Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப வெந்தயத்தை வாரம் ஒருமுறை இப்படி யூஸ் பண்ணுங்க...
Hair Care Tips In Tamil: தற்போது இவ்வுலகில் உடல் பருமனுக்கு அடுத்தப்படியாக தலைமுடியைப் பற்றி தான் நிறைய பேர் வருத்தப்படுகிறார்கள். ஏனெனில் தலைமுடியானது ஒருவரது தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்ட உதவுகிறது. ஆனால் அப்படிப்பட்ட தலைமுடியானது மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தின் காரணமாக அதிகம் உதிரத் தொடங்குகிறது. அதோடு முடியின் வளர்ச்சியும் குறைகிறது.
இப்படி தலைமுடி அதிகம் உதிர்வதால், நிறைய பேரின் தலைமுடி அடர்த்தியை இழந்து எலிவால் போன்று காட்சியளிக்கிறது. உங்கள் தலைமுடியும் இப்படி அடர்த்தியை இழந்துள்ளதா? மேலும் தலைமுடி வளராமல் இருக்கிறதா? அப்படியானால் தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டவும், அதன் அடர்த்தியை அதிகரிக்கவும் உதவும் ஏராளமான பொருட்கள் நம் வீட்டு சமையலறையில் உள்ளது. அதில் ஒன்று தான் வெந்தயம்.

இந்த வெந்தய விதைகளானது தலைமுடியின் மயிர்கால்களுக்கு ஊட்டமளித்து, அதன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். ஏனெனில் வெந்தயத்தில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இது தலைமுடியை வலுவடையச் செய்து, முடி உதிர்வதைக் குறைக்கும். இப்படிப்பட்ட வெந்தயத்தை நாம் பலவாறு பயன்படுத்தலாம். இப்போது தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் காண்போம்.
1. ஹேர் மாஸ்க்
* ஒரு பௌலில் வெந்தய பொடியை எடுத்து, அதில் தேங்காய் பால் மற்றும் கற்றாழையின் ஜெல்லை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* வேண்டுமானால், இத்துடன் ஹென்னா பொடியை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் தலைமுடி ஈரப்பதத்துடன் இருக்கும்.
* பின் இந்த கலவையைதலைமுடியில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.
2. வெந்தய டீ
* சிறிது வெந்தய விதைகளை 1 டம்ளர் நீரில் போட்டு, நன்கு முக்கால்வாசி வரும் வரையில் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* வெந்தயத்தைக் கொண்டு தயாரித்த இந்த டீயை குடிப்பதற்கு பதிலாக, தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மைல்டு ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை வெந்தய டீயை தலைமுடிக்கு பயன்படுத்தி வந்தால், தலைமுடி வலிமையாகவும், அடர்த்தியாகவும் வளரத் தொடங்கும்.
* வேண்டுமானால், வெந்தய டீயை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அதை முடியின் மயிர்கால்களில் படும் படி ஸ்ரே செய்து, 15-30 நிமிடம் ஊற வைத்தும் அலசலாம்.
3. வெந்தய எண்ணெய்
* ஒரு பௌலில் சிறிது சியா வெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை ப்ரீசரில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒவ்வொரு முறை தலைக்கு குளிக்கும் போது, தலையில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இறுதியாக கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும்.
4. ஆளி விதை ஜெல்
* உங்களுக்கு சுருட்டை முடி என்றால், வெந்தயம் மற்றும் ஆளி விதையை சுடுநீரில் போட்டு நன்கு ஜெல் போன்று வரும் வரை ஊற வைக்க வேண்டும்.
* நன்கு ஜெல் போன்று வந்ததும், அதை தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த பேக்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துவதன் மூலம், தலைமுடி நன்று வளர்ச்சி அடையும்.
5. வெந்தயம் மற்றும் எலுமிச்சை
உங்கள் தலைமுடி நன்கு நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர நினைத்தால் மற்றும் பொடுகு இல்லாத முடியைப் பெற விரும்பினால், வெந்தய பொடியை சிறிது எடுத்து, 3-4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, அதை தலைமுடியில் வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், முடியின் வளர்ச்சியில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
6. வெந்தயம் மற்றும் தயிர்
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் வெந்தய பொடியை எடுத்து, அத்துடன் 1 கப் தயிரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.



Click it and Unblock the Notifications
