந்து கழுவுவதால் தலைமுடிக்கு கிடைக்கும் இயற்கையான எண்ணைய் அளவு மாறுபட்டு, அதன் பிரகாசம் குறைந்து விடும். எனவே, தலைமுடியை கவர்ச்சியாக வைத்திருக்க விரும்பினால், குறைவாக அதனை நனைய விட்டு கழுவுங்கள்.
தொப்பி அல்லது ஸ்கார்ப் அணிதல்
நீங்கள் வெளியே செல்லும் போதோ அல்லது நெடுநேரம் சூரிய வெளிச்சத்தில் இருக்க வேண்டியிருந்தாலோ ஒரு தொப்பி அல்லது ஸ்கார்ப் அணிந்து கொண்டு தலைமுடியை பராமரிக்கலாம். சூரிய வெளிச்சத்தில் அதிக நேரம் இருக்கும் தலைமுடி தன்னுடைய கவர்ச்சியை இழந்து விடும். இது வெப்பம் மற்றும் ஸ்டைலிங் போன்ற விஷயங்களில் மிகவும் கவனிக்க வேண்டிய தலைமுடி பராமரிப்பு டிப்ஸ் ஆகும்.
முடி வெட்டுதல்
தலைமுடியில் பயன்படுத்தப்படும் ப்ளீச்சின் காரணமாக கவர்ச்சியான தோற்றம் ஏற்பட்டாலும், அதனால் மயிரிழைகள் பலவீனமடைகின்றன. ஒவ்வொரு மாதமும் கால் அங்குல அளவிற்கு முடியை வெட்டி விடுவதால் இதனை தவிர்த்து முடியை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.
வெப்பத்திலிருந்து பாதுகாத்தல் மற்றும் பளபளக்கும் ஸ்ப்ரே
தலைமுடியை கவர்ச்சியானதாக பராமரிக்க விரும்பினால் வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் பொருளையும் மற்றும் பளபளப்பிற்கான ஸ்ப்ரேவையும் வாங்குங்கள். பொதுவாகவே ப்ளோ டிரையர் அல்லது ஸ்ட்ரெய்டனர் அல்லது கர்லர் (சுருள்) போன்றவற்றை பயன்படுத்தும் போது, இந்த வெப்பத்தைப் பாதுகாக்கும் கருவி மற்றும் பளபளப்பிற்கான ஸ்பிரே போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
கிளாரிஃபையிங் ஷாம்பு பயன்படுத்துதல்
மிகவும் அதிகமான குளோரின் உள்ள தண்ணீரில் நீச்சலடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், தண்ணீரில் குதிப்பதற்கு முன்னர் உங்கள் தலைமுடியை நன்றாக அலசி விடுங்கள். ஆவ்வாறு செய்வதன் மூலம் அதிகமான அளவு குளோரினை முடி உள்ளிழுத்துக் கொள்ளாது. குளோரினால் சோர்வடைந்த தலைமுடியை சரி செய்ய விரும்பினால் வாரத்திற்கு ஒரு முறை கிளாரிஃபையிங் ஷாம்புவை பயன்படுத்துங்கள்.
மிகவும் பளபளப்பாக்கும் சிகிச்சை
உங்களுடைய தலைமுடி பார்ப்பதற்கு மிகவும் மோசமாக தோற்றமளித்தால் இந்த மிகவும் பளபளப்பாக்கும் சிகிச்சையை (Rich Gloss Treatment) பயன்படுத்தி கவர்ச்சியூட்டலாம்.
இந்த குறிப்புகளைக் கொண்டு உங்கள் தலைமுடியின் செம்பட்டை முடி மற்றும் வறட்சி போன்ற பிரச்னைகளை சமாளித்து, கவர்ச்சியான தலைமுடியுடன் வலம் வாருங்கள்.



Click it and Unblock the Notifications
