Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப முட்டையை வாரம் 1 முறை இப்படி யூஸ் பண்ணுங்க..
Hair Care Tips In Tamil: உங்களுக்கு தலைமுடி அதிகமா கொட்டுதா? இப்படி தலைமுடி அதிகம் உதிர்வதை நினைத்து அதிகம் வருத்தப்படுகிறீர்களா? அப்படியானால் இப்படி கவலைப்படுவதற்கு பதிலாக, தலைமுடி எந்த காரணத்தினால் உதிர்கிறது என்பதை கண்டறிந்து, அதை சரிசெய்ய முயற்சி செய்யுங்கள்.
பொதுவாக தலைமுடி உதிர்வதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதில் மன அழுத்தம், மரபணுக்கள், போதுமான ஊட்டச்சத்து இல்லாமை, தலைமுடி ஸ்டைலிங் பொருட்களைப் பயன்படுத்துவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. எனவே தலை அதிகமாக உதிர்ந்து எலிவால் போன்று மாறத் தொடங்கினால், நிறைய பணம் செலவழித்து சிகிச்சை மேற்கொள்ளும் முன், நம் வீட்டு சமையலறையில் உள்ள மருத்துவ குணம் வாய்ந்த பல பொருட்கள் உள்ளன.

அவற்றைக் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். அதுவும் தலைமுடிக்கு புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது. இந்த புரோட்டீன் முட்டையில் அதிகம் உள்ளது. எனவே இந்த முட்டையைக் கொண்டு தலைமுடிக்கு ஹேர் பேக் போட்டு வந்தால், முடி மெலிவதைத் தடுக்கலாம் மற்றும் தலைமுடியும் வலிமையாகும். இப்போது தலைமுடி உதிர்வதைத் தடுத்து, அதை வலிமையாக்க உதவும் சில முட்டை ஹேர் பேக்குகளைக் காண்போம்.
1. முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் பேக்
* இந்த ஹேர் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை மயிர்கால்களில் படும்படி தடவி, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரம் ஒருமுறை ஹேர் பேக் போட்டு வந்தால், தலைமுடி வலிமையாகி, முடி உதிர்வது தடுக்கப்படும்.
2. முட்டை மற்றும் தயிர் பேக்
* இந்த ஹேர் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தலைமுடியில் தடவி, 1/2 மணிநேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் பேக் முடியை வலிமைப்படுத்துவதோடு, தலைமுடியை பட்டுப்போன்று மென்மையாக வைத்துக் கொள்ள உதவும்.
3. முட்டை மற்றும் தேன் பேக்
* இந்த ஹேர் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* அதன்பின் அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தலைமுடியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.
4. முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய்
* இந்த ஹேர் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை தலைமுடியில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் பேக்கை வாரம் 1-2 முறை பயன்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
