For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  முதுகில் இப்படி உங்களுக்கும் பருக்கள் இருக்கிறதா?... இத தடவுங்க சரியாகிடும்...

  |

  உங்கள் முகத்தில் மட்டுமே பரு உருவாகும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? சாரி ,நீங்கள் இவ்வளவு நாள் நினைத்திருந்தது தவறு என்பதை உங்களுக்கு வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோலால் மூடப்பட்ட உங்கள் உடலின் வெவ்வேறு பாகங்களில் பருக்கள் உருவாகலாம். இந்த தோள்பட்டைப் பரு பிரச்னையினால் பெண்களை விட ஆண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

  beauty

  உங்கள் முகத்தில் தோன்றும் பருக்களைப் போன்றே தோள்பட்டையிலும் இறந்த தோல் செல்கள், அதிக இயற்கை எண்ணெய்ச் சுரப்பு (சருமம்) மற்றும் பிற அசுத்தங்கள் உங்கள் தோலினை ஊடுருவிச் செல்லும்போது ஏற்படுகிறது. பாக்டீரியாக்கள் உங்கள் தோலின் துளைகளில் சிக்கினாலும் பருக்கள் ஏற்படலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  தோள்பட்டை பருக்கள்

  தோள்பட்டை பருக்கள்

  தோள்பட்டைப் பருக்கள் வலியை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டது. இந்தப் பகுதியிலுள்ள தோலின் துளைகள் பெரியதாக இருப்பதால் தோன்றும் பருக்களும் பெரியதாக இருக்கும். மேலும், சிவந்துபோதல் மற்றும் வீக்கம் போன்ற பிற அறிகுறிகளும் இருக்கக்கூடும்.

  காரணிகள்

  காரணிகள்

  பல காரணிகள் தோள்களில் பருக்கள் உருவாவதற்கு காரணமாகின்றன.உடலின் ஹார்மோன் மாற்றங்கள், உடற்பயிற்சியின் போது இறுக்கமான உடைகள் அணிதல், சூடான மற்றும் ஈரப்பதமான பகுதியில் வாழ்தல், பாலிசிஸ்டிக் கருப்பை நோய்க்குறி (பிசிஓஎஸ்), க்ரீஸி அழகுசாதன பொருட்கள் அல்லது தோல் பராமரிப்புப் பொருட்களின் பயன்பாடு மற்றும் சில மருந்துகளின் பயன்பாடு ஆகியவை இந்தப் பருக்கள் உருவாவதற்கு பொதுவான காரணங்களாகும்.சில சந்தர்ப்பங்களில், தோள்பட்டை மீது பருக்கள் லேசர் சிகிச்சை, ஷேவிங் மற்றும் வாக்ஸிங் செய்தபின்னும் தோன்றும்.

  பருமனான உடலமைப்பு உள்ளவர்கள், நீரிழிவு நோயுள்ளவர்கள் அல்லது பலவீனமான நோயெதிர்ப்புத்திறன் உள்ளவர்கள், இவ்வகை பருக்களால் மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.

  தோள்பட்டைப் பருக்களைக் கையாள்வதில் பெரிய ராக்கெட் சயின்ஸ் எதுவும் இல்லை. இந்தச் சிக்கலைச் சரிசெய்ய பலவகை எளிய மற்றும் ஈஸியான வழிகள் உள்ளன.

  தோல் பராமரிப்பு

  தோல் பராமரிப்பு

  நீங்கள் தோள்பட்டைப் பருவைக் கொண்டிருந்தால், ​​உங்கள் தோலின் மீது சரியான கவனிப்பு உங்களுக்கு இல்லை என்று பொருள். எனவே, இதன் தடுப்பு நடவடிக்கை மற்றும் சிகிச்சையாக உங்கள் தோலை நன்றாக கவனித்து கொள்வது மிக முக்கியம்.

  தோல் சுகாதாரத்தை பராமரிப்பதற்கு, நீங்கள் எடுக்க வேண்டிய முதல் படி ஒரு நல்ல குளியல் அல்லது ஷவர் மூலம் தொடர்ந்து உங்கள் தோலை கழுவுவதேயாகும். அவ்வாறு செய்யும்போது, ​​உங்கள் தோலில் குவிந்துள்ள அழுக்கு மற்றும் தேவையற்ற சருமத்தை நீக்க ஒரு மென்மையான கிளன்சரைப் பயன்படுத்தவும்.

  குளியல்

  குளியல்

  நீங்கள் ஷவரை எடுக்கும் பொழுது ​​உங்கள் முடியிலிருந்து கண்டிஷனர் நன்றாக வெளியேறும் வண்ணம் சுத்தம் செய்ய வேண்டும். மேலும், உங்கள் முடி பராமரிப்புப் பொருட்களிலிருந்து எந்த இரசாயன எச்சங்களும் தோலைத் தாக்காமல் இருக்க, பாதிக்கப்படும் பகுதிகளை உடனே சுத்தம் செய்யுங்கள்.

  வொர்க்அவுட் அல்லது பிற வியர்வை-தூண்டுதல் செயல்பாடு முடிந்தவுடன் சருமத்தின் துளைகளில் வியர்வை மற்றும் எண்ணெய் சேர்வதைத் தடுக்க முடிந்தவரை விரைவில் குளியலுக்குச் செல்லுங்கள்.

  வாரத்திற்கு ஒருமுறை, உங்கள் தோள்களின் இறந்த சரும செல்களை அப்புறப்படுத்த வேண்டும். உங்கள் அழகு சாதனப் பொருட்களை கவனமாகத் தேர்ந்தெடுங்கள் மற்றும் எண்ணெய் அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். அவை உங்கள் சருமத்தின் துளைகளை அடைத்துப் பருக்கள் உண்டாவதைத் தடுக்கும்.

  வார்ம் மசாஜ்

  வார்ம் மசாஜ்

  வார்ம் கம்ப்ரெஸ், விரைவில் தோள்பட்டைப் பருக்களைப் குணமாக்க உதவும் ஒரு முறையாகும். சூடான வெப்பநிலை தோலின் மென்துளைகளிலுள்ள பாக்டீரியா மற்றும் சீல்களை வெளியேற்ற உதவுவதால் பருக்களைக் குணப்படுத்தும் செயலை இது முடுக்கி விடுகிறது. தோள்பட்டை பருக்களினால் தோன்றும் வலியைப் போக்க மற்றும் அதை குணப்படுத்த வார்ம் கம்ப்ரெஸ் செய்யும்போது, பருக்கள் தோன்றும் இடத்தைப் பொறுத்து முன்றாம் நபரின் உதவி உங்களுக்கு தேவைப்படலாம்.

  செய்முறை :

  1. 1 தேக்கரண்டி டேபிள் சால்ட்டை 2 கப் சூடான தண்ணீரில் கலக்கவும்.

  2. அதில் ஒரு துணியை நனைத்துப் பின் துணியிலுள்ள அதிகப்படியான தண்ணீரை பிழிந்து வெளியேற்றவும்.

  3. பாதிக்கப்பட்ட பகுதியில் 10 நிமிடங்கள் இந்த இளம் சூடான துணியை வைத்து ஒத்தடம் கொடுக்கவும்.

  4. இந்தத் துணி குளிர்ச்சியடையத் தொடங்கும் போது, ​​மீண்டும் அதை மேற்கண்டவாறு சூடேற்றிப் பயன்படுத்தவும்.

  5. தினமும் ஒரு சில முறை இந்த வைத்தியத்தைச் செய்யுங்கள்.

  ஆப்பிள் சிடர் வினிகர்

  ஆப்பிள் சிடர் வினிகர்

  லாக்டிக் அமிலம் மற்றும் மெலிக் அமிலம் நிரம்பியுள்ள ஆப்பிள் சிடர் வினிகரானது தோள்பட்டைப் பருக்களை நீக்க ஒரு நல்ல தீர்வாகும்.

  இதன் அமிலத்தன்மையானது சருமத்தினை இலக்குவதற்கு உதவுகிறது , தோலின் பிஎச் அளவை சமநிலைப்படுத்தி அழகு சேர்க்க உதவுகிறது.அதன் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகள், எரிச்சலூட்டும் தோல் பிரச்சினைகளைக் கையாள்வதில் நிறைய உதவுகின்றன.

  செய்முறை

  • 1:3 விகிதத்தில் வடிகட்டப்படாத ஆப்பிள் சாறு வினிகர் மற்றும் தண்ணீரை கலக்கவும். பாதிக்கப்பட்ட இடத்தில் இந்தக்கலைவையைப் பூசவும். 15 நிமிடங்களுக்கு பிறகு மிதமான சூடு நீரில் அந்த இடத்தை சுத்தம் செய்யவும். இம்முறையை ஒரு நாளுக்கு 2 அல்லது 3 முறை செய்து வாருங்கள்.

  • ஒரு கப் தண்ணீரில் 1 முதல் 2 தேக்கரண்டி வடிகட்டப்படாத ஆப்பிள் சீடர் வினிகரை கலக்கவும். பருக்களைக் குணப்படுத்துவதற்கு நாளுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இந்தக் கலவையை குடிக்கவும் செய்யலாம்.

  ஓட்மீல்

  ஓட்மீல்

  தோள்பட்டை பருக்களை நீக்க ஸ்பாட் சிகிச்சை எப்போதும் சாத்தியம் இல்லை. அதிர்ஷ்டவசமாக, மிதமான/சுகமான ஓட்மீல் குளியல் எடுத்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.

  இது இறந்த சரும செல்களை நீக்கி உங்கள் தோல் அமைப்பு மேம்படுத்தவும் உதவுகிறது.மேலும், இதில் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்புத் தன்மையானது வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

  செய்முறை:

  • 1 கப் ஓட்மீல் பவுடரை சூடான குளியல் நீரில் கலந்து கொள்ளவும். இந்த குளியல் குளத்தில் 15 நிமிடங்கள் மூழ்கி இருங்கள். மெதுவாக உங்கள் தோலை உலர வைத்து பின் ஒரு மாய்ட்சரைசரை அப்ளை செய்யுங்கள். தினமும் ஒருமுறை இந்த இனிமையான குளியலை அனுபவிக்கவும்.

  • மாற்றாக, 1 தேக்கரண்டி யோகர்ட் பவுடர், 1 தேக்கரண்டி ஓட்மீல் , 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.இதை உங்கள் தோள்களில் பூசுங்கள். நன்கு உலர அனுமதியுங்கள். 5 நிமிடங்கள் ஸ்க்ரப்பரை வைத்து வட்ட வடிவில் நன்றாகத் தேயுங்கள். பின் சூடான நீரில் நன்றாக அதை துடைத்து விடுங்கள். வாரம் ஒரு முறை இந்த முறையைச் செய்யுங்கள்.

  தேயிலை மர எண்ணெய்:

  தேயிலை மர எண்ணெய்:

  பருக்களை நீக்குவதில் தேயிலை மரத்தின் எண்ணெயின் பயன்களைப் பார்க்கும்போது அதை உங்களால் பயன்படுத்தாமல் புறக்கணிக்க முடியாது.

  தேயிலை மர எண்ணையானது நுண்ணுயிர் எதிர்ப்பிகள், கிருமி நாசினி மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டிருக்கும். இந்தப் பண்பானது உங்கள் தோள்களில் பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் கவனித்துக்கொள்கிறது. இது சிவத்தல் மற்றும் புண் போன்ற பருக்களின் அறிகுறிகளைக் குறைக்கிறது.

  2007 ஆம் ஆண்டில் டெர்மட்டாலஜி, வென்னெராலஜி மற்றும் லேப்ராலஜி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 5% தேயிலை மர எண்ணெய் என்பது மிதமானது முதல் நடுத்தர பருக்கள் வரை குணமாக்கக்கூடிய சிறந்த சிகிச்சைப்பொருளாகும்.

  செய்முறை

  • 1 அல்லது 2 சொட்டு தேயிலை மர எண்ணெயை ஈரப்பதமான பருத்தி துணியில் விட்டு, பாதிக்கப்பட்ட பகுதியில் மெதுவாக அதைத் தடவுங்கள். 1 மணி நேரத்திற்கு அப்படியே விட்டுவிடுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். தினமும் இரண்டு முறை இவ்வாறு செய்யவும்.

  • ஒரு தேக்கரண்டி தேனில் ஒரு சில துளிகள் தேயிலை மர எண்ணெயை கலக்கவும். இந்த கலவையை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். அதை 15 முதல் 20 நிமிடங்கள் வரை விட்டு விடுங்கள். பிறகு தண்ணீரில் கழுவுங்கள். தினமும் ஒருமுறை அல்லது இரண்டு முறை இதைச் செய்யலாம்.

  எச்சரிக்கை: உங்கள் தோல் மீது சக்திவாய்ந்த தேயிலை மர எண்ணெய் பயன்படுத்துவதற்கு முன் ஒரு அலர்ஜி சோதனை செய்வது நல்லது.

  மஞ்சள்

  மஞ்சள்

  உங்கள் தோள்களில் தோன்றும் பருக்கள் உள்ளிட்ட பல தோல் பிரச்சினைகளின் சிகிச்சைக்கு பயன்படும் மற்றொரு நன்கு அறியப்பட்ட வீட்டு வைத்தியப்பொருள் "மஞ்சள்". அதன் பாக்டீரியா எதிர்ப்புப் பண்பு, பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்க உதவுகிறது. ஒரு இயற்கை கிருமி நாசினியாக இருப்பதால், பருக்களால் பாதிக்கப்பட்ட பகுதியில் தோன்றும் இன்பெக்ஷனை தடுக்க உதவுகிறது.

  phytotherapy Research இல் 2016 ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பருக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தோல் பிரச்சினைகளைக் குணப்படுத்த மஞ்சள் மிகுந்த பயனுள்ள பொருளாக இருக்குமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  செய்முறை

  1. ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது தண்ணீர் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்டாக செய்யவும்.

  2. பாதிக்கப்பட்ட பகுதி மீது இந்த பேஸ்டை தடவவும்.

  3. சுமார் 1 மணி நேரத்திற்கு அப்படியே விடுங்கள்.

  4. பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

  5. ஒரு சில நாட்களுக்கு தினமும் ஒருமுறை அல்லது இரண்டு முறை இந்த தீர்வைப் பயன்படுத்துங்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  How to Get Rid of Shoulder Acne

  Acne can develop on different parts of the body, including your shoulders. Men tend to suffer from shoulder acne more than women.
  Story first published: Thursday, May 17, 2018, 12:50 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more