Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
கால் விரல் நகங்கள் அசிங்கமா இருக்கா? இத ட்ரை பண்ணி பாருங்க...
உண்மையில், ஒருவரின் உடல் நலத்தை நகங்களைக் கொண்டு அறியலாம். ஆனால் சிலரது நகங்களைப் பார்த்து மட்டும் உடல் நலத்தைக் கூற முடியாது. ஏனெனில் அத்தகையவர்களின் நகங்களில் அழுக்குகள் தங்கியிருப்பதால், அவை நகத்தின் உண்மையான நிலையை வெளிப்படுத்தாமல் தடுக்கிறது. எனவே எப்படி முகத்தை அழகாக்குவதற்கு அத்தனை பராமரிப்புக்களை கொடுக்கிறோமோ, அதேப் போல் நகங்களுக்கும் சரியான பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
இத்தகைய பராமரிப்புக்களை பெண்கள் அதிக ஆர்வம் கொண்டு மேற்கொள்வார்கள். ஆனால் ஆண்கள் அதனை கொஞ்சம் கூட கண்டு கொள்ள மாட்டார்கள். அவ்வாறு விட்டால், நகங்களில் தங்கியுள்ள அழுக்குகளாலேயே உடலில் பிரச்சனைகள் வந்துவிடும். அதிலும் சில நேரங்களில் நகங்களே வெளியே வந்துவிடும். எனவே ஆண்களே, உங்கள் நகங்களை சரியாக பராமரித்து வாருங்கள்.
இப்போது நகங்களை அழகாக வைத்துக் கொள்வதற்கான சில எளிய முறைகளை கொடுத்துள்ளோம். இதில் ஆண் மற்றும் பெண் என இருபாலருக்குமே பொதுவான முறைகளைக் கொடுத்துள்ளோம். அதில் உங்களுக்கானதை தேர்ந்தெடுத்து, பின்பற்றி வாருங்கள்.

சுத்தமாக கழுவுதல்
வெளியே போய்விட்டு வீட்டிற்கு வந்ததும், பாதங்களை வெதுவெதுப்பான நீரால், நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். அவ்வாறு கழுவும் போது, நகங்களையும் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் கால்களில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.

நெயில் பாலிஷ் ரிமூவர்
பெண்களுக்கு நகங்களை அழகாக்குவதற்கு நெயில் பாலிஷ் போடும் பழக்கம் இருக்கும். அவ்வாறு நெயில் பாலிஷ் போடும் பழக்கம் உள்ளவர்கள், வாரத்திற்கு 1-2 முறையாவது, நல்ல நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான், நகங்கள் நன்கு வலிமையோடு, ஆரோக்கியமாக இருக்கும்.

சோப்பு நீர்
பாதங்களை வெதுவெதுப்பான சோப்பு நீரில் ஊற வைக்க வேண்டும். வேண்டுமெனில் அத்துடன் சிறிது நறுமண எண்ணெய்கள் அல்லது கல் உப்புக்களை சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக பாதங்களை 15 நிமிடமாவது ஊற வைக்க வேண்டும். இதனால் பாதங்கள் மற்றும் கால் விரல் நகங்களில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் நீங்கிவிடும்.

ஸ்கரப்
பாதங்கள் மற்றும் கால் விரல் நகங்களைச் சுற்றியுள்ள இடங்களை ஸ்கரப்பர் பயன்படுத்தி தேய்த்து, அங்கு தங்கியுள்ள இறந்த செல்கள் மற்றும் கிருமிகளை வெளியேற்றவும். முக்கியமாக இவ்வாறு தேய்க்கும் போது, அளவுக்கு அதிகமாக தேய்க்கக் கூடாது.

நகங்களை வெட்டவும்
கால் விரல் நகங்களை நீளமாக வளர்க்காமல், அவ்வப்போது வெட்டிவிட வேண்டும். பொதுவாக பெண்கள் தான் நீளமாக வளர்ப்பார்கள். ஆனால் இவ்வாறு வளர்த்தால், பாக்டீரியாக்கள் மற்றும் அழுக்குகள் தங்குவதற்கு வசதியாகிவிடுவதோடு, பின் எவ்வளவு தான் சுத்தமாக செய்தாலும் விரைவில் அவற்றை அகற்ற முடியாது. எனவே அவ்வப்போது கால் விரல் நகங்களை வெட்டிவிட வேண்டும்.

பிரஷ்
பாதங்களை சுத்தம் செய்யும் போது, கால் விரல் நகங்களில் உள்ள அழுக்குகளை பிஷ் கொண்டு நகங்களின் முனைகளில் தேய்த்தால், அழுக்குகள் எளிதில் வெளிவந்துவிடும். அதிலும் இதனை தினமும் குளிக்கும் போது செய்வது மிகவும் நல்லது. வேண்டுமெனில் இந்த முறைக்கு டூத் பிரஷ்களை பயன்படுத்தலாம்.

மாய்ஸ்சுரைசர்
பிரஷ் கொண்டு செய்த பின்னர், பாதங்கள் மென்மையாகவும், வறட்சியின்றியும் இருப்பதற்கு, மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இவ்வாறு தினமும் நல்ல மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தினால், பாதங்களில் ஏற்படும் குதிகால் வெடிப்பை குணமாக்கலாம். வேண்டுமெனில் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தவும் செய்யலாம்.

எலுமிச்சை சாறு
ஒருவேளை நகங்கள் வெள்ளையாக இல்லாவிட்டால், எலுமிச்சை சாற்றை நீரில் விட்டு, பின்னர் பாதங்களை அதில் ஊற வைத்து, பின் பிரஷ் செய்து, மாய்ஸ்சுரைசர் தடவவும்.



Click it and Unblock the Notifications
