Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
முடி உதிராமல் இருக்க முடியை கட்டுங்க!

1. இரவில் தூங்கும் போது தலைக்கு ஸ்கார்ப் கட்ட வேண்டும். ஏனென்றால் முடியானது இரவில் வறண்டு, தளர்ந்து விடும். ஆனால் ஸ்கார்ப் கட்டினால் வறண்டுவிடாமல் இருக்கும். அதுவும் நீளமான முடி, சுருட்டை முடி இருப்பவர்கள் கட்டினால் நல்லது. இதற்கு முக்கிய காரணம், அப்படி கட்டினால் முடி சிக்காகாது. மேலும் வெளியே செல்லும் போது கட்டினால் சூரிய கதிர், அசுத்தக் காற்று மற்றும் தூசி போன்றவற்றிலிருந்து முடியைப் பாதுகாக்கலாம். இப்படி செய்தால் முடி ஆரோக்கியமாக இருக்கும்.
2. இரவில் படுக்கும் முன் முடியை கட்டிக் கொண்டு படுக்க வேண்டும். ஏனென்றால் படுக்கும் போது நாம் ஒரே நிலையில் படுக்கமாட்டோம். இதனால் முடி சிக்கடைந்து, காலையில் நாம் தலை பின்னும் போது முடி கொத்து கொத்தாக வரும். ஆகவே முடியை கட்டினால் முடி உதிராது.
3. முடியைக் கட்ட நல்ல ரப்பர் பேண்டை வைத்து கட்ட வேண்டும். அப்படி ரப்பர் பேண்டை வைத்து கட்டும் போது, அந்த ரப்பர் பேண்ட் அந்த முடியை அறுக்கும் அளவுக்கு இல்லாமல், பார்த்து வாங்க வேண்டும். ரப்பர் பேண்டானது நன்கு பளபளப்பான துணி அல்லது சில்க் துணியில் இருந்தால் மிகவும் நல்லது.
4. கோடையில் சிறந்த ஹேர் ஸ்டைல்-னு சொன்னா அது போனி டைல். இதனால் முடி உதிராமல், உடையாமல் இருக்கும். ஆனால் முடியை விரித்து கொண்டு இருந்தால் காற்றில் உள்ள தூசிகள் முடியில் நுழைய ஈஸியாகிவிடுவதால், முடி உடைந்து உதிரும். மேலும் போனி டைல் ஒரு சிறந்த ஹேர் ஸ்டைலும் கூட.
இவ்வாறெல்லாம் செய்தால் முடி உதிராமல் ஆரோக்கியமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications