சன்னி லியோன் கவர்ச்சியாகவும், அழகாகவும் இருப்பதன் ரகசியம் இதாங்க...

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக பெண்களின் முகத்தில் 30 வயதிற்கு மேல் முதுமை நன்கு எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிடும். ஆனால் கனடாவில் ஆபாச படங்களில் நடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இந்தியாவிற்குள் நுழைந்தார். பின் ஃபிட்டான மற்றும் கவர்ச்சியான உடலாலும், அழகாலும் பாலிவுட் அவரை அரவணைத்தது. பின் திரைப்படங்களில் நடித்து பல ரசிகர்களைக் கவர்ந்தார்.

ஹன்சிகாவின் ஃபிட்னஸ் ரகசியம்!!!

சன்னி லியோனுக்கு 35 வயது ஆகிவிட்டாலும், அவர் இன்னும் இளமையுடன் காட்சியளிப்பதற்கு அவர் அன்றாடம் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்கள் தான் முக்கிய காரணம். சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் தனது அழகின் ரகசியத்தை வெளியிட்டார். நீங்களும் அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிக்கென்ற உடல்

சிக்கென்ற உடல்

நன்கு அழகாக ஒருவர் காட்சியளிக்க சிக்கென்ற உடலமைப்பு அவசியம். எனவே சன்னி லியோன் வாரத்திற்கு 3 முறை தவறாமல் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருவேன் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அழகான சருமம்

அழகான சருமம்

சன்னி லியோன் தனது சருமம் சுருக்கமின்றி, இளமையுடன் காட்சியளிப்பதற்கு யோகா தான் முக்கிய காரணம் என்றும் கூறினார். அதற்காக தினமும் 1 மணிநேரத்தை யோகா செய்வதற்காக செலவழிப்பாராம்.

ஆரோக்கிய உணவுகள்

ஆரோக்கிய உணவுகள்

சன்னி எப்போதும் பழங்கள் மற்றம் காய்கறிகளை அதிகம் உட்கொள்வாராம், ஜங்க் உணவுகளை தொடவே மாட்டாராம். இதனால் பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் உடல் மற்றும் சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் வழங்கி, அவரை அழகாக வெளிக்காட்டுகிறதாம்.

பால்

பால்

சன்னி லியோன் தினமும் தன் டயட்டில் போதிய அளவில் பாலை தவறாமல் சேர்ப்பாராம். இதனால் பால் சரும செல்களுக்கு புத்துயிர் அளித்து, அவரை பொலிவோடு வெளிக்காட்டுகிறதாம்.

மேக்கப்-ப்ரீ

மேக்கப்-ப்ரீ

பெரும்பாலான பிரபலங்கள் எப்போதும் மேக்கப்புடன் தாக் இருப்பார்கள். ஆனால் சன்னி முக்கிய நிகழ்ச்சிகளைத் தவிர, இதர நேரங்களில் மேக்கப் இல்லாமல் தான் இருப்பாராம். இதற்கு காரணமாக அதிகளவு மேக்கப் சருமத்தின் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் என்றும் கூறுகிறார்.

தண்ணீர்

தண்ணீர்

சன்னி எங்கு சென்றாலும் கையில் ஒரு பாட்டில் நீரை வைத்துக் கொண்டு, அடிக்கடி நீரைக் குடிப்பாராம். இதனால் அவரது சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருப்பதாக கூறுகிறார்.

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

இறுதியாக, சன்னி லியோன் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர். இது தான் அவரை அழகான நபராக வெளிக்காட்டுவதாகவும் சன்னி கூறியுள்ளார். மேலும் மற்றவர்களின் அழகை பார்த்து, ஒருவர் எப்போதும் தங்களது அழகை குறைவாக மதிப்பிடாமல் இருக்க வேண்டும் என்றும் மற்றவர்களுக்கு அறிவுரைக் கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Beauty Secrets From Sunny Leone, Which Every Girl Must Know!

Here are a few of Sunny Leones beauty secrets that you could follow too, have a look!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter