Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
கூந்தலை காக்கும் கொப்பரை தேங்காய்!

கொப்பரை பேஸ்ட்
கொப்பரைத் தேங்காயை மெலிதாகச் சீவி பின் அதை மிக்ஸியில் மைய அரைத்துக் வைத்து கொள்ள வேண்டும். தலைக்குத் தேய்த்துக் குளித்த மறுநாள் தலைமுடியின் மயிர்க்கால்களில் இந்த பேஸ்ட்டை நன்கு அழுத்தி தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பின் வெறும் தண்ணீரில் அலசுங்கள். உங்கள் கூந்தல் உறுதியாகவும், பட்டுப் போலவும் மாறும்.
இளநரை மறையும்
தேங்காயையும், பீட்ரூட்டையும் சம அளவு எடுத்து அதை நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை தலை முழுக்கத் தடவி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு வெறும் தண்ணீரில் அலசுங்கள். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் இளநரை படிப்படியாக மாறி விடும்.
தேங்காயைப் போல இயற்கையில் கிடைக்கும் சீரகம், சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
முடி உதிர்வை தடுக்க
தேங்காய்ப் பாலை தலையில் தேய்த்து வந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்து அதை தண்ணீரில் கலந்து, மிதமாக சூடுபடுத்தி தலையில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்த பின், குளிக்க வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் நல்ல பலன் கிடைக்கும்.
சீரகத்தை நன்கு கறுப்பாகும் வரை வறுத்து பொடி செய்து பின் அதை ஆலிவ் ஆயிலுடன் கலந்து வைக்கவும். இந்த எண்ணெயை, தலையில் தேய்க்கும் முன் நன்கு கலக்கி விட்டு தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் சிறிது நேரம் நன்றாக ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வது நாளடைவில் குறையும்.
நரையை தடுக்க
எள்ளுச் செடியின் இலைகள் சிலவற்றை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஆற வைக்கவும். இந்த தண்ணீரை தலையில் மசாஜ் செய்வதற்கும், தலையில் தேய்த்து குளிப்பதற்கும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் கூந்தல் உதிர்வு மற்றும் கூந்தலில் விரைவிலேயே நரை ஏற்படுவது போன்றவை தடுக்கப்படும்.
கூந்தல் வளர்ச்சி அதிகரிக்க
கூந்தல் உதிர்தல் பிரச்னைக்கு பூண்டு மிக சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பூண்டு ஆயில் மற்றும் பூண்டு சாறு ஆகியவற்றால் தலையில் நன்கு மசாஜ் செய்து வந்தால் கூந்தலின் அடர்த்தி அதிகரிக்கும். தினமும் உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வதும் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications