Latest Updates
-
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உடலை எப்படி அழகா வெச்சுக்கணும் தெரியுமா?
அழகாக இருக்கிறோம் என்றால் முகம் மட்டுமல்ல, உடலை வைத்தும் தான் சொல்வார்கள். அவ்வாறு உடலை அழகாக வைத்துக் கொள்பவர்கள் தான தற்போது உலக அழகியாக வருகிறார்கள். ஏன் உலக அழகி போட்டிக்கு செல்பவர்கள் மட்டும் தான் உடலை அழகாக வைத்துக் கொள்ள வேண்டுமா என்ன? வீட்டில் இருக்கும் அனைவருமே ஒரு சிலவற்றை செய்தால், உலக அழகி என்ன அதை விட பேரழகியாகவே ஆகலாம்.

கழுத்து - முகத்தை விட கழுத்தில் தான் பெரும் பிரச்சனை ஏற்படுகிறது. எப்படியெனில் கழுத்தின் பின்புறம், கூந்தல் அடிக்கடிப்படுவதால், அங்கு அதிகமான வியர்வை ஏற்பட்டு, அழுக்குகள் படிந்துவிடுகின்றன. ஆகவே மற்ற இடத்தை விட கழுத்திற்கு அதிகப்படியான கவனிப்பு தேவைப்படுகிறது. மேலும் எந்த ஒரு கிரீமை முகத்திற்கு பயன்படுத்தினாலும், அதை கழுத்திற்கும் பயன்படுத்த வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை ஸ்கரப் செய்து, மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இதனால் முகமும் கழுத்தும் ஒரே நிறத்தில் இருக்கும். மேலும் சருமமும் மென்மையடையும்.
கைகள் - பெண்களின் கைகள் எப்போதும் பட்டுப் போன்று இருக்க வேண்டும். ஆகவே அத்தகைய கைகளை எப்போதும் சரியாக பராமரிக்க வேண்டும். உடல் அழகாக பராமரிக்கும் போது, தவறாமல் கைகளையும் கவனிக்க வேண்டும். ஏனெனில் கைகளில் அதிகமாக வெயில் படுவதால், அவை கருப்பாக மாறிவிடும். அதுவே குளிர் காலங்களில் வறட்சியுடன் காணப்படும். எனவே எப்போது கைகளை கழுவினாலும் கைகளுக்கு மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும். இதனால் கைகள் சற்று மங்கலாக காணப்படுவதைத் தவிர்க்கலாம். அதிலும் கை மூட்டுகளில் தான் அதிகமான கருப்பு காணப்படும். ஆகவே அங்கும் கிரீம்களை பயன்படுத்த வேண்டும். இதனால் வெயிலால் சருமம் கருமையடைவதைத் தடுக்கலாம்.
பின்புறம் - வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எண்ணெயால் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் பின்புறம் நன்கு ஈரப்பதத்துடன் காணப்படும். அதுமட்டுமல்லாமல் தினமும் குளிக்கும் போது, சிறிது மாய்ஸ்சுரைசரை தடவி குளிக்க வேண்டும். இதனால் பின்புறம் அழகாக இருக்கும்.
வயிறு - சேலைகள் கட்டும்போது கண்டிப்பாக இடுப்பு பகுதி வெளியே தெரியும். அத்தகைய இடுப்புகள் அழுக்கில்லாமல், நன்கு சுத்தமாக சற்று ஈரப்பசையுடன் காணப்படும். அதற்கு சற்று பஞ்சை நீரில் நனைத்து, வயிறு மற்றும் இடுப்பை நன்கு துடைக்க வேண்டும். பின்னர் அங்கு மாய்ஸ்சுரைசர் கிரீமை தடவி வந்தால், அந்த இடம் பார்க்க அழகாக, கண்ணை கவரும் வகையில் இருக்கும்.
கால்கள் - உடல் பராமரிப்பில் கால்களை பராமரிப்பது என்பது முக்கியமானது. ஏனெனில் சிறு வயதில் அடிக்கடி முட்டிப் போட்டு நடத்தல் மற்றும் இதர காரணங்களால், முழங்கால்களில் கருப்பாக இருக்கும். ஆகவே அந்த இடத்தில் ஒயிட்னிங் கிரீம் அல்லது ஏதேனும் பேக்கை போட்டு வர வேண்டும். இதனால் கருப்பாக இருப்பது மாறி, குட்டையான ஸ்கர்ட் அல்லது சாட்ஸ் போன்றவை போடும் போது, அந்த இடம் அழகாக கணப்படும். அதுமட்டுமல்லாமல், பாதங்களையும் நன்கு அடிக்கடி மசாஜ் அல்லது ஸ்கரப் செய்து வந்தால், பித்தவெடிப்புகள ஏற்படாமல் இருப்பதோடு, பாதங்களும் மென்மையாக இருக்கும்.
மேற்கூறியவற்றையெல்லாம் மனதில் கொண்டு நடந்தால், சருமம் மென்மையாக காணப்படுவதோடு, உடலும் அழகாக காட்சியளிக்கும்.



Click it and Unblock the Notifications