Latest Updates
-
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்..
'பேஸ்புக்'குக்கு ரெஸ்ட் கொடுங்க.. 'பேஸ் பேக்' போடுங்க.. தீபாவளிக்கு ஜொலிக்க வேண்டாமா?
தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் இதர பொருட்கள் வாங்குவதில் மிகவும் பிஸியாக இருப்போம். இந்த பிஸியில் தூக்கம் கெட்டு, அல்லும் பகலும் பாராமல், கடுமையான வெயில் அடிப்பதைக் கூட பொருட்படுத்தாமல், அலைந்து திரிவோம். இப்படி எந்த ஒரு கவலையும் இன்றி திரிவதால், சருமம், கூந்தல் போன்றவை பொலிவிழந்து காணப்படும்.
இப்படி அழகு கெட்டிருப்பதை, சிலர் தீபாவளிக்கு முதல் நாளும், சிலர் தீபாவளி அன்றும் உணர்வார்கள். அதிலும் குடும்பத்துடனுடன், உற்றார் உறவினர்களுடனும் சேர்ந்து கொண்டாடும் போது, பலர் அந்த நினைவுகளை மறக்காத வண்ணம் போட்டோ எடுத்துக் கொள்வார்கள். போட்டோ என்றாலே பெண்கள் பல போஸ்களைக் கொடுப்பார்கள். அதிலும் அப்படி தீபாவளி அன்று போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது அழகாக காணப்பட வேண்டுமல்லவா?
ஆகவே தீபாவளி அன்று அழகாக ஜொலிப்பதற்கு சில அருமையான டிப்ஸ்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை செய்து, தீபாவளி அன்று சூப்பர் ஃபிகராக இருங்கள்...

கருவளையங்களைப் போக்க...
தீபாவளிக்கு முதல் நாள் இரவு முழுவதும் தூக்கமின்றி பட்டாசுகளை வெடித்து, மிகவும் தாமதமாக தூங்கினால், தீபாவளி அன்று கண்களைச் சுற்றி கருவளையங்கள் வந்துவிடும். ஆகவே அந்த கருவளையங்களை போக்கி, கண்களை பொலிவானதாக மாற்றுவதற்கு, நல்ல குளிர்ச்சியான வெள்ளரிக்காயை கண்களில் வைத்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால் கருவளையங்கள் போய்விடும்.

ஃபேஸ் பேக்
தீபாவளி அன்று முகம் பொலிவோடு இருக்க வேண்டுமெனில், ஸ்ட்ராபெர்ரி, பால் அல்லமு முல்தானி மெட்டி கொண்டு ஃபேஸ் பேக் போடுங்கள். இதனால் சருமம் பொலிவுறும்.

க்ளீனிங், டோனிங் மற்றும் மாய்ஸ்சுரைசிங்
இந்த மூன்று முறையை சரியாக செய்து வந்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் நீங்கி, முகம் அழகாக காட்சியளிக்கும்.

கூந்தல் பராமரிப்பு
கூந்தல் பட்டு போன்று இருக்க வேண்டுமெனில், தீபாவளிக்கு முதல் நாள் கூந்தலுக்கு ஹேர் பேக் போடுங்கள். அதிலும் தயிர், தேன், முட்டை அல்லது வினிகர் கலந்து ஹேர் பேக் போட்டால், கூந்தல் மென்மையாகவும், பட்டுப் போன்றும் இருக்கும்.

உதடு பராமரிப்பு
உதடுகளில் உள்ள கருமைகள் மற்றும் உதடு வெடிப்புகளைப் போக்க, முதலில் உதடுகளை கடிப்பதை நிறுத்த வேண்டும். பின் பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளுக்கு தடவவும். வறட்சியின்றி நல்ல மென்மையான உதடுகள் வேண்டுமெனில், ஷியா வெண்ணெய் கொண்டு உதடுகளை மசாஜ் செய்ய வேண்டும்.

நகப் பராமரிப்பு
பொதுவாக நகங்கள் அழகாக இருக்க வேண்டுமெனில், முதலில் எவ்வளவு நீளத்தில் நகம் வேண்டும் என்று முடிவு செய்து, அதனை ஷேப் செய்ய வேண்டும். பின்னர் தினமும் அரவில் நகங்களுக்கு எண்ணெயை வைத்து, தூங்க செல்ல வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், நிச்சயம் நகங்கள் க்யூட்டாக இருக்கும்.

பாத பராமரிப்பு
பாதங்களைக் கொண்டு உடலை எவ்வளவு அக்கறையாக பராமரிக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆகவே பாதங்கள சுத்தம் செய்து, தினமும் தவறாமல் பாதங்களுக்கு மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். குறிப்பாக குளித்த பின்னர் மற்றும் இரவு தூங்கும் முன். இதனால் குதிகால் வெடிப்பு வருவதை தவிர்ப்பதோடு, பாதங்களும் மென்மையாக இருக்கும்.

கழுத்து மற்றும் மூட்டுகள்
ஆடைகள் அணியும் போது வெளியே தெரியும் பகுதிகள் தான் கழுத்து மற்றும் மூட்டுகள். மேலும் இந்த இடங்களில் தான் அழுக்குகள் அதிகம் தங்கும். ஆகவே அந்த இடத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீக்குவதற்கு எலுமிச்சை கொண்டு தேய்த்தால், அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, சருமத்தில் உள்ள அனைத்து அழுக்குகளையும் நீக்கிவிடும்.

ஆரோக்கிய உணவுகள்
முக்கியமாக அழகாக இருக்க வேண்டுமெனில், மேற்கூறியவற்றுடன் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

தண்ணீர் மற்றும் ஜூஸ்கள்
அதிகப்படியான தண்ணீர் மற்றும் பழச்சாறுகளை குடித்து வந்தால், சருமம் மற்றும் கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்கலாம். அதிலும் ஜூஸில் கேரட் மற்றும் பாகற்காய் ஜூஸ் குடிப்பது, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை நீக்கி, சருமத்தை பொலிவாக வைத்திருக்கும்.
மேற்கூறியவாறெல்லாம் செய்தால், கஷ்டப்பட்டு வாங்கிய புத்தாடைகளை அணியும் போது, அழகாக காணலாம்.



Click it and Unblock the Notifications