Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
அழகோடு ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா?

ஆரோக்கியமற்ற உணவு மற்றும் இரும்பு சத்து குறைவான உணவு பழக்கவழக்கம். மன உளைச்சல், கோபம், படபடப்பு போன்றவைகளினால் கூந்தல் உதிர்கிறது.
அளவுக்கதிகமான வெயில், உப்புக் காற்று, குளோரின் கலந்த நீர் மற்றும் சுற்றுப்புற மாசு. கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் சிகிச்சைகள். கூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது மற்றும் அழுக்கடைந்த சீப்பை பயன்படுத்துவது போன்றவைகளினாலும் கூந்தல் உதிர்கிறது.
ஆரோக்கியமான, நீளமான, அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்பவர்கள் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். வைட்டமின், தாதுச்சத்துள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் தலைமுடி உதிர்வது குறையும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
ஊட்டச்சத்துக்கள்
தலைமுடி ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க வைட்டமின் ஏ, வைட்டமின் பி காம்ளக்ஸ் உணவுகள் குறிப்பாக பி6 அவசியம். அதேபோல் வைட்டமின் சி, பீட்டா கரோட்டீன் போன்றவை உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். மெக்னீசியம், சல்பர், துத்தநாகம் போன்றவையும் அவசியம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
செம்பருத்தி இலைகள்
வெண்ணெயை வாரம் ஒரு முறை தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து சிகைக்காய் போட்டு குளிக்க அடர்த்தியான முடி வளரும்.
சிகப்பு செம்பருத்தி செடி இலை எடுத்து அரைத்து, அதை தலையில் தேய்த்து குளிக்கவும்.நல்ல,குளிர்ச்சியாக இருக்கும், உடல் சுடு தனியும்,அடர்த்தியா கருப்பாக முடி வளரும்.வாரம் இருமுறை குளிக்கலாம்.
செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றைக் கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிது கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு குளித்தால், தலை "ஜில்' லென்றிருக்கும். தலை முடி "புசுபுசு'வென ஜொலிக்கும். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை இவ்வாறு குளிக்கலாம் தலைமுடி அடர்த்தியாகும்.



Click it and Unblock the Notifications