Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
கூந்தலை மென்மையாக்கும் முட்டை!!!

சரி, இப்போது இந்த முட்டையை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!
1. இரண்டு முட்டையை உடைத்து, அதன் மஞ்சள் கரு பகுதியை ஒரு பௌலில் விட்டு அத்துடன் சிறிது ஆமணக்கெண்ணெய் மற்றும் சிறிது தண்ணீர் கலந்து, முடிகளின் மயிர்கால்களில் நன்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின் மெதுவாக மசாஜ் செய்து குளித்தால், முடியானது பட்டு போல இருக்கும். பொடுகு இருப்பவர்கள் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து தடவவும்.
2. முடி நன்கு வளர வேண்டுமென்றால், மஞ்சள் கருவுடன் சிறிது பாதாம் எண்ணெய்யை விட்டு கலந்து தடவி ஊற வைத்து குளிக்கவும்.
3. முட்டையில் ஹேர் மாஸ்க் செய்ய வேண்டுமென்றால், ஒரு முட்டையுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கூந்தல் முழுவதும் தடவி 10-15 நிமிடம் வரை ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்கவும். இது ஒரு சிறந்த ஹேர் கண்டிசனர்.
4. இரண்டு முட்டையை உடைத்து ஒரு பௌலில் ஊற்றி, தலைக்குத் தடவி 3 நிமிடம் மசாஜ் செய்து, பின் ஷாம்பு போட்டு குளித்து, சிறிது வினிகரை நீரில் விட்டு அதனை தலைக்கு ஊற்றி, பிறகு குளிர்ந்த நீரில் அலசினால், முடியானது மென்மையாக இருக்கும்.
5. முட்டையுடன் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை பழச்சாற்றை விட்டு கலந்து கூந்தலுக்கு தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் அலசினால் முடி அழகாக பட்டுப்போல் மின்னும்.



Click it and Unblock the Notifications