Latest Updates
-
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
உங்க தலைமுடி ரொம்ப டேமேஜ் ஆகிருக்கா? அப்ப வாரம் 1 முறை காபித் தூளை வெச்சு இந்த ஹேர் மாஸ்க் போடுங்க..
Hair Care Tips In Tamil: தற்போதைய பரபரப்பான காலகட்டத்தில் நமது அழகின் மீது அதிக அக்கறை காட்ட முடிவதில்லை. முக்கியமாக தலைமுடியின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியாமல், நிறைய பேர் தலைமுடி உதிர்வு, பொடுகுத் தொல்லை, முடி வெடிப்புகள், முடி வறட்சி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.
இப்படி தலைமுடியில் நிறைய பிரச்சனைகளை சந்திப்பதால், அதை எப்படி சரிசெய்வதென்று தெரியாமல், சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். உண்மையில் தலைமுடியில் இவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க காரணம் மோசமான உணவுப் பழக்கம், மன அழுத்தம் மற்றும் முடி பராமரிப்பு பொருட்கள் போன்றவைகள் தான். எனவே தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமானால், தலைமுடிக்கு போதுமான பராமரிப்புக்களை கொடுக்க வேண்டும்.

அதுவும் சத்துக்கள் நிறைந்த இயற்கை பொருட்களை கொண்டு முடிக்கு பராமரித்து கொடுத்து வந்தால், சேதமடைந்த முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒரு அற்புதமான பொருள் தான் காபித் தூள்.
இந்த காபித் தூளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பிற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. இந்த காபித் தூள் கொண்டு ஒருசில ஹேர் மாஸ்க்குகளை போட்டு வந்தால், முடியின் ஆரோக்கியம் மேம்படுவது மட்டுமின்றி, முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும். இப்போது முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில காபி ஹேர் மாஸ்க்குகளைக் காண்போம்.
1. காபித் தூள் மற்றும் முட்டை மஞ்சள் கரு
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூளை எடுத்து, அத்துடன் 1 முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி, குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
2. தயிர், காபித் தூள் மற்றும் எலுமிச்சை சாறு
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 கப் தயிரை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூளை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் பாதி எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தலைமுடியில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
3. காபித் தூள் மற்றும் மயோனைஸ்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது மயோனைஸ் மற்றும் சிறிது கிளிசரின் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை ஈரமான தலைமுடியில் தடவி 50 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும்.
4. காபித் தூள் மற்றும் தேன்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூளை எடுத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து, அத்துடன் சிறிது நீரை ஊற்றி கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க் தலைமுடியை வலிமையாக்குவதோடு, மென்மையாக்கும்.
5. காபித் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு கிண்ணத்தில் 1/2 கப் தேங்காய் எண்ணெய் எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூளை சேர்த்து குறைவான தீயில் சூடேற்ற வேண்டும்.
* பின் அதை வடிகட்டி, வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு குளிக்கும் முன் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டும் மற்றும் ஸ்கால்ப்பை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
