Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
கூந்தல் அழகாக, மென்மையாக மின்ன வேண்டுமா? அப்ப கிளிசரினை இப்படி யூஸ் பண்ணுங்க..
Glycerin Benefits In Tamil: நமது கூந்தல் சுற்றுப்புற அழுக்குகள், தூசிகள் இவற்றால் எளிதில் பாதிப்படைகிறது. இதனாலேயே கூந்தல் உதிர்வு, சிக்கல்கள், பொடுகுத் தொல்லை என ஏகப்பட்ட கூந்தல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இந்த கூந்தல் பிரச்சினைகளை ஒரு நொடிப் பொழுதில் போக்கிட கிளிசரின் உதவுகிறது. கிளிசரின் என்பது தோல் மற்றும் முடிக்கு பயன்படுத்தும் ஒரு தடினமான திரவம் ஆகும். இந்த கிளிசரின் கிளிசரால் என்றும் அழைக்கப்படுகிறது.

இது நிறமற்றது, மணமற்றது மற்றும் சிறிது சர்க்கரை மற்றும் ஆல்கஹால் கொண்டு உள்ளது. இந்த கிளிசரின் ஈரப்பதம் மற்றும் நீரை காற்றில் இருந்து எடுத்து தோல் மற்றும் கூந்தலுக்கு ஈரப்பதமூட்டியாக செயல்படுகிறது.
கிளிசரின் சரும ஆரோக்கியத்தில் மட்டுமல்லாது கூந்தல் ஆரோக்கியத்திலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்த கிளிசரினை பயன்படுத்தி உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை எப்படியெல்லாம் பேணலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
1. ஈரப்பதத்தை தக்க வைக்கிறது
கிளிசரின் முடியை ஈரப்பதமாக்குகிறது. முடியை நீளமாகவும் வலிமையாகவும் மாற்றுகிறது. இது காற்றில் இருந்து நீரை உறிஞ்சி உங்கள் கூந்தலை மென்மையாக வைக்க உதவுகிறது. இதன் மூலம் உங்கள் கூந்தலை என்றும் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
பயன்படுத்தும் முறை
2 டேபிள் ஸ்பூன் கிளிசரினை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் தண்ணீரை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த கலவையை உங்கள் கூந்தலில் ஸ்ப்ரே செய்து விடுங்கள். பிறகு உங்கள் உச்சந்தலையையும் முடியையும் நன்றாக மசாஜ் செய்யுங்கள். அப்படியே விட்டு விட்டு 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு கூந்தலை அலசி விடுங்கள்.
2. கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது
கிளிசரின் ஒரு ஈரப்பதமூட்டியாக செயல்படுவதால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை பிடித்து முடியை அதன் வேர்க்கால்களுடன் பிணைக்கிறது. மேலும் கூந்தல் வறண்டு போவதால் உண்டாகும் பிளவுபட்ட முனைகள், இறந்த சரும செல்கள் போன்றவற்றை போக்குகிறது. புதிய மயிர்க்கால்கள் நீளமாக வலுவாக வளர உதவுகிறது.
பயன்படுத்தும் முறை
ஒரு முட்டையை எடுத்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். அதனுடன் 3 டேபிள் ஸ்பூன் கிளிசரின், 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். இதை நன்றாக கலந்து பிறகு பிரஷ் கொண்டு தலையில் அப்ளை செய்யுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசிக் கொள்ளுங்கள். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்து வரும் போது நிறைய நன்மைகளை பெறலாம். விளக்கெண்ணெய் முடி அடர்த்தியாகவும் நீளமாக வளரவும் உதவுகிறது. முட்டை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த ஹேர் மாஸ்க் முடியை பளபளப்பாகவும் சீரானதாக வைத்திருக்கவும் உதவுகிறது.
3. கிளிசரினை கண்டிஷனராக பயன்படுத்தலாம்
கிளிசரின் கூந்தலுக்கு ஒரு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. இது உங்கள் கூந்தலை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.
பயன்படுத்தும் முறை
உங்கள் கூந்தலை ஷாம்பு கொண்டு அலசிய பிறகு ஒரு பெளலில் கண்டிஷனரை எடுத்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் கிளிசரினை சேர்த்துக் கொள்ளுங்கள். நன்றாக கலந்து முடிகளில் அப்ளை செய்து வாருங்கள். 5 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். கிளிசரின் உங்கள் கூந்தலுக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது.
4. பிளவுபட்ட முனைகளை நீக்க கிளிசரின் உதவுகிறது
கிளிசரின் பிளவுபட்ட முனைகளை நீக்க உதவுகிறது. உங்கள் கூந்தலின் வறண்ட தன்மையை நீங்கள் நீக்கலாம். உங்கள் கூந்தலில் பிளவுபட்ட நுனிகள் இருந்தால் அதில் கிளிசரினை தடவி வரலாம்.
பயன்படுத்தும் முறை
3 டீ ஸ்பூன் கிளிசரின், 2 டீ ஸ்பூன் தேன் மற்றும் தண்ணீருடன் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். பிறகு இந்த கரைசலை உச்சந்தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதில் தேன் ஒரு ஆன்டி பயாடிக்காக செயல்படுகிறது. இது இறந்த சரும செல்களை நீக்க உதவுகிறது. இது உச்சந்தலை பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
5. பொடுகுத் தொல்லை நீங்க உதவுகிறது
ஆப்பிள் சிடார் வினிகருடன் கிளிசரின் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கரைசலை நீங்கள் கூந்தலுக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கி விடும்.
பயன்படுத்தும் முறை
2 டேபிள் ஸ்பூன் கிளிசரினுடன் 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை கலந்து கொள்ளுங்கள். இந்த கரைசலை உச்சந்தலையில் உள்ள தலையில் அப்ளை செய்து வாருங்கள். இதை அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடுங்கள். வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். 15 நாட்களுக்கு இப்படி செய்து வரும் போது பொடுகுத் தொல்லை நீங்கி விடும்.
6. கூந்தல் உதிர்தலை போக்கலாம்
கிளிசரினை தேங்காய் எண்ணெயுடன் கலந்து உச்சந்தலையில் மசாஜ் செய்து வந்தால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. கூந்தலை வலுவூட்டுவதோடு மட்டுமல்லாமல் முடி உதிர்தலை போக்கவும் உதவுகிறது.
பயன்படுத்தும் முறை
1 டேபிள் ஸ்பூன் கிளிசரினுடன் தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ளுங்கள். இதை நன்றாக கலந்து தலையில் அப்ளை செய்யுங்கள். 20 நிமிடங்கள் மசாஜ் செய்து பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்து வாருங்கள். கிளிசரின் கூந்தல் உதிர்வை தடுக்க உதவுகிறது. கூந்தல் வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. கூந்தல் வலுவாகவும் அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.



Click it and Unblock the Notifications
