Latest Updates
-
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்! -
சிங்கப்பூர் வெஜ் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ரைஸ் செஞ்சா இனிமே ஹோட்டல் பக்கமே போகமாட்டிங்க
ஜப்பான் பெண்களின் பளபளக்கும் அழகு ரகசியத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் அழகுக்கலை நிபுணர் ஜெயஸ்ரீ...!
Skin Care Tips: என்னதான் நிறத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்று சொன்னாலும், தனது சரும நிறத்தை அதிகரிக்கும் முயற்சி அதிக அளவில் மக்களிடம் இருக்க தான் செய்கிறது. சிலசமயத்தில் வெயில், மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை காரணமாக நமது சரும நிறத்தில் கருமை ஏற்படுகிறது. இந்த நிற மாற்றத்தை ஏற்படுத்தும் மெலனின் எனப்படும் தோல் நிறமியின் அதிகரிப்பு சேதத்தின் அறிகுறியாகும்.
புற ஊதா கதிர்கள் தோலின் மீது பட்டவுடன், சருமத்தை மேலும் சேதத்திலிருந்து பாதுகாக்கும் முயற்சியில் மெலனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இவற்றை சரி செய்ய பணம் செலவழித்து பல வகை கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இவை தற்காலிக தீர்வை கொடுக்கின்றன. சிலர் இதுக்கான நிரந்தர தீர்வை தேடி அலைகிறார்கள்.

ஜப்பான் பெண்களின் தெளிவான மற்றும் கவர்ச்சிகரமான சருமத்திற்கு அவர்கள் பின்பற்றும் சில தனித்துவமான டிப்ஸ்கள்தான் காரணம். அந்த பயனுள்ள வீட்டு வைத்தியங்களை அழகுக்கலை நிபுணர் ஜெயஸ்ரீ நம்முடன் பகிர்ந்துள்ளார். அவற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பேக் 1:
முல்தானி மட்டி - 1 ஸ்பூன்
மோர் - தேவையான அளவு
செய்முறை:
முல்தானி மட்டியில் மோர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதை முகம், கை, மற்றும் கால் பகுதியில் மிருதுவாக மசாஜ் செய்து 30 நிமிடங்கள் வைத்திருந்து பின் கழுவவும். முல்தானி மட்டி காந்தத்தை போல் செயல்பட்டு முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், அழுக்கு, மற்றும் பருக்களை நீக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.
பேக் 2:
அன்னாசி - சில துண்டுகள்
தேன் - 1 ஸ்பூன்
செய்முறை:
வைட்டமின் சி சீரத்தை முகத்தில் பயன்படுத்தினால் நல்ல மாற்றத்தை தரும். கடைகளில் வைட்டமின் சி சீரத்தின் விலை அதிக அளவில் இருக்கும். அதற்கு மாற்றாக அன்னாசியை பயன்படுத்துவதின் மூலம் அதே பலனை பெறலாம். அன்னாசி பழ துண்டுகளை நன்றாக அரைத்து விழுது எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடவும்.
பேக் 3:
காபி தூள் - 1 ஸ்பூன்
வெள்ளை சர்க்கரை - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
செய்முறை:
காபி தூள், வெள்ளை சர்க்கரை, மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பின் கழுவவும். வைட்டமின் சி இருக்கும் பொருட்களை பயன்படுத்தும் போது 20 நிமிடங்களுக்கு மேல் வைத்திருக்காமல் இருப்பது நல்லது. எலுமிச்சை ஒவ்வாமை இருப்பவர்கள் அதற்கு மாற்றாக தக்காளி சாறு பயன்படுத்தலாம்.
பேக் 4:
தக்காளி - ½ பழம்
உருளைக்கிழங்கு - ½ பழம்
கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன்
செய்முறை:
தக்காளி பழம், உருளைக்கிழங்கு, மற்றும் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். உருளைக்கிழங்கு ஒவ்வாமை இருப்பவர்கள் அதற்கு மாற்றாக 1 ஸ்பூன் மசூர் பருப்பை 1-2 மணி நேரம் உற வைத்து சேர்த்து அரைத்து கொள்ளலாம். இது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதோடு, நல்ல பலனையும் தருகிறது. சிறந்த பலன்களை பெற இதில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications
