Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
பற்கள் மஞ்சள் நிறத்தில் உள்ளதா? அப்ப இந்த பொடியை கொண்டு பற்களை துலக்குங்க.. 7 நாளில் வெள்ளையாயிடும்..
பற்களில் உள்ள மஞ்சள் நிறத்தை போக்க ஒரு அற்புதமான ஆயுர்வேத பொடி ஒன்று உள்ளது. இந்த பொடி சில மசாலா பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த ஆயுர்வேத பொடியை வீட்டிலேயே தயாரிக்கலாம்.
ஒருவர் சிரிக்கும் போது பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது நிச்சயம் ஒருவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். சொல்லப்போனால் வெள்ளையான பற்கள் ஒருவரின் அழகை மேம்படுத்துவதோடு, ஒருவரது தன்னம்பிக்கை மற்றும் ஆளுமையை அதிகரிக்கிறது. ஆனால் அனைவரது பற்களுமே வெள்ளையாக இருப்பதில்லை.

ஒருவரது அழகை மேம்படுத்திக் காட்டுவதில் பற்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. அப்படிப்பட்ட பற்கள் தற்போது பெரும்பாலானோருக்கு மஞ்சள் நிறத்தில் அசிங்கமாக உள்ளது. இந்த மஞ்சள் நிற பற்களை வெண்மையாக்குவதற்கு பலர் கடைகளில் விற்கப்படும் டூத் பேஸ்ட்டை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த பேஸ்ட்டுகளால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் முழுமையாக நீங்குவதில்லை. பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகளை நீக்க வேண்டுமானல், முதலில் எந்த விஷயங்களால் பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

பற்கள் எவற்றால் மஞ்சள் நிறத்தில் மாறுகிறது?
ஒருவரது பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவதற்கு முதல் காரணம், பற்களை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது தான். இது தவிர அதிகமாக டீ, காபி குடிப்பது, சோடா பானங்களை அருந்துவது, புகைப்பிடிப்பது, பான் போடுவது, ஒயின் அருந்துவது போன்றவற்றாலும் பற்கள் மஞ்சள் நிறத்தில் மாற ஆரம்பிக்கும். உங்கள் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதை நினைத்து கவலைப்படுகிறீர்களா? அப்படியானால் பற்களில் உள்ள மஞ்சள் நிறத்தை போக்க ஒரு அற்புதமான ஆயுர்வேத பொடி ஒன்று உள்ளது. இந்த பொடி சில மசாலா பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த ஆயுர்வேத பொடியை வீட்டிலேயே தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:
* பட்டைத் தூள் - 1 டீஸ்பூன்
* கல் உப்பு - 1 டீஸ்பூன்
* அதிமதுரப் பொடி - 1 டீஸ்பூன்
* கிராம்பு பொடி - 1 டீஸ்பூன்
* உலர்ந்த வேப்பிலைகள் மற்றும் உலர்ந்த புதினா இலைகள் - சிறிது

தயாரிக்கும் முறை:
முதலில் மிக்சர் ஜாரில் பட்டை தூள், கல் உப்பு, அதிமதுர பொடி, கிராம்பு பொடி, உலர்ந்த வேப்பிலை மற்றும் உலர்ந்த புதினா இலைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நன்கு அரைத்து பொடி செய்து கொண்டு, ஒரு கண்டெய்னரில் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த பொடியை 7-10 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

எப்படி பயன்படுத்துவது?
தினமும் காலையில் பற்களைத் துலக்க டூத் பேஸ்ட்டிற்கு பதிலாக இந்த ஆயுர்வேத பொடியைப் பயன்படுத்தி, பற்களை 30 நொடிகள் துலக்க வேண்டும். இப்படி இந்த பொடியைக் கொண்டு தொடர்ந்து 7-8 நாட்கள் பற்களைத் துலக்கி வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி, பற்கள் வெண்மையாக மாறும்.



Click it and Unblock the Notifications
