முடிக்கு ஹேர் சீரம் பயன்படுத்துவது நல்லதா?

By Maha

ஹேர் சீரம் (Hair Serum) என்பது வறட்சியான, மென்மையிழந்த மற்றும் கரடுமுரடான முடிக்கு பயன்படுத்தும் ஒரு நீர்மம். இதனைப் பயன்படுத்தினால் முடி நன்கு மென்மையாகவும், பட்டுப்போன்றும் இருக்கும். மேலும் ஹேர் சீரம் பயன்படுத்தினால், முடிக்கு நல்ல பாதுக்காப்பு கிடைக்கும்.

ஏனெனில் ஹேர் சீரத்தில் சிலிகான் இருப்பதால், அதனை முடிக்கு பயன்படுத்தும் போது முடியில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. பொதுவாக இதனை அழகு நிலையங்களில் முடியை பராமரித்தப் பின் பயன்படுத்துவார்கள். அதனைப் பயன்படுத்திய பின், முடியே மிகவும் அழகாக இருக்கும். ஆகவே பலருக்கு இதனை வீட்டில் பயன்படுத்தலாமா? முடிக்கு எந்த ஒரு பாதிப்பும் வராதா? போன்ற கேள்விகள் எழும்.

ஆகவே இப்போது அந்த ஹேர் சீரம்மை முடிக்கு பயன்படுத்துவது நல்லதா, கெட்டதா என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹேர் சீரம் நல்லதா கெட்டதா?

ஹேர் சீரம் நல்லதா கெட்டதா?

முடிக்கு பயன்படுத்தும் ஹேர் சீரம் முடியை பட்டுப் போன்று பொலிவோடு வைக்கும் தான். ஆனால் இதனை தினமும் வீட்டில் பயன்படுத்துவது நல்லதா கெட்டதா? இந்த கேள்வி பலரது மனதில் எழுவதற்கு காரணம், அதில் உள்ள சிலிகான் தான். அது நல்லதா கெட்டதா என்பதை அடுத்துப் பார்ப்போம்.

சிலிகான் நல்லதா?

சிலிகான் நல்லதா?

பலரது மனதில் சிலிகானை முடிக்கு பயன்படுத்துவது கெட்டது என்ற கருத்து உள்ளது. அதனால் தான் இந்த ஹேர் சீரத்தை பயன்படுத்துவது நல்லதா, கெட்டதா என்ற கேள்வி எழுந்தது. உண்மையில் சிலிகான் சில வகையான முடிக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இதனை எளிதில் முடியில் இருந்தும் வெளியேற்றலாம். அதற்கு ஒருசில கெமிக்கல் கலந்த கிளிசரை முடிக்கு பயன்படுத்தினால், எளிதில் சிலிகான் முடியில் இருந்து வெளிவந்துவிடும். இப்போது ஹேர் சீரம் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம்.

பளபளப்பு

பளபளப்பு

ஹேர் சீரத்தை முடிக்கு பயன்படுத்தினால், வறட்சி நீங்கி, முடி பளபளப்புடன் மின்னும். எனவே அடங்காத முடியைக் கொண்டவர்கள், முடிக்கும் ஹேர் சீரத்தைப் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.

பாதிப்பை தடுக்கும்

பாதிப்பை தடுக்கும்

பெரும்பாலானோர் முடியை நேராக்க, உலர வைப்பதற்கு பல உபகரணங்களைப் பயன்படுத்தியிருப்போம். மேலும் வெளியே செல்லும் போது தூசி, மாசுக்கள் போன்றவை முடியை பெரிதும் தாக்கும். இத்தகையவற்றில் இருந்து விடுட, ஹேர் சீரத்தை முடிக்கு பயன்படுத்தினால், முடி நன்கு பொலிவோடு காணப்படும்.

புறஊதாக் கதிர்களில் இருந்து பாதுகாப்பு

புறஊதாக் கதிர்களில் இருந்து பாதுகாப்பு

சில ஹேர் சீரங்களில் புறஊதாக் கதிர்களில் இருந்து பாதுகாப்பு தரும்படியான பொருள் அடங்கியிருக்கும். அத்தகையவற்றை முடிக்கு பயன்படுத்தினால், சூரியக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

சூப்பரான கண்டிஷனர்

சூப்பரான கண்டிஷனர்

முடியை வறட்சியின்றி வைத்துக் கொள்ள சீரம் சிறந்த பொருள். எனவே முடிக்கு எண்ணெய் பசையைத் தருவதற்கு, எண்ணெயை பயன்படுத்துவதற்கு பதிலாக, இந்த சீரம்மை பயன்படுத்தலாம்.

ஸ்டைலுக்கு சிறந்தது

ஸ்டைலுக்கு சிறந்தது

முடியை ஸ்டைலாக்குவதற்கு சுருட்டையாக்கும் கருவிகள், நேராக்கும் கருவிகள் போன்றவற்றைப் பயன்படுத்தினால், முடி உதிர்தலுடன், முடி ஆரோக்கியத்தை இழந்துவிடும். ஆகவே முடியை ஸ்டைலாக மாற்றுவதற்கு, ஹேர் சீரத்தை பயன்படுத்தினால் எந்த ஒரு பக்கவிளைவுமின்றி, முடியை வேண்டியவாறு ஸ்டைலாக மாற்றலாம். மேலும் இது முடியை இன்னும் பொலிவோடு மாற்றி, ஒரு இயற்கையான லுக்கை கொடுக்கும்.

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

ஹேர் சீரம் முடியை ஆரோக்கியமாக இருப்பது போல் மட்டுமே வெளிப்படுத்தும். ஆனால் உண்மையிலேயே முடி நன்கு ஆரோக்கியமாக இருக்க ஆசைப்பட்டால், நல்ல உணவுகளை சாப்பிட்டு, முடியை பராமரிப்பதே சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, May 30, 2013, 13:07 [IST]
Desktop Bottom Promotion