Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
இந்த எண்ணெயை வாரம் 2 முறை யூஸ் பண்ணுங்க.. 7 நாளில் முடி கொட்டுறது உடனே நிக்கும்...
Onion Hair Oil To Reduce Hair Fall: தலைமுடி உதிர்வு என்பது ஆண், பெண் என இருபாலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இப்படி தலைமுடி அதிகம் உதிர்வதற்கு பெரும்பாலும் மன அழுத்தம், மாசுபாடு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் கெமிக்கல் கலந்த தலைமுடி பொருட்களின் பயன்பாடு ஆகியவை முக்கிய காரணங்களாகும். இது தவிர, தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இருந்தாலும், தலைமுடி பலவீனமடைந்து உதிரத் தொடங்கும்.
ஒருவர் தனக்கு தலைமுடி அதிகமாக உதிர்வதை உணர்ந்தால், உடனே அதை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அதுவும் நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்பதைத் தவிர, தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் எண்ணெய்களையும் பயன்படுத்தி வர வேண்டும். அப்படி தலைமுடியை வலுப்படுத்த உதவும் ஒரு அற்புதமான எண்ணெய் தான் வெங்காய எண்ணெய்.

இந்த வெங்காய எண்ணெய் தலைமுடியின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை உள்ளடக்கியது. இப்படிப்பட்ட வெங்காய எண்ணெயை கடைகளில் வாங்கி பயன்படுத்துவதை விட, வீட்டிலேயே தயாரித்து, பயன்படுத்தும் போது, முடி உதிர்வதை விரைவில் தடுத்து நிறுத்தலாம். இப்போது அந்த வெங்காய எண்ணெயை எப்படி வீட்டில் தயாரிப்பது என்பதையும், அந்த எண்ணெயினால் கிடைக்கும் நன்மைகளையும், அதைப் பயன்படுத்தும் விதத்தையும் காண்போம்.
வெங்காய எண்ணெயினால் கிடைக்கும் நன்மைகள்
வெங்காய எண்ணெய் தலைமுடிக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய். ஏனெனில் வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. இது கெராட்டீன் (முடியின் வளர்ச்சிக்கு தேவையான ஒரு அத்தியாவசிய புரோட்டீன்) உற்பத்திக்கு மிகவும் இன்றியமையாதது.
மேலும் இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் இருப்பதால், இது ஸ்கால்ப்பில் தொற்றுகள் ஏற்படாமல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். முக்கியமாக இந்த வெங்காய எண்ணெய் ஸ்கால்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது, மயிர்கால்கள் வலுவடைந்து, முடி உதிர்வதும், உடைவதும் குறையும்.
தேவையான பொருட்கள்:
* வெங்காயம் - 2-3
* தேங்காய் எண்ணெய் - 1/2 கப்
* லாவெண்டர் நறுமண எண்ணெய் - சில துளிகள்
தயாரிக்கும் முறை:
* முதலில் வெங்காயத்தை சற்று பெரிய துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, எண்ணெய் லேசாக சூடானதும், குறைவான தீயில் வைக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, 15-20 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* வெங்காயம் பொன்னிறமானதும், அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* எண்ணெயானது ஓரளவு குளிர்ந்ததும், அதை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் வடிகட்டிய அந்த எண்ணெயை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, அதில் சில துளிகள் லாவெண்டர் எண்ணெயை ஊற்றி கலந்து, குளிர்ச்சியான இடத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
தலைமுடி உதிர்வைக் குறைக்க வெங்காய எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும்?
* தலைமுடி அதிகம் உதிர்ந்தால், வெங்காய எண்ணெயை ஸ்கால்ப் முதல் முடியின் வேர் வரை தடவி, 5-10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின் அதை 30 நிமிடம் அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த எண்ணெயை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், 7 நாட்களில் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications