Latest Updates
-
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு!
மென்மையான கூந்தல் வேண்டுமா? தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணுங்க...

தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்- கூந்தலை நன்கு ஈரப்பசையோடு வைப்பதில் தேங்காய் எண்ணெயும், தேனும் மிகவும் சிறந்தது. ஆகவே அதற்கு 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை கலந்து, ஸ்கால்ப்பிற்கு தடவி, சிறிது நேரம் மசாஸ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்புவால் கூந்தலை அலச வேண்டும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் ஹென்னா- ஹென்னா கூந்தல் உதிர்தலைத் தடுக்கும். அதேசமயம் வறட்சியை ஏற்படுத்தும். ஆகவே கூந்தல் வறட்சியடையாமலும், உதிராமலும் இருக்க, ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை, ஹென்னாவுடன் கலந்து, கூந்தலுக்கு தடவி, ஊற வைத்து பின் குளிக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெய், தயிர் மற்றும் எலுமிச்சை- முட்டையை உடைத்து, ஒரு பௌலில் ஊற்றி, அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்கு கலந்து, கூந்தலுக்கு தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்து வந்தால், கூந்தல் நன்கு பொலிவோடு, மென்மையாக இருக்கும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் பூந்திக்கொட்டை- இது ஒரு சிறந்த ஹேர் மாஸ்க். அதற்கு சிறிது தேங்காய் எண்ணெயுடன், 3-4 டேபிள் ஸ்பூன் பூந்திக் கொட்டை பவுடரை போட்டு கலந்து, முடிக்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் உதிர்வது நிற்பதோடு, கூந்தலின் முனைகளில் ஏற்படும் வெடிப்பும் குறைந்துவிடும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை- தேங்காய் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, சிறிது மசாஜ் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தல் நன்கு எண்ணெய் பசையுடன இருப்பதோடு, பொடுகு இல்லாமலும் இருக்கும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் முட்டை- கூந்தல் நன்கு ஆரோக்கியத்துடன் பட்டுப் போன்று இருக்க, தேங்காய் எண்ணெயுடன் முட்டையை கலந்து, கூந்தலுக்கு தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும். முக்கியமாக குளிக்கும் போது நன்கு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இல்லையெனில் முட்டை வாசனை வரும்.
ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, மென்மையாக பொலிவோடு காணப்படும்.



Click it and Unblock the Notifications
