Latest Updates
-
நவம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பொறுமையை சோதிக்கும் மோசமான நாளாக இருக்குமாம் -
18 ஆண்டுகளுக்கு பின் மகரம் செல்லும் ராகு: டிசம்பர் முதல் இந்த 3 ராசிக்கு வரப்பிரசாதமா இருக்கப்போகுது! -
1 டம்ளர் பச்சரிசி இருந்தா.. கார்த்திகை தீபத்துக்கு இந்த செட்டிநாடு கந்தரப்பம் செய்யுங்க.. -
ஆண்கள் என்னென்ன Skin Care Products யூஸ் பண்ணலாம்? விளக்கும் சரும நிபுணர்! -
பரணி தீபம் 2026 எப்போது? எத்தனை தீபம் ஏற்றணும்? வீட்டின் எந்தெந்த இடங்களில் தீபம் வைக்க வேண்டும்? -
டிசம்பரில் வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: 2027 ஜூன் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்! -
நாவூறும்.. ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் டிக்கா மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
மூச்சுத்திணறல் நுரையீரல் பிரச்சனை மட்டுமல்ல.. இதய நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
நவம்பர் இறுதியில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும், பணம் குவியும்! -
அரைச்சுவிட்ட சிக்கன் சால்னா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்..
முருங்கைக்காய் 'அந்த' விஷயத்துக்கு மட்டுமல்ல உங்களை அழகாக்கவும் உதவுமாம்... எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
Benefits of Drumstick: முருங்கைக்காய் பல தசாப்தங்களாக நம் உணவுமுறையின் ஒரு தவிர்க்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது. 'முந்தானை முடிச்சு' திரைப்படத்திற்கு பிறகு முருங்கைக்காயின் புகழ் பல மடங்கு அதிகரித்து விட்டது. இந்த மேலும் காய்கறி அதன் அத்தியாவசிய அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் மருத்துவ நன்மைகளுக்கு அறியப்படுகிறது.
முருங்கைக்காய் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதுடன் அழகு சம்பந்தமான பல நன்மைகளை வழங்குகிறது. சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட காய்கறி சருமத்திற்கும், கூந்தலுக்கும் எண்ணிலடங்கா நன்மைகளை வழங்குகிறது. இந்த பதிவில் முருங்கைக்காய் வழங்கும் சரும நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முகப்பருவை குணப்படுத்தும்
முருங்கையில் பூஞ்சைஎதிர்ப்பு பண்புகள் நிரம்பியுள்ளன, இது சரும நோய்களைக் கையாள்வதற்கு சரியான தீர்வாக இருக்கிறது. இதன் முக்கிய நன்மைகளில் ஒன்று பருக்கள், கொப்புளங்கள் மற்றும் புண்களைக் குறைக்கவும் சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. உங்கள் சருமத்தை உடனடியாக சுத்தம் செய்ய முருங்கை இலைகளைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் செய்யலாம். மேலும் முருங்கையில் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி போன்ற ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டிருக்கின்றன, அவை வயதான அறிகுறிகளை குறைக்கின்றன.
வீக்கத்தைக் குறைக்கிறது
இறுக்கமான மற்றும் பளபளப்பான சருமத்திதை அடைவதற்கான சிறந்த வழி, உங்கள் உணவில் அழற்சி எதிர்ப்பு உணவுகளைச் சேர்ப்பதாகும். முருங்கைக்காயில் இருக்கும் ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஐசோதியோசயனேட்டுகள் வீக்கத்தை எதிர்த்துப் போராடும் திறனைக் கொண்டுள்ளன.
உங்களை வீங்கியதாக உணர வைக்கக்கூடிய குறிப்பிட்ட சைட்டோகைன்களைத் தடுப்பதன் மூலம் முருங்கைக்காய் பயனுள்ளதாக இருக்கும்.
சரும கொலாஜன் உருவாக்கத்தை அதிகரிக்கும்
முருங்கைக்காயில் இயற்கையான கொலாஜனை உருவாக்க தேவையான வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது கொலாஜனை உறுதிப்படுத்துகிறது, தோல் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது. மேலும், இது உங்கள் சருமத்தை இறுக்கமாக்கும் திறந்த துளைகளைக் குறைக்க உதவுகிறது.
வயதாகும் அறிகுறிகளைத் தடுக்கிறது
முருங்கை எண்ணெய் அல்லது முருங்கைத் தூள் உங்கள் சருமத்திற்கு உடனடி பளபளப்பை வழங்குகிறது, இது சருமத்தை ஆரோக்கியமாக மாற்றும் மற்றும் மந்தமான தோற்றம் மற்றும் வறட்சியைக் குறைக்கிறது. இதன் மூலம் வயதான அறிகுறிகளைக் குறைத்து, அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காரணமாக ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தைத் தடுப்பதன் மூலம் சுருக்கங்களைக் குறைக்கிறது. மேலும், இதிலுள்ள சைட்டோகினின்கள் மற்றும் வைட்டமின் சி சரும தொய்வைத் தடுக்கிறது.
கூந்தல் அடர்த்தியை ஊக்குவிக்கும்
முருங்கைக்காயில் ஒமேகா 3 உள்ளது, இது முடியின் அடர்த்தியை அதிகரிகிறது, துளைகளை மூட உதவுகிறது, மேலும் உங்கள் தலைமுடியின் தடிமன் மற்றும் அமைப்பை மேம்படுத்தும் ஓவர் கோட்டாக செயல்படுவதன் மூலம் முடியின் ஊட்டச்சத்தை தக்கவைக்க உதவுகிறது.
முடி வளர்ச்சிக்கு உதுவுகிறது
முருங்கைக்காயில் பயோட்டின் உள்ளது, இது உச்சந்தலையில் ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்கிறது மற்றும் முடி செல்களின் நீண்ட ஆயுளுக்கு உதவுகிறது. மேலும் இதிலுள்ள வைட்டமின் ஏ, துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
முடியின் பளபளப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும்
முருங்கை உங்கள் தலைமுடிக்கு இயற்கையான கண்டிஷனர் ஆகும், ஏனெனில் இது இயற்கையான பெஹெனிக் அமில அளவைக் கொண்டுள்ளது. எனவே இது உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும், பொலிவாகவும் மாற்றுகிறது. இது உங்கள் தலைமுடியை மந்தமான, உடையக்கூடிய இழைகளிலிருந்து பாதுகாக்கிறது.



Click it and Unblock the Notifications

