Latest Updates
-
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க
உடல் அழகை பாதுகாக்க உப்பின் 8 உபயோகங்கள்!!!
'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர். உண்மை தான்! அதே போல் தான் உலகத்திற்கும். உப்பு இல்லாத இந்த பூமியை நினைத்து கூட பார்க்க முடியாது. அதுவும் நான்கில் மூன்று பங்கு தண்ணீரை கொண்ட நம் பூமியில். உப்பு என்பது நம் பூமியின் முக்கியமான ஒரு அங்கமாக விளங்கி வருகிறது. ஆயிரக்கணக்கில் பயன்களை அளித்து வருகிறது உப்பு. அழுக்கை கழுவதற்கு ஆற்றல் மிக்க பொருளாக, பதப்பொருளாக, நம் உணவிற்கு சுவை சேர்க்கும் பொருளாக என்று இதனை பலவாறு பயன்படுத்துகிறோம்.
நம் உடம்பின் செயல்பாட்டிற்கு கூட உப்பு பெரிதும் பயன்படுகிறது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், நீர்ச்சத்து, சர்க்கரை அளவு மற்றும் இதய துடிப்பை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். ஆனால் இதையெல்லாம் தாண்டி நம் உடல் அழகை பராமரிக்கவும் உப்பு பயன்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? சரி, அந்த உப்பு சம்பந்தப்பட்ட ஒரு 8 பயன்பாடுகளைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

உப்பு குளியல்
நம்மை அமைதிப்படுத்தும் எப்சம் உப்பு குளியலை பற்றி நம்மில் பலர் அறிந்திருப்போம். இது நாம் அன்றாடம் பயன்படுத்தும் டேபிள் உப்பு (சோடியம் க்ளோரைட்) கிடையாது; இது எப்சம் எனப்படும் மெக்னீசியம் சல்பேட் ஆகும். கடலில் குளிப்பதை போல் தூய்மையான உப்பில் கூட ஒரு குளியலை போடலாம். உப்பில் குளிப்பதால் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கலாம். மேலும் வலி மிகுந்த தசை மற்றும் மூட்டு பகுதிகளுக்கு ஒத்தடம் கொடுத்ததை போல இருக்கும். ஆகவே குளிக்கும் டப்பில் 1 கப் உப்பை கலந்து கொள்ளுங்கள். வாசனை கமகமக்க வாசனை எண்ணெய்கள் அல்லது காய்ந்த மூலிகை செடிகளை தண்ணீரில் கலந்து கொள்ளலாம்.

உப்பு ஸ்கரப்
உப்பானது இயற்கை தோல் உரிப்பானாக பயன்படுவதனால், வறண்ட சருமத்தை துடைத்தெடுத்து, சருமத்தை வழுவழுப்பாக மாற்றிவிடும். 1/4 கப் சொரசொரப்பான உப்பை, 1/2 அல்லது 3/4 கப் பாதாம், எள்ளு அல்லது ஜிஜோபா எண்ணெயுடன் கலந்து கொள்ளவும். வாசனையை உண்டாக்க வாசனை எண்ணெய்களை ஒரு 20 துளிகள் சேர்த்து கொள்ளவும். குறிப்பாக இந்த கலவை எண்ணெய் பதமாக இருக்க வேண்டும். பின் அதனை ஒரு கை எடுத்து, பாதங்களில் நன்றாக தடவுங்கள். முக்கியமாக கால்களின் சருமத்தை ஷேவ் செய்வதற்கு முன்பு இதனை செய்யலாம்.

ஃபேஸ் மாஸ்க்
எண்ணெய் சருமம் கொண்டவர்கள் அல்லது அடிக்கடி பருக்கள் வருபவர்களுக்கு உப்பு கை கொடுக்கும். அதற்கு எளிய முறையில் உப்பை ஃபேஸ் மாஸ்க்காக பயன்படுத்தினால் அழற்சியை குறைத்து, சருமத்தின் எண்ணெய் அளவை நிலைநிறுத்தி, பருக்களை விரைவிலேயே நீங்கச் செய்யும். அதிலும் ஒரு பங்கு உப்பை 2 பங்கு தண்ணீரில் கரைக்கவும். அதனுடன் 2 டீஸ்பூன் சுத்தமான தேனை கலக்கவும். பின் அவற்றை மென்மையாக முகத்தில் பூசி, 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

டியோடரண்ட்
பல உப்பு கல் டியோடரண்ட்கள் இயற்கை உணவு விற்கப்படும் கடைகளில் இன்று கிடைக்கிறது. இது நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாவை அழிக்கும். இப்போது புரிகிறதல்லவா? பேக்கிங் சோடாவை கொண்டு வீட்டிலேயே தயாரிக்கப்படும் டியோடரண்ட்டை பயன்படுத்துபவரா நீங்கள்? அப்படியானால் அதனுடன் ஒரு டீஸ்பூன் உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் மேல் அடிக்கும் நாற்றத்தை நீக்க உதவும்.
பெண்களே உஷார்! ஷேவ் செய்த இடங்களில் இதனை தடவினால் சற்று கடுக்கும்.

டூத் பேஸ்ட்
பாக்டீரியாவை அழிக்கும் தன்மையை உப்பு கொண்டுள்ளதால். அதனை செலவில்லாத ஒரு அருமையான டூத் பேஸ்ட்டாக பயன்படுத்தலாம். அதற்கு 3 பங்கு பேக்கிங் சோடாவுடன், 1 பங்கு உப்பை கலக்கவும். இந்த கலவையை பவுடராகவும் செய்து கொள்ளலாம் அல்லது பேஸ்ட் போல் மாற்ற கொஞ்சம் கிளிசரினை சேர்த்து கொள்ளுங்கள். புதினா, கிராம்பு போன்ற அதிமுக்கிய எண்ணெய்களை சிறு துளி சேர்த்து கொள்ளலாம். இதனால் இந்த பேஸ்ட் எளிமையாகவும், சிக்கனமாகவும், பயன் தரும் விதமாகவும் அமையும்.

வாய் கழுவப் பயன்படும்
தொண்டை புண்ணுக்கு உப்பு கலந்த நீரை வாயில் ஊற்றி கொப்பளிப்பது ஒரு சிறந்த மருந்தாக உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதனால் அதனை வாயை கழுவவும் பயன்படுத்தலாம். சந்தையில் விற்கப்படும் பொருட்களில் பல இரசாயனங்கள் கலந்திருக்கும். ஆகவே அதில் உப்பை பயன்படுத்துவதால் அதனை தவிர்க்கலாம். இதுப்போக சந்தையில் விற்கப்படும் பொருட்கள் பிளாஸ்டி டப்பாவில் வருவதால், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே அதனையும் தவிர்க்கலாம்.
அதுமட்டுமின்றி சந்தையில் விற்கப்படும் பொருட்களை விட உப்பு தண்ணீர் மிகவும் சிக்கனமானது அல்லவா? மேலும் பாக்டீரியாவை அழிப்பதில் உப்பு தண்ணீரே வேகமாக செயல்படும். ஆகவே இந்த உப்பு தண்ணீருடன் புதினா போன்ற அதி முக்கிய எண்ணெய்களை சேர்த்து கொண்டால் கொஞ்சம் நறுமணமும் இருக்கும்.

நாசி துடைப்பான்
நாசியை துடைப்பதால் சுவாசம் சீர்படும். மேலும் அலர்ஜி அல்லது சைனஸ் பிரச்சனையை குறைக்கும். இதுவும் ஒரு வகை ஆயுர்வேத வைத்தியமாகும். இதற்காக தயார் செய்யப்பட ஒரு குடுவையில் சிறிது கடல் உப்பை (கனிம பாறை உப்பை பயன்படுத்தினால், எரிச்சல் உணர்வு ஏற்படும். அதனால் அதனை தவிர்க்கவும்) தண்ணீருடன் கரைத்து, அதனை உங்கள் மூக்கில் ஊற்றுங்கள். ஊற்றும் போது தலையை சாய்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் இந்த நீர் நாசிப் பகுதி முழுவதையும் சென்றடையும். தலையை மறுபுறம் சாய்த்து ஊற்றினால், தண்ணீர் சைனஸ் பகுதியை நிரப்பும். நிறைந்த நீர் மறுமுனை வழியாக வெளியேறிவிடும். இதற்கு கொஞ்சம் பயிற்சி தேவைப்படும். பழகிவிட்டால் போதும், சுவாசக் கோளாறுகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

புண்களுக்கான மருந்து
தீய நுண்ணுயிர்களை அழிக்கும் பண்புகளை கொண்டுள்ளதால், புண்களுக்கு இதனை முதல் சிகிச்சையாக பயன்படுத்தலாம். ஏனெனில் உப்பு படுவதால், அந்த இடம் கடுக்கும். அதனால் தான் இரத்தம் வழியும் இடத்தில் உப்பை தடுவுவதில் நமக்கு பிடிப்பதில்லை. ஆனால் இரத்தம் வெளியேறுவது நின்றதும், உப்பை புண் மீது தடவினால், புண்ணை சுத்தப்படுத்தி விரைவிலேயே ஆற வைக்கும்.



Click it and Unblock the Notifications
