Latest Updates
-
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பூந்திக்கொட்டைப் பொடியை தயிருடன் கலந்து கூந்தலில் மாஸ்க் போட்டால்.. முடி உதிராது!
தற்போது கூந்தல் உதிர்தல் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது. இத்தகைய கூந்தல் உதிர்தலானது பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடியது. அதிலும் பருவக்கால மாற்றம் முதல் ஆரோக்கியமற்ற உணவு முறை வரை அனைத்தும் கூந்தல் உதிர்தலை ஏற்படுத்தும். அழகு என்று வரும் போது அதில் கூந்தலும் முக்கிய பங்கு வகிப்பதால், அத்தகைய கூந்தலில் பிரச்சனைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் இன்றியமையாததாக உள்ளது. அதற்காக அனைவராலும் அழகு நிலையங்களுக்கு சென்று கூந்தலை பராமரிக்க முடியாது.
எனவே மிகவும் எளிமையாகவும், அனைவராலும் முயற்சி செய்யக்கூடியவாறும் வீட்டின் சமையலறையிலேயே பல பொருட்கள் உள்ளன. அத்தகைய பொருட்களைக் கொண்டு கூந்தலைப் பராமரித்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாகவும் வலுவுடனும் வளரும்.
அதுமட்டுமின்றி, இந்த பொருட்கள் கூந்தல் உதிர்தலை தடுப்பதோடு, கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும் சரிசெய்யலாம். இப்போது கூந்தல் உதிர்தலைத் தடுக்க பயன்படும் சமையலறையில் இருக்கும் சில பொருட்களைப் பார்ப்போம்.

வெந்தயம்
வெந்தயத்தில் கூந்தலுக்கான பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் கூந்தல் உதிர்தல், கூந்தல் வறட்சி, பொடுகுத் தொல்லை போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆகவே வெந்தயத்தை நீரில் நன்கு ஊற வைத்து அரைத்து, அதனை கூந்தலில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

வேப்பிலை
வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் உள்ளதால், அதனை அரைத்து தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், கூந்தல் உதிர்தல் நிற்பதோடு, ஸ்கால்ப் பிரச்சனைகளும் நீங்கும். இல்லாவிட்டால், வேப்பிலையை கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, பின் அந்த நீரை குளிர வைத்து, அதில் கூந்தலை அலசினால், கூந்தல் பிரச்சனைகளை அகலும்.

ஆரஞ்சு
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி, கூந்தல் உதிர்தலைத் தடுக்கும். மேலும் இது கூந்தலில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் ஸ்காப் பிரச்சனைகளை நீக்கும்.

எலுமிச்சை
எலுமிச்சையின் குணங்களைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அதிலும் கூந்தல் பராமரிப்பில் இதனைத் தவிர சிறந்த பொருள் வேறொன்றும் இல்லை. அதிலும் எலுமிச்சை சாற்றினை தலையில் தடவி மசாஜ் செய்து அலசினால், கூந்தல் உதிர்தல், முடி வெடிப்பு, பொடுகு போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதனை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், கூந்தல் உதிர்வது நின்று, கூந்தல் நன்கு பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.

வெங்காயம்
வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. இது கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. ஆகவே இந்த வெங்காயத்தை அரைத்து, அதன் சாற்றினை தலையில் தடவி மசாஜ் செய்து குளிக்க வேண்டும்.

நெல்லிக்காய்
நெல்லிக்காய் கூட மிகவும் அருமையான கூந்தல் பராமரிப்பு பொருள். இது பொடுகுத் தொல்லை, கூந்தல் உதிர்தல், ஸ்கால்ப் பிரச்சனைகள் போன்றவற்றை குணப்படுத்தக்கூடியது.

தேங்காய் எண்ணெய்/பால்
தேங்காய் எண்ணெய்/பாலைக் கொண்டு கூந்தலை நன்கு மசாஜ் செய்து குளித்தால், கூந்தல் வறட்சி நீங்குவதோடு, கூந்தலும் பட்டுப் போன்று வளரும்.

விளக்கெண்ணெய்
பண்டைய காலத்தில் எல்லாம் விளக்கெண்ணெய் கொண்டு தான் கூந்தலைப் பராமரித்தார்கள். அதனால் தான் அவர்களது கூந்தல் நன்கு அடர்த்தியாகவும், நீளமாகவும் இருந்தது. ஆகவே இந்த எண்ணெய் கொண்டு கூந்தலை மசாஜ் செய்து வந்தால், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

பூந்திக்கொட்டை
பூந்திக்கொட்டையைக் கொண்டு கூந்தலை பராமரித்தால், கூந்தல் நன்கு கருமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அதிலும் இந்த பூந்திக் கொட்டை பொடியை தயிருடன் சேர்த்து கலந்து, கூந்தலுக்கு மாஸ்க் போட்டால், கூந்தல் உதிர்தல் குறையும்.

தயிர்
கூந்தல் உதிர்தலைத் தடுப்பதில் தயிரை விட சிறந்த பொருள் வேறேதும் இல்லை. அதற்கு தயிரை எலுமிச்சை சாறு அல்லது தேனுடன் சேர்த்து கலந்து, கூந்தலுக்கு மாஸ்க் போட வேண்டும்.

பால்
பாலைக் கொண்டு கூந்தலை அலசினால், கூந்தல் மென்மையாகவும், வலுவுடனும் இருக்கும். இதனால் கூந்தல் உதிர்தல் நிற்பதோடு, அதன் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

பூண்டு
பூண்டிலும் சல்பர் அதிகம் உள்ளது. ஆகவே இதன் சாற்றினைக் கொண்டு கூந்தலைப் பராமரிக்கலாம்.

கொய்யா
கொய்யாவில் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. ஆகவே கொய்யாவை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு அல்லது தயிர் சேர்த்து கலந்து, கூந்தலில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செர்ரி
செர்ரிப் பழத்தில் கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பயோஃப்ளேவோனாய்டு அதிகம் உள்ளது. எனவே அதனை மசித்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து குளிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications