Latest Updates
-
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியன் ரிஷப ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள்
அழகு பராமரிப்பிற்கு உதவும் பேக்கிங் சோடா!!!
பேக்கிங் சோடாவை சோடியம் பை-கார்பனேட் என்றும் சொல்வார்கள். இத்தகைய பேக்கிங் சோடா சமையலுக்கு மட்டுமின்றி, அழகுப் பராமரிப்பிலும் பயன்படுகிறது. அதிலும் குறிப்பாக சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் பெரிதும் உதவுவதோடு, சிறந்த நன்மைகளையும் தருகிறது. எப்படி உப்பு மற்றும் சர்க்கரை ஸ்கரப் செய்ய பயன்படுகிறதோ, அதேப் போல் சிறிய துகள்களாக இருக்கும் பேக்கிங் சோடாவும், சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வைத் தருகிறது.
இப்போது அந்த பேக்கிங் சோடாவை வைத்து உடலின் எந்த பகுதியை எல்லாம் பராமரிக்கலாம், எப்படியெல்லாம் பராமரிக்கலாம் என்று கூறியுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உடலை அழகாக பொலிவோடு வைத்துக் கொண்டு. அனைவரையும் அழகால் மயக்குங்கள்!!!

கூந்தல்
கூந்தல் நன்கு பொலிவோடு காணப்படுவதற்கு, குளிக்கும் போது 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை, 1 கப் நீரில் கலந்து, அலசினால், கூந்தல் பொலிவோடு இருப்பதோடு, குளோரின் தண்ணீரால் நிறமிழந்து இருக்கும் கூந்தலை அழகாக்கும். அதுமட்டுமின்றி, சிறிது பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, கூந்தல் வறட்சியுடன் பொலிவிழந்து இருக்கும் போது லேசாக தெளித்து பின் சீவினால், கூந்தல் நன்கு மின்னும்.

கைகள்
பொதுவாக கைகளுக்கு அழகு நிலையங்களுக்குச் சென்று தான் மெனிக்யூர் செய்வோம். ஆனால் அத்தகைய மெனிக்யூரை வீட்டிலேயே பேக்கிங் சோடாவை வைத்து செய்யலாம். அதற்கு பேக்கிங் சோடாவை வெறும் நீரில் அல்லது சோப்பு நீரில் கலந்து, கைகளை நீரில் ஊற வைத்து தேய்த்து கழுவினால், கைகள் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, மென்மையாகவும் மாறும்.

நகங்கள்
கை மற்றும் கால் நகங்கள் நன்கு அழகாக இருப்பதற்கு, நெயில் பிரஷ்ஷை பேக்கிங் சோடாவால் தொட்டு தேய்த்தால், கண்ணுக்கு தெரியாத சிறிய அழுக்குகள் கூட நீங்கி, நகங்கள் அழகாக வெள்ளையாக காணப்படும்.

பாதங்கள்
கால்களில் வெடிப்புகள் இருந்தால், அவற்றை பேக்கிங் சோடாவை கொண்டு பராமரித்தால், போய்விடும். அந்த பராமரிப்பிற்கு ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் மூன்று டீஸ்பூன் பேக்கிங் சோடாவை போட்டு கலந்து, கால்களை அதில் ஊற வைத்து தேய்த்து கழுவினால், பாதங்களில் உள்ள வெடிப்புகள் போவதோடு, பாதங்களில் இருக்கும் அழுக்குகளும் போய்விடும். மேலும் பாதங்கள் மென்மையாவதற்கு, பேக்கிங் சோடா, உப்பு இரண்டையும் நீரில் பேஸ்ட் போல் கலந்து, பாதங்களில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

பழுப்பு நிற சருமம்
சருமம் பழுப்பு நிறத்திலோ அல்லது கருமையாகவோ இருந்தால், பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால், அந்த பிரச்சனையைப் போக்கலாம். முக்கியமாக வெடிப்புகள் உள்ள இடத்திலோ அல்லது காயம் உள்ள இடத்திலோ தடவ வேண்டாம்.

சரும மென்மைக்கு...
உடல் நன்கு மென்மையாக இருப்பதற்கு, குளிக்கும் நீரில் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து குளிக்க வேண்டும். இதனால் சருமத்தில் ஏற்படும் அரிப்புகள் நீங்குவதோடு, சருமமும் மென்மையாகும்.

வாசனைப் பொருள்
உடலில் வரும் துர்நாற்றத்தைப் போக்குவதற்கு, ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவை நீரில் போட்டு குளித்தால், துர்நாற்றத்தை தவிர்க்கலாம். மேலும் உடலுக்கு போடும் டால்கம் பவுடர் நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு, அதில் பேக்கிங் சோடாவை போட்டு கலந்து, போட வேண்டும்.

பற்கள்
நல்ல வெள்ளையான பற்களைப் பெற 2 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் சிறிது கிளிசரின் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, பற்களை துலக்கினால், பற்கள் நன்கு வெண்மையாக ஜொலிக்கும்.

ஃபேஸ் மாஸ்க்
பேக்கிங் சோடாவை வைத்து ஸ்கரப் செய்வது மட்டுமின்றி, ஃபேஸ் மாஸ்க் கூட போடலாம். இதனால் சருமம் நன்கு மென்மையாக, சுத்தமாக இருக்கும். அதற்கு பேக்கிங் சோடா, ஓட்ஸ், தேன் மற்றும் சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து, முகத்திற்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஷேவிங்
ஷேவிங் செய்த பின்னர் தடவும் க்ரீம்களால் நிறைய பக்க விளைவுகள் உள்ளது. எனவே அத்தகைய க்ரீம்களை பயன்படுத்துவதை விட, ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை 1 கப் தண்ணீரில் போட்டு, முகத்தை கழுவினால், ஷேவிங் செய்ததால் ஏற்பட்ட எரிச்சலைத் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications











