Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
உண்மையிலேயே உப்பு தண்ணீரில் குளித்தால் நரைமுடி பிரச்சினை வருமா?
Does Saltwater Cause Grey Hair: நம் ஆரோக்கியத்தை பேணுவதைப் போல நம் அழகையும் பேணுவது மிகவும் அவசியம். அந்த வகையில் கூந்தலை சிறந்த முறையில் பேண வேண்டும். ஆனால் நாம் இருக்கும் சூழலில் இருக்கும் சில சுற்றுப்புற காரணிகளால் நம் கூந்தல் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. அதில் ஒன்று தான் உப்பு தண்ணீரில் குளிப்பது.
நீங்கள் தலைக்கு குளிக்கும் போது உப்பு தண்ணீரில் குளித்தால் உங்கள் கூந்தல் பாதிப்படையுமா?. உப்பு தண்ணீரில் குளிப்பது சீக்கிரமே உங்கள் கூந்தலுக்கு நரைமுடி பிரச்சினை வருமா? இது போன்ற சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதத்தில் நிபுணர்கள் பல முக்கியமான விஷயங்களை இங்கு கூறுகின்றனர்.

மயிர்க்கால்களில் காணப்படும் மெலனோசைட்டுகள் தான் நம் முடிகளுக்கு நிறத்தை கொடுக்கிறது. நமக்கு வயதாகும் போது இந்த மெலனோசைட்டுகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். இதனால் தான் வயதாகும் போது நம் முடி நரைக்க ஆரம்பிக்கிறது. சரி வாங்க உப்பு தண்ணீரில் குளிப்பதால் உங்களுக்கு நரைமுடி பிரச்சினை வருமா என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
உப்பு நீர் உங்களுக்கு நரைமுடி பிரச்சினையை ஏற்படுத்துமா?
உப்பு நீர் நரைமுடி பிரச்சினையை உண்டாக்குகிறது. உப்பு நீரால் முடியின் தண்டுகள் சேதமடைந்து முடி வறண்டதாகவும் உடைந்து விடக் கூடியதாகவும் மாறுகிறது. இதனால் முன்கூட்டியே நரைமுடி பிரச்சினையை சந்திக்கின்றனர். அதே மாதிரி சூரிய ஒளியில் அதிக நேரம் கூந்தலை காட்டுவதும் உங்கள் கூந்தலை சேதப்படுத்தும். இதுவும் முன்கூட்டியே நரைமுடி பிரச்சினையை உண்டாக்குகிறது.
வெள்ளை முடிக்கான ஆபத்து காரணிகள்:
* உப்பு நீர் உங்கள் கூந்தலை சீக்கிரமே வெள்ளையாக்கி விடும்.
* உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிக்கு நரைமுடி பிரச்சினை இருந்தால் உங்களுக்கும் சீக்கிரமே நரைமுடி பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது.
* தைராய்டு கோளாறுகள் நரைமுடி பிரச்சினையை உண்டாக்குகிறது.
* வைட்டமின் குறைபாடுகள் நரைமுடி பிரச்சினையை உண்டாக்குகிறது.
ஆரோக்கியமான தலைமுடியை பராமரிக்க குறிப்புகள்
* முடியை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும்.
* கூந்தல் ஈரப்பதத்துடன் இருக்க கண்டிஷனரை பயன்படுத்துங்கள்.
* அதிகப்படியான ஹேர் ஸ்டைலிங் கருவிகளை தவிருங்கள்.
* புற ஊதாக் கதிர்வீச்சில் இருந்து கூந்தலை பாதுகாக்க வேண்டும்.
* வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சத்தான உணவை சாப்பிடுங்கள்.
* உங்களுக்கு நரைமுடி பிரச்சினை இருந்தால் உடனே சரும மருத்துவரை நாடுங்கள்.
உப்பு தண்ணீரில் குளித்தால் உங்கள் கூந்தலுக்கு ஏற்படும் பிரச்சினைகள்:
* உப்பு நீர் உங்கள் கூந்தலில் நீரிழப்பை ஏற்படுத்தும். இதனால் கூந்தல் உலர்ந்து போய் வறண்டு போகக் கூடும். உப்பு நீர் கூந்தலில் உள்ள ஈரப்பதத்தை வெளியேற்றுவதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.
* உப்பு நீர் உங்கள் தலைமுடியின் வெளிப்புற அடுக்கை சேதப்படுத்தும். இதனால் கூந்தலில் நுனிகள் பிளவு, கூந்தல் உடைந்து போதல் மற்றும் சிக்கல்கள் போன்றவை ஏற்படுகிறது.
* உப்பு நீரில் தலைக்கு குளிப்பதால் முடியின் நிறம் மங்க ஆரம்பித்து விடும். ஏனெனில் உப்பு நீர் உங்கள் தலைமுடியின் நிறத்தை மாற்றி மங்கலாக மாற்றி விடும்.
* உப்பு நீர் உச்சந்தலையில் எரிச்சலை ஏற்படுத்தக் கூடும். உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால் அரிப்பு மற்றும் சிவத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
உப்பு நீரில் உங்கள் கூந்தலை எப்படி பாதுகாக்க வேண்டும்?
* உப்பு நீரில் தலைமுடியை அலசுவதற்கு முன்பு உங்கள் கூந்தலை சாதாரண நல்ல தண்ணீரில் அலசிக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் தலைமுடி அதிக உப்பு நீரை உறிஞ்சுவதை தடுக்க முடியும்.
* உப்பு நீரில் குளிக்கும் போது கொண்டை அல்லது பின்னல் போட்டுக் கொண்டு குளிக்கலாம். இதனால் உங்கள் கூந்தலுக்கு ஏற்படும் பாதிப்பு குறையும்.
* உப்பு நீரில் குளித்து முடித்த பிறகு சாதாரண நீரில் கூந்தலை அலசிக் கொள்ளுங்கள். இதன் மூலம் தலைமுடியில் உள்ள உப்பு மற்றும் குளோரினை நீக்க முடியும்.
* உப்பு நீரில் குளித்து முடித்த பிறகு கூந்தலுக்கு ஹேர் மாஸ்க் அல்லது கண்டிஷனரை பயன்படுத்துங்கள். இது தலைமுடிக்கு போதுமான ஈரப்பதத்தை வழங்க உதவுகிறது.



Click it and Unblock the Notifications