Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
தலைமுடி பிரச்சனையை சரிசெய்ய இனி வீட்டிலேயே ஷாம்பு செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
Hair Care Tips In Tamil: இன்றைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரு பொதுவான கவலை கூந்தல் பிரச்சனை தான். இன்றைய சூழ்நிலை, மாசு நிறைந்த சூழல், உணவுப்பழக்கம் போன்றவை தான் கூந்தல் பிரச்சனைக்கு அடிப்படை காரணங்களாக அமைகின்றன. கூந்தல் பிரச்சனை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தான் வரும் என்பதில்லை.
கூந்தல் பிரச்சனை என்பது ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் எந்த வயதிலும் ஏற்படக்கூடிய ஒன்று. கூந்தல் உதிர்வு, இளநரை, பொடுகு தொல்லை, கூந்தல் வெடிப்பு என கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏராளம் உண்டு. அழகான கூந்தல் வேண்டும், வயதானாலும் வழுக்கை விழ கூடாது என்பது பலரது விருப்பம். அதற்கு கூந்தலை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். பல்வேறு விளம்பரங்களை பார்த்து கெமிக்கல் நிறைந்த புது புது கூந்தல் பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது எதற்கும் தீர்வாக அமைந்திடாது.

கூந்தல் பராமரிப்பு
கூந்தல் பராமரிப்பு என்பது கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்திடவும், கூந்தல் வளர்ச்சியைத் தூண்டும் விதமாகவும் இருக்க வேண்டும். இதற்கு கெமிக்கல் நிறைந்த பொருட்களைத் தவிர்த்து, இயற்கையான பொருட்களை கொண்டு உங்களது கூந்தலை பராமரிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பது, கெமிக்கல் நிறைந்த பொருட்களை தவிர்ப்பது, மசாஜ் செய்வது போன்றவை நல்ல தீர்வளிக்கும். ஆரோக்கியமான கூந்தலை பெற சரியாக கூந்தலை அலசுவது அவசியம்.
இயற்கை ஷாம்பு
நாம் பயன்படுத்தும் எந்தவொரு கூந்தல் பராமரிப்பு பொருளும் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால் மிகவும் நல்லது. அதற்காக கடைகளில் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டிலேயே ஆரோக்கியமான கூந்தலை பெற உதவும் ஷாம்பு தயாரித்திட முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? தாராளமாக நம்பலாம். அதுவும் க்ரீன் டீயை வைத்து எப்படி ஷாம்பு தயாரிப்பது என்று இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.
க்ரீன் டீ ஷாம்பு
க்ரீன் டீ ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. அந்த க்ரீன் டீயை வைத்து வீட்டிலேயே ஷாம்பு எப்படி தயாரிப்பது மற்றும் ஆரோக்கியமான கூந்தலைப் பெற அதை எப்படி பயன்படுத்துவது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
தேவையான பொருட்கள்:
* க்ரீன் டீ இலைகள்
* பெப்பர்மின்ட் ஆயில்
* எலுமிச்சைச் சாறு
* தேங்காய் எண்ணெய்
* தேன்
* ஆப்பிள் சிடர் வினிகர்
கிரீன் டீ ஷாம்பு செய்முறை:
* ஷாம்பு செய்வதற்கு முதலில் கிரீன் டீ இலைகளை நன்கு வெயிலில் உலர்த்தி எடுத்து, சுத்தமான ஜாரில் போட்டு, பொடி செய்து எடுத்து கொள்ளவும்.
* தயாரித்த இந்த கிரீன் டீ பொடியில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
* அடுத்ததாக, கலந்து வைத்துள்ள க்ரீன் டீ மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர் கலவையில் இரண்டு துளிகள் பெப்பர்மின்ட் ஆயிலை சேர்த்து கலக்கவும்.
* பிறகு இந்த கலவையில் எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து நன்கு பேஸ்ட் போல கலந்து கொள்ளவும்.
க்ரீன் டீ ஷாம்புவின் நன்மைகள்
* ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் பி, வைட்டமின் சி, அமினோ அமிலங்கள் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிரீன் டீயில் ஏராளமாக காணப்படுகின்றன.
* ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் இந்த ஷாம்பு கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.
* க்ரீன் டீயை பயன்படுத்தி ஷாம்பு தயாரித்து பயன்படுத்துவதால், கூந்தலில் காணப்படும் பொடுகு பிரச்சனை முழுவதுமாக நீங்கிடும்.
* கிரீன் டீ ஷாம்புவால் கூந்தலுக்கு மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, அடர்த்தியான மற்றும் வலுவான கூந்தலை பெற உதவும்.
பயன்படுத்தும் முறை
க்ரீன் டீ கொண்டு தயாரிக்கப்படும் ஷாம்புவை சாதாரண ஷாம்பு போலவே பயன்படுத்தலாம். கூந்தலை முதலில் ஈரமாக்கி கொண்டு, பின்னர் ஷாம்புவை கூந்தலில் தடவி 5 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்து பின்னர் அலசிடவும். வாரத்திற்கு 2 முதல் 3 முறை இதைப் பயன்படுத்துவதால் சிறப்பான பலனைப் பெற்றிடலாம்.



Click it and Unblock the Notifications
