Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
முடி அதிகமா கொட்டுதா? அப்ப இந்த உணவுகளை அதிகமா சாப்பிடாதீங்க.. இல்ல சீக்கிரம் வழுக்கையாகிடும்..
Hair Care Tips In Tamil: தற்போது தலைமுடி உதிர்வு பிரச்சனையால் நிறைய பேர் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பொதுவாக ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தலைமுடி உதிர்வது சாதாரணம். எத்தனை முடி கொட்டுகிறதோ, அத்தனை முடி வளரும் என்பார்கள். ஆனால் சில சமயங்களில் தலைமுடியானது கொத்து கொத்தாக கொட்டும். இப்படியான சூழ்நிலை ஒருவருக்கு மிகுந்த வேதனையை தரும்.
பொதுவாக தலைமுடி ஒருவருக்கு அதிகமாக கொட்டுவதற்கு மரபியல் காரணிகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், மன அழுத்தம் போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், நாம் உண்ணும் ஒருசில உணவுகளும் நம் தலைமுடியின் ஆரோக்கியத்தில் இடையூறை ஏற்படுத்தி, முடி உதிர்வை இன்னும் அதிகமாக்கும் என்பது தெரியுமா?

அதுவும் நாம் தினமும் சாப்பிடும் உணவுகள் தான் முடியில் சேதத்தை ஏற்படுத்தி, முடி உதிர்வையும், முடி மெலிந்து போகவும் செய்கின்றன. கீழே எந்த மாதிரியான உணவுகள் தலைமுடி உதிர்வை அதிகரிக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
சர்க்கரை
அளவுக்கு அதிகமாக சர்க்கரையை உட்கொண்டால், அது இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுத்து, ஆன்டிரோஜன் அளவுகளை அதிகரித்து மயிர்கால்களை சுருங்கச் செய்யும். இப்படி தொடர்ந்து சர்க்கரையை அதிகம் உட்கொள்ளும் போது, மயிர்கால்கள் பலவீனமாகி, முடி உதிரத் தொடங்கி, மெலிந்து போகச் செய்யும்.
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளான பிரட், பாஸ்தா போன்றவற்றை அதிகம் உட்கொள்ளும் போது, அந்த கார்போஹைட்ரேட் இரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தி, உட்காயங்களை ஏற்படுத்தும். இதன் தாக்கத்தால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, முடியின் ஆரோக்கியம் பலவீனமாகி, மயிர்கால்களை வலுவிழக்கச் செய்து, முடி உதிர்தலை அதிகரிக்கும்.
வறுத்த மற்றும் பொரித்த உணவுகள்
எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளில் ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள் அதிகமாக உள்ளன. இவை மயிர்கால்களில் அடைப்புக்களை ஏற்படுத்தி, ஸ்கால்ப்பின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். இதன் விளைவாக பொடுகுத் தொல்லை, அதிகப்படியான தலைமுடி உதிர்வை சந்திக்க நேரிடும்.
செயற்கை இனிப்புகள்
அஸ்பார்டேம் போன்ற செயற்கை இனிப்புகள் நிறைந்த உணவுகள் உடலின் மெட்டபாலிசத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, முடியின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அதுவும் தொடர்ந்து இந்த வகையான இனிப்பு நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தால், அது உடலின் முடி வளர்ச்சி சுழற்சியில் இடையூறை ஏற்படுத்தி, முடி உதிர்வை அதிகரிக்கும்.
அதிகளவு வைட்டமின் ஏ
பொதுவாக வைட்டமின் ஏ செல்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது. இந்த வைட்டமின் ஏ-வை அதிகமாக எடுக்கும் போது, அது முடி முடி நுண்குழாய்களை அதிகமாகத் தூண்டி, அவற்றை ஓய்வு நிலைக்குத் தள்ளும். இதன் மூலம் தலைமுடி கணிசமான அளவில் உதிரத் தொடங்கும். எனவே அளவுக்கு அதிகமாக வைட்டமின் ஏ-வை எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.
அதிக பாதரசம் நிறைந்த மீன்
பாதரசம் அதிகம் நிறைந்த ஸ்வார்டு மீன், கிங் கானாங்கெளுத்தி போன்றமீன்களை அடிக்கடி வாங்கி உட்கொண்டால், உடலில் பாதரசத்தின் அளவு அதிகரிக்கும். இப்படி பாதரசத்தின் அளவு அதிகரிக்கும் போது, அது தலைமுடி உதிர்வதை அதிகரித்து, முடியை எலிவால் போன்று மெலிந்து போகச் செய்யும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் அனைத்தும் தலைமுடி உதிர்வதை அதிகரிக்கும் மோசமான உணவுகளாகும். உங்களுக்கு ஏற்கனவே முடி அதிகம் உதிர்ந்தால், இந்த உணவுகளை அதிகம் உண்பதைத் தவிர்த்திடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
