Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும்
இந்த பொருட்களை உங்க முகத்தில் அப்பளை பண்ணாதீங்க.. மிகவும் ஆபத்தானது.. அது என்னென்ன பொருள்கள் தெரியுமா?
சமூக ஊடகங்களில் பார்க்ககூடிய அழகு குறிப்புகள் அனைத்தையும் அப்படியே உங்கள் முகத்தில் அப்ளை பண்ணாதீர்கள்.. காரணம் அவை தோல் பலவிதமான பிரச்சினைகளை உண்டு பண்ணலாம்..
அதனால் அவை உங்களுக்கு பொருந்துமா? பொருந்தாதா? என ஆராய்ந்த பின்னரே ட்ரை பண்ணுங்கள்.. அப்படி கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாத பொருட்கள் என்னென்ன? அவற்றினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

1. பேஸ்ட்
பல் துலக்கும் பேஸ்டை முகத்தில் லெமனுடன் சேர்த்து அப்ளை செய்தால் முகம் பளபளக்கும் என்று பல சமூக ஊடகங்களில் வீடியோவாகவும் பதிவாகவும் பார்பீர்கள்.. ஆனால் அந்த பற்பசையில் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. இவை சரும துளைகளை அடைத்துவிடும். இது பருக்கள் , கரும்புள்ளிகளை உண்டாக்கும். மேலும் உங்க சருமம் எரிச்சலடையும்.. அதனால் சருமத்தில் வீக்கம் மற்றும் தடிப்பு ஏற்படும்..
2. சமையல் எண்ணெய்கள்
தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற சமையல் எண்ணெய்களை நேரடியாக முகத்தில் தடவக்கூடாது. சில தோல் வகைகளுக்கு அவை பொருந்தாது. ஆனால் சிலருக்கு பொருந்தலாம்.. அதனால் அவை உங்களுக்கு ஒத்துபோகுமா என்பதை அறிய முதலில் உங்கள் கைகளில் அந்த எண்ணெய்யை தடவி பாருங்கள்.. அதன் பிறகு அப்ளை பண்ணுங்கள்.. ஆனால் இது தோல் துளைகளை அடைத்து முகப்பருவுக்கு வழிவகுக்கிறது. இந்த எண்ணெய்களில் ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்புகள் அதிகம், இது முகப்பரு மற்றும் பிற தோல் பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. சில சமையல் எண்ணெய்களில் சருமத்தை எரிச்சலூட்டும் ரசாயனங்களும் இருக்கின்றன.. அதனால் இதனை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது..
3. வாசனை திரவியங்கள்
முகத்தில் பாடி லோஷன் போன்றனை வாசனை திரவியங்களை பயன்படுத்தும் பழக்கம் உங்களுக்கு இருக்கா? அப்படி இருந்தால், உடனடியாக அதை நிறுத்துங்கள். பாடி லோஷன்கள் கைகள், கால்கள், தொடைகள் மற்றும் முதுகு போன்ற உடலின் அடர்த்தியான தோல் உள்ள இடங்களில்தான் அப்ளை செய்ய வேண்டும்.. அது சருமத்தை ஈரப்பதமாக்குகின்றன. முகத்திற்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட க்ளென்சர்கள், மாய்ஸ்சரைசர்கள் மற்றும் சன்ஸ்கிரீன்களை மட்டும் பயன்படுத்துங்கள். எது சரி என்று தெரியவில்லை என்றால், தோல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
4. முடிக்கு பயன்படுத்தும் பொருட்கள்
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் முகத்தில் முடிக்காக வாங்கிய பொருட்களை பயன்படுத்த வேண்டாம். காரணம் அதில் உள்ள ரசாயனங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் சருமத்திற்க்கு எரிச்சலை உண்டாக்கும்.. வீக்கத்தை ஏற்படுத்தும். கூந்தல் பொருட்களில் உள்ள ரசாயனங்கள் முகத்தில் சொறி, சிவத்தல் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்...
5. வெந்நீர்
தினமும் குளிப்பது, முகம் கழுவுவது என அனைத்திற்கும் வெந்நீரை பயன்படுத்துபவரா நீங்கள்..? அப்போ குறைந்த பட்சம் முகத்தை மட்டுமாவது வெந்நீரில் கழுவுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.. அப்படி கழுவுவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். வெந்நீரில் உள்ள வெப்பம் சருமத்தை எரிக்கிறது, முகம் அதன் இயற்கை எண்ணெய்களை இழக்கிறது. இதனால் சருமம் வறண்டு, முகப்பரு மற்றும் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. வெந்நீர் சருமத்தின் நிறத்தையும் மாற்றுகிறது.



Click it and Unblock the Notifications