மெஹந்தியை கையிலிருந்து அவசரமா நீக்கணுமா? இந்த ஈஸியான ட்ரிக்ஸை ட்ரை பண்ணி பாருங்க...!

பண்டிகைகள், திருமணங்கள், மற்றும் திருவிழாக்கள் வந்துவிட்டால் கைகளில் மருதாணி வைப்பது நமக்கு பல தலைமுறைக்கு முன்பிருந்தே பின்பற்றி வருகிறோம். வடஇந்தியர்கள் திருமணத்தில் மருதாணி வைப்பது ஒரு நாள் சடங்காக இருக்கும். இப்போது அழகழகாக மெஹந்தி வைப்பது வழக்கமாகிவிட்டது. இது கொண்டாட்டங்களுக்கு அழகை சேர்க்கும் ஒரு அழகான பாரம்பரியம்.

ஆனால் பண்டிகைகள் முடிந்ததும், நம்மில் பலர் நீண்ட நாட்களுக்கு இருக்கும் சிவப்பை விரும்ப மாட்டார்கள். இது மங்குவதற்கு பல நாட்கள் ஆகலாம். பாரம்பரிய உடையில் இந்த சிவப்பு அழகாக தெரிந்தாலும் அலுவலக உடைக்கு மாறும் போது, சற்று சங்கடத்தை ஏற்படுத்தலாம். இதற்கான கவலை இனி தேவையில்லை. காரணம் சரியான குறிப்புகள் மற்றும் எளிதான வீட்டு தீர்வுகள் மூலம் இவற்றை நீக்க முடியும். கைகளில் இருந்து மெஹந்தியை உடனடியாக அகற்ற உதவும் 5 எளிய வழிகளை பார்க்கலாம்.

Easy Ways to Remove Mehendi From Hands Instantly

பேக்கிங் சோடா

எதையும் எளிதில் உரிக்கும் பண்புகள் நிறைந்த, எலுமிச்சை சாறை ½ கப் எடுத்து 2-3 டீ ஸ்பூன் பேக்கிங் சோடா உடன் கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். அதை சிவப்பு நிறத்தில் இருக்கும் இடத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். நிறத்தை குறைக்க உதவும் வகையில் பேஸ்ட்டை கடிகாரம் சுழலும் திசையில் மெதுவாக தேய்க்கவும்.

பின்னர் அந்த பகுதியை வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள். இந்த பேஸ்ட் சருமத்தில் வறட்சியை ஏற்படுத்துவதோடு, உரிந்து போகச் செய்யும் என்பதால், அதன் பின் சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவ கூடியவற்றை பயன்படுத்துங்கள். தேங்காய் எண்ணெய் கூட உபயோகிக்கலாம்.

தக்காளி ஜூஸ்

தக்காளி சாறில் சிட்ரிக் அமிலம் நிறைந்த இருக்கிறது. இது இயற்கையான எக்ஸ்ஃபோலியண்டாக செயல்பட்டுவதால் மருதாணி சாயத்தை அகற்ற உதவுகிறது. நன்றாக பழுத்த சிவப்பு தக்காளியை துண்டுகளாக நறுக்கி சாறு பிழிந்து எடுத்து கொள்ளவும். அந்த சாறை மெஹந்தி போட்ட இடத்தில் தடவவும்.

அதென்ன மேல் மீண்டும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக தேய்த்து விடவும். பின் வட்ட இயக்கத்தில் சுற்றி நன்றாக மசாஜ் செய்யவும். இந்த செயல்முறையை சில முறை திரும்ப திரும்ப செய்தால், அனைத்து கறைகளையும் நீக்கிவிடும். 15 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவி, உடலை ஈரப்பதமாக நீங்கள் உபயோகிப்பதை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Check out the easy ways to remove Mehendi from hands instantly

சர்க்கரை ஸ்க்ரப் மற்றும் தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயுடன் கலந்த சர்க்கரையை மற்றொரு சிறந்த சரும எக்ஸ்ஃபோலியேட்டர் எனலாம். இது சருமத்தை பிரகாசமாக்கும் திறன்களை கொண்டிருக்கிறது. 2 டீ ஸ்பூன் சர்க்கரையை 1 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இதை கை மற்றும் கால் பகுதிகளில் மென்மையாக தடவவும். மெஹந்தி போட்டு இருக்கும் இடத்தில் நன்கு சர்க்கரை கரையும் வரை மசாஜ் செய்யவும். பின் கைகளை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். பின் ஈரப்பதத்தை தக்க வைக்க நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் கிரீம் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

உப்பு நீர்

நீங்கள் பேஸ்ட் தயாரித்து பயன்படுத்த விரும்பவில்லை என்றால், உப்பு நீரை பயன்படுத்தலாம். இது அசுத்தங்களை நீக்கும் சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படும். இது மெஹந்தி கறையை சிறப்பாக நீக்குகிறது. இதற்கு ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை எடுத்து 5 டீ ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இது இறந்த சருமத்தை நிக்கி புதிய சருமத்தை பெற செய்யும்.

உங்கள் கைகளையும் கால்களையும் 20 நிமிடங்கள் இந்த தண்ணீரில் நனைத்து, மாற்றி மாற்றி உலர விடவும். இதனால் ஏற்படும் மாற்றத்தை உடனடியாக காண முடியும். பின்னர் சருமத்தை ஈரப்பதமாக்க சரும எண்ணெயை பயன்படுத்துங்கள்.

ஹேர் கண்டிஷனர்

இது உங்களுக்கு வித்தியாசமாக தோன்ற கூடும். ஆனால் ஹேர் கண்டிஷனரில் உள்ள வேதியியல் பண்புகள் சருமத்தை சேதப்படுத்தாமல் மருதாணியின் நிறத்தை மங்க செய்கிறது. தேவையான அளவு ஹேர் கண்டிஷனரை எடுத்து நீக்க வேண்டிய மருதாணி இருக்கும் இடத்தில் நன்றாக தேய்க்கவும். அதை 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிட்டு, பின் தண்ணீரில் கழுவவும். பின் கைகளில் ஈரப்பதத்தை தக்க வைக்க மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.

Story first published: Tuesday, July 8, 2025, 20:28 [IST]
Desktop Bottom Promotion