Latest Updates
-
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு!
முடி கொட்டுவதை நிறுத்த இயற்கை எண்ணெயை யூஸ் பண்ணுங்க...
தற்போது இருக்கும் பிரச்சனைகளிலேயே பெரும் பிரச்சனையாக இருப்பது கூந்தல் உதிர்வது தான். இதனால் தற்போது அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் மாசற்ற சுற்றுச்சூழல், சரியான பராமரிப்பு இல்லாதது போன்றவைகளே, இந்த பிரச்சனைகளுக்கு பெரும் காரணம். அதுமட்டுமல்லாமல், கூந்தலுக்கு போதிய சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளையும் சரியாக சாப்பிடுவதில்லை. இவ்வாறெல்லாம் இருந்தால், கூந்தல் கொட்டாமலா இருக்கும். ஆகவே அத்தகைய கூந்தல் உதிர்தலைத் தடுக்க சில ஈஸியான டிப்ஸ் இருக்கிறது. அதைப் படித்து செய்து பாருங்களேன்...

* தேங்காய் எண்ணெய் - அனைவருக்கும் நன்கு தெரிந்த எண்ணெய் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான். ஏனென்றால் தேங்காய் எண்ணெய் தான் கூந்தல் உறுதிக்கும், முடியின் வேர்கள் வலுவடைவதற்கும் சிறந்தது என்று நம் முன்னோர்கள் எல்லாம் சொல்வார்கள். அதேப்போன்றும் இந்த எண்ணெயும் உண்மையில் சிறந்தது தான். ஆகவே தேங்காய் எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தடவி, மசாஜ் செய்து குளித்து வர வேண்டும். வேண்டுமென்றால், தேங்காய் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு மசாஜ் செய்தால், பொடுகு போய்விடும்.
* கடுகு எண்ணெய் - கூந்தல் உதிர்தலுக்கு கடுகு எண்ணெயுடன், மருதாணியை சேர்த்து, தேய்த்து வந்தால், கூந்தல் உதிர்தல் ஏற்படாமல் தடுக்கலாம். அது எப்படியென்றால், முதலில் கடுகு எண்ணெயுடன், சிறிது மருதாணி இலைகளை போட்டு, காய வைத்து, பின் அதில் உள்ள இலைகளை நீக்கி, ஸ்கால்ப் மற்றும் கூந்தலுக்கு தடவ வேண்டும். இதனால் கடுகு எண்ணெயில் இருக்கும் ஒமேகா-3, கூந்தல் வளர்ச்சியை ஏற்படுத்தும்.
* ஆமணக்கெண்ணெய் - கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்த எண்ணெய் ஆமணக்கெண்ணெய் தான். இந்த எண்ணெயை ஸ்கால்பிற்கு மட்டும் தடவ வேண்டும். கூந்தல் முழுவதும் தடவினால், பின் அந்த எண்ணெய் பசையை நீக்குவது என்பது கடினமாகிவிடும். ஆகவே இந்த எண்ணெயை இரவில் படுக்கும் போது தலைக்கு தடவி, தலைக்கு துணியைச் சுற்றி, பின் காலையில் எழுந்து குளித்துவிட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், இதன் பலனை சில வாரங்களில் தெரிந்து கொள்ளலாம்.
* மீன் எண்ணெய் - உண்மையில் மீன் எண்ணெய் கூந்தல் உதிர்வதை நிறுத்தி, முடி வளர்ச்சியில் பெரிதும் பயன்படுகிறது. என்ன மீன் எண்ணெய் என்று சொன்னதும் எப்படி அதைப் போய் தேய்ப்பது என்று யோசிப்பீர்களே! மீன் எண்ணெயை தலைக்கு தடவினால், கூந்தல் நாற்றத்தை தாங்க முடியாது தான். ஆகவே அதற்கு பதிலாக மீன் எண்ணெய் மாத்திரைகளை வாங்கி சாப்பிடலாம். இதனால் கூந்தல் உதிராமல், ஆரோக்கியமாக வளரும்.
ஆகவே மேற்கூறியவற்றில், ஏதேனும் ஒன்றை செய்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக, அடர்த்தியாக வளரும்.



Click it and Unblock the Notifications
