Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்!
ஹலோ...ஸ்பெக்ஸ் மனிதர்களே...! நீங்களே கொண்டாட்டத்துக்கு உரியவர்கள்...!
அழகோ அழகு...! பார்ப்பதற்கு இவ்வளோ அட்டகாசமாக இருப்பவர்கள் யார் தெரியுமா...? இந்த ஸ்பெக்ஸ் போட்ட மனிதர்களே. ஆமாங்க...' இவர்களுக்கென்றே பல பிரத்தியேக சிறப்புகள் இருக்கிறது. பொதுவாகவே கண்ணாடி அணிந்தால்
அழகோ அழகு...! பார்ப்பதற்கு இவ்வளோ அட்டகாசமாக இருப்பவர்கள் யார் தெரியுமா...? இந்த ஸ்பெக்ஸ் போட்ட மனிதர்களே. ஆமாங்க...' இவர்களுக்கென்றே பல பிரத்தியேக சிறப்புகள் இருக்கிறது. பொதுவாகவே கண்ணாடி அணிந்தால் அழகு என்பது ஒரு வழக்கு மொழியாகவே மாறி வருகிறது. கண்ணாடி அணிவதால் சில பல நன்மைகளும் இருக்கின்றது.

கண்ணாடி அணிபவர்களை மிகவும் நல்லவர்கள் என்றும், சாந்தமானவர்கள் என்றும், அதிபுத்திசாலிகள் என்றே பொதுஜன மக்கள் நினைப்பார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நாம் கண்ணு சரியாக தெரியவில்லை என்று லென்ஸ் அணிந்தால் கூட இவ்வளவு சிறப்புகள் நமக்கு கிடைக்கவே கிடைக்காது. ஸ்பெக்ஸ் மனிதர்களே, இதோ உங்களுக்கான சில முக்கிய சிறப்புகளும்,குறிப்புகளும்...!

சிறப்புகள் :-
#பக்கா அப்ரோச்
இந்த உண்மையை நீங்கள் உணர்ந்து இருக்கீங்களா...ஸ்பெக்ஸ் மனிதர்களே..? நீங்கள் கண்ணாடி போட்டு கொண்டு சென்றால் உங்களுக்கே சில முக்கியத்துவங்கள் வழங்கப்படும். நீங்கள் மற்றவர்களை காட்டிலும் புத்திசாலிகளாகவும், மென்மையானவர்களாகவும் காட்டும் பிம்பத்தை இந்த ஸ்பெக்ஸ்கள் உருவாக்கும். கண்ணின் பார்வை குறைவால்தான் இந்த ஸ்பெக்ஸ்கள் பொதுவாக அணியப்படுகிறது. ஆனால்,இப்போதெல்லாம் பேஷன் என்ற பெயரில் நம்மில் பலர் இதற்கு உறவாகி வருகின்றோம். லென்ஸ் போடுபவர்களை காட்டிலும் ஸ்பெக்ஸ் போடுவார்கள் இயல்பாக உணர்கிறார்கள் என ஆராய்ச்சிகள் சொல்கிறது.

#சிக்னேச்சர் லுக்
நீங்கள் ஒரு பொறியாளராகவோ,ஓவியராகவோ அல்லது டிசைனராகவோ இருப்பவரா...? நீங்கள் உங்கள் அழகை மேலும் மேம்படுத்த வழி செய்கிறது இந்த ஸ்பெக்ஸ்களே..! நாம் திரையில் பார்க்கும் பல முக்கிய கதாபாத்திரங்கள் கூட ஸ்பெக்ஸ் அணிந்திருந்தால் நம்மை அதிக அளவில் கவர்ந்திழுக்கும். அந்த கதாபாத்திரங்கள் "ஹார்ரி பாட்டர்" போன்ற நான்- பிக்ஸனால் கதாபாத்திரமாக கூட இருக்கலாம். ஸ்பெக்ஸ் அணிபவர்களை மிக ரம்மியமானவர்களாக காட்டுவதே அதன் சிறப்பு.

#தனித்துவம்
நாம்ம இருக்கிற இந்த உலகம் மிகவும் போட்டிகள் நிறைந்த உலகம். இந்த உலகத்தின் முன் நாம் கண்டிப்பாக நமக்கான தனித்துவத்தை இழந்துவிடாமல் இருக்க வேண்டும். இந்த சிறப்பம்சத்தை ஸ்பெக்ஸ்கள் இயல்பாகவே தருகிறது. எடுத்துகாட்டாக 100 பேர் இருக்கும் இடத்தில் நீங்கள் ஒருவர் மட்டும் ஸ்பெக்ஸ் உடன் இருந்தால் அதுவே உங்களுக்கு ஒருவித பலத்தை தந்துவிடும். ஏனென்றால்,ஸ்பெக்ஸ்கள் உங்களுக்கான தனித்துவத்தை தர வல்லது.

#சுதந்திரம்
எது சுதந்திரம்..? ஸ்பெக்ஸ்சா..? லென்ஸா..?
லென்ஸ் அணிபவர் என்றால் அதனை பத்திரமாக கையாள வேண்டும்.மேலும் கண்களுக்கென பயன்படுத்தும் சொலியூசன்ஸ், ஐ ட்ராப்ஸ், ஆகியவற்றை எங்கு சென்றாலும் கூடவே எடுத்து செல்ல வேண்டியிருக்கும். அதுமட்டுமில்லாமல், கண்ணில் ஏதாவது தூசி விழுந்தால் அவ்வளவுதான்...! கண்கள் எரிச்சல் அடைந்து சிவப்பாக மாறிவிட கூடும். இதிலிருந்தே உங்களுக்கு தெரிந்திருக்கும் எது சுதந்திரமானது என்று..' ஸ்பெக்ஸ்களை மிக சுலபமாக கையாள முடியும். இபோதெல்லாம் கீழே விழுந்தாலும் உடைய முடியாத அளவிற்கு ஸ்பெக்ஸ்கள் வந்து விட்டன. எனவே ஸ்பெக்ஸ் மனிதர்களே, உங்கள் சுதந்திரம் உங்கள் கையில்தான்..! சுதந்திர பறவையாக ஸ்பெக்ஸ் அணிந்து பறந்துவாங்க...!

குறிப்புகள்:-
#சங்கட்டம்
எப்போதுமே உங்களுக்கு வசதியாக இருக்கும் வகையிலான ஸ்பெக்ஸ்களையே போடுவது நல்லது. கண்களை இறுக்கமாக, மிகவும் பளுவான ஸ்பெக்ஸ்கள் அணிவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அது உங்களுக்கு சங்கட்டமான மன நிலையையே உருவாக்கி தர வல்லது. அத்துடன் தலைவலி போன்றவற்றையும் இது ஏற்படுத்தி விடுகிறது. ஆதலால், எடை குறைந்த லூசான ஸ்பேக்ஸை போடுவது உங்களுக்குள் ஒரு தன்னம்பிக்கையை தரும்.

#சுத்தம்
பொதுவாகவே ஸ்பெக்ஸ் அணிபவர்கள் சில விஷயத்தையெல்லாம் கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும். தூசி அல்லது மங்கலாக ஸ்பெக்ஸ் இருந்தால் உங்கள் பார்வையை கடினமாக்கும். ஆதலால் எப்போதும் ஸ்பெக்ஸ்யை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். கிளீனிங் சோலியூசனை கொண்டு காட்டன் துணியால் ஸ்பெக்சை துடைத்து அணிந்தால் பார்வை மேன்மையடையும்.

#UV கதிர்கள்
நம் ஊரில் எது சரியாக நடக்கிறதோ இல்லையோ இந்த சூரியன் மட்டும் சரியாக வேலை பார்க்கிறது. என்ன வேலையினு கேக்குறீர்களா...? வெயிலைதான் சொல்கிறேன். ஸ்பெக்ஸ் அணிபவர்கள் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த UV கதிர்களில் இருந்து காப்பாற்றும் தன்மை கொண்ட ஸ்பெக்ஸ்களை அணிவதே. ஏனென்றால்,இந்த UV கதிர்கள் கண்களுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்த கூடியவை.

#ஜாக்கிரதை
ஸ்பேக்ஸில் பலவிதமான ரகங்கள் இருகின்றது. அவரவர்களின் விருப்பத்திற்கேற்ப ஸ்பெக்ஸ் அணிந்து கொள்வது ஒரு தனிப்பட்ட நபரின் சுதந்திரம். ஆனால் பிடித்தவற்றையெல்லாம் வாங்கி மாட்டி கொள்வது கண்களை அதிகமாக பாதிக்க செய்யும். எனவே கண் மருத்துவரை அணுகி ,கண்களை நன்கு பரிசோதித்த பிறகே அதற்கான ஸ்பெக்ஸ்களை அணிய வேண்டும்.
ஸ்பெக்ஸ் வாங்கும் போது அதற்கென்றே பிரத்யேகமாக சொல்லப்படும் அங்கீகாரம் இருக்கிறதா..? என்பதை தெரிந்தே கொண்டே வாங்குகள்.



Click it and Unblock the Notifications