Latest Updates
-
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க..
முடி கொட்டுதல் மற்றும் முடி உடைவதைக் குறைக்க 10 சூப்பரான வழிமுறைகள்!!!
முடி கொட்டுதல் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான ஒரு பிரச்சனையாகும். துரதிர்ஷ்டவசமாக, இந்தப் பிரச்சனைக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பது நமக்கு தெரிவதில்லை. முடி கொட்டும் பிரச்சனையால் நமது இயற்கை அழகும், முடி வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. முடியைத் தவறாக பராமரிப்பதன் விளைவாகவே இந்த நிலை ஏற்படுகிறது. ஒருமுறை முடி உதிர ஆரம்பித்தால், இந்நிலை பல ஆண்டுகள் தொடரும்.
இந்தப் பிரச்சனை இருபாலர் மத்தியிலும் அதிகரித்து கொண்டே வருவதால், பலரும் இதற்கான தீர்வை தேடி அலைகின்றனர். ஆங்கில மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் என பலவற்றை பயன்படுத்தினாலும் கூட, இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு யாருக்குமே கிடைப்பதில்லை. கெமிக்கல் கலந்த பொருட்களைப் உபயோகிப்பதால், இந்த பிரச்சனை மேன்மேலும் அதிகமாவது எல்லோர் மத்தியிலும் ஒரு கவலையை ஏற்படுத்துகிறது. ஆகவே இங்கு கெமிக்கல் பயன்பாடு இல்லாமல், முடி கொட்டுவதை அல்லது வெடிப்பதை குறைப்பதற்கான சிறந்த வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பயன்பெறுங்கள்.

வாரத்தில் 2-3 தடவைகள் மட்டுமே முடியை நீரில் அலசுங்கள்
தினமும் முடியை நீரில் சுத்தம் செய்வதால், முடி உலர்ந்து சொரசொரப்புத் தன்மை மற்றும் எளிதில் உதிரும் நிலையை அடைகிறது. அளவுக்கு அதிகமாக முடியை அலசுவதால், ஸ்கால்ப்பில் உள்ள எண்ணெய் பசை நீங்கி, கூந்தல் வறட்சியடைந்து, உதிர ஆரம்பிக்கும். ஆகவே இதைத் தவிர்ப்பதற்கு, வாரத்தில் 2-3 தடவை மட்டும் கூந்தலை அலச வேண்டும்.

சல்ஃபேட் இல்லாத ஷாம்புவை பயன்படுத்துங்கள்
சலவைப் பொருள் தயாரிப்பதற்கான பொதுவான மூலப்பொருள் சல்ஃபேட் ஆகும். உடலை அல்லது முடியை அலசும் போது, இது அதிகமான நுரையை உருவாக்குகிறது. துரதிர்ஷ்டவசமாக, இது தலையில் உள்ள ஈரப்பதத்தை நீக்குகிறது. இந்த உலர்வுத் தன்மை, முடி வெடிப்பை அதிகமாக்குகிறது. ஆகவே சல்ஃபேட் இல்லாத ஷாம்புகள் மென்மையான சலவைப் பொருட்களை கொண்டிருப்பதால், இதைப் பயன்படுத்துவதன் மூலம் முடியைப் பாதுகாக்க முடியும். உதாரணமாக, சீகைக்காய் கொண்டு கூந்தலை அலசலாம்.

எப்போதும் கண்டிஷனர் பயன்படுத்துங்கள்
கண்டிஷனர் முடியின் முனைகளை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்துக் கொள்ளும் ஆற்றலைக் கொண்டது. இது தலைமுடியை ஈரத்தன்மையுடன் வலிமையாக பராமரித்து, கூந்தலுக்கு நீண்ட ஆயுளை அளிக்கிறது. ஆகவே ஷாம்புவைப் பயன்படுத்தும் போதெல்லாம், அழகான மற்றும் வலிமையான தலைமுடியைப் பெற, இறுதியில் கண்டிஷனர் பயன்படுத்த மறவாதீர்கள்.

தலைமுடியைக் காற்றில் உலர விடுங்கள்
தலைமுடியை இலகுவாகவும், விரைவாகவும் ப்லோ-ட்ரையிங் செய்ய முடியும். ஆனால் நேச்சுரல் ஏர்-ட்ரையிங் செய்வது முடிக்கு ஆரோக்கியமானது. ப்லோ-ட்ரையர்கள் உலர்ந்த காற்றை வெளியேற்றுவதால், தலைமுடியின் நீர்த்தன்மை ஆவியாகிறது. இதனால் தலைமுடி எளிதில் உடையக்கூடிய நிலையை அடைந்து, முடி சேதம் அதிகமாகிறது. ஆகவே எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் தலைமுடியை காற்றில் உலரவிடுங்கள்.

தலைமுடியை உலர வைக்கும் உபகரணங்களைத் தவிர்க்கவும்
ப்லோ-ட்ரையரும் இதில் ஒன்று, சுருட்டை தலைமுடி சாதனம், பிளாட் தலைமுடி சாதனம், கிரிம்பர்கள், ஹேர் ஸ்ட்ரெயிட்னர்கள் மற்றும் ஏனைய முடியை சரி செய்யும் சாதனங்கள் ஆகியவற்றில் வெப்பத்தின் மூலம் உபயோகப்படுத்துவதால், இவை நாளடைவில் தலைமுடிக்குத் தீவிர சேதத்தை ஏற்படுத்துகின்றன. ஆகவே இவற்றைப் பயன்படுத்துவதைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். ஒருவேளை இவற்றை முற்றிலும் தவிர்க்க முடியாதென்பதால், இவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்னர், வெப்ப பாதுகாப்பு ஸ்ப்ரே அல்லது சீரம்களைப் பயன்படுத்துதல் சிறந்தது.

தலைமுடியை செயற்கையாக பெர்மிங் செய்யாதீர்கள்
தலைமுடியில் சுருள்களை ஏற்படுத்துவதற்கான ஒரு கெமிக்கல் செயல்முறை தான் பெர்மிங் ஆகும். துரதிர்ஷ்டவசமாக, இந்த கெமிக்கல் முடியின் புரதக்கட்டுகளை உடைப்பதால், தலைமுடி சேதம் அடைவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. ஆகவே பெர்மிங் செய்வதைத் தவிர்த்து, சேதம் ஏற்படும் சிகிச்சைகளிலிருந்து கூந்தலைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

முறையாக ட்ரிம் செய்யுங்கள்
தலைமுடியின் சேதத்தை குறைக்க ட்ரிம்மிங் செய்வது, முடியை அதிக சேதத்திலிருந்து பாதுகாக்க மிக முக்கியமானதாகும். முடி வளரும் போது, முடியின் முனைகளில் வெடிப்பு ஏற்பட்டு, முடி சேதமடையும் வாய்ப்பு அதிகமாகிறது. ஆகவே முடியை ட்ரிம்மிங் செய்வதால், முடியின் முனைகளில் வெடிப்புக்களைத் தவிர்க்க முடியும்.

தலைமுடி ஈரமாக இருக்கும் போது சீவுவதைத் தவிர்க்கவும்
தலைமுடி ஈரமாக இருக்கும் போது, தலை சீவுதல் மிகப்பெரிய தவறாகும். முடி ஈரமாக இருக்கும் போது, முடியின் ஹைட்ரோஜன் கட்டிகள் உடைகின்றன. இதனால் தலைமுடி சேதம் ஏற்பட்டு, முடி கொட்டுதல் அதிகமாகிறது. ஆகவே தலைமுடி ஈரமாக இருக்கும் போது, சீவுதல் மற்றும் முடியை சிக்கெடுத்தல் ஆகியவற்றைத் தவிர்த்து, முடி உதிர்வதிலிருந்து தலைமுடியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

தலைமுடிக்கு வர்ணம் பூசுவதைத் தவிர்க்கவும்
பெராக்சைடு அல்லது அம்மோனியாவைப் பயன்படுத்தி கலரிங் செய்வதன் மூலம், தலைமுடியின் ஹைட்ரோஜன் தன்மை மாற்றப்படுகிறது, இது தலைமுடிக்குள் இருக்கும் புரோட்டீன்களை உடைக்கிறது. இதனால் முடி சுலபமாக உடையும் நிலையை அடைந்து, முடி கொட்டுதல் அதிகமாகிறது. ஆகவே, இவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் கெமிக்கலைப் பயன்படுத்தி, கலரிங் செய்வதைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக இயற்கை முறைகளைக் கையாளுங்கள்.

தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்ய மறக்காதீர்கள்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியர்கள், தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்து, தலைமுடியை மிருதுவாக பராமரித்து வருகின்றனர். குறைந்தது வாரத்தில் இரண்டு தடவை, தேங்காய் எண்ணெயை உச்சந்தலையில் தடவி, தலைமுடியை மெதுவாக மசாஜ் செய்வதன் மூலம், அழகான மற்றும் வலிமையான தலைமுடியைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications